அரசுப் பணியாளர் சங்கத்தின் முப்பெரும் விழா!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் சங்கத்தின் முப்பெரும் விழா சென்னையில், வள்ளுவர் கோட்டத்தில், 14.11.2026 அன்று நடந்தேறியது.

இவ்விழாவில் தமிழக மாண்புமிகு அமைச்சர் என். ஆனந்த் அவர்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் அவர்களும், சி.பி.ஐ. கட்சியின் திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன் எம்.பி. அவர்களும், ஏ.ஐ.டி.யு.சி.யின் தேசிய செயலர் வகிதாநிஜாம், ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க பொதுச்செயலர் த.லெனின், த.நா. ஏ.ஐ.டி.யு.சி.யின் துணைப் பொதுச்செயலர் அ.பாஸ்கர் மற்றும் அரசுப் பணியாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் இரா.சத்யமூர்த்தி அவர்களும், சங்க முன்னணித் தோழர்களும் பங்கேற்று உரை நிகழ்த்தினார்கள்.

முப்பெரும் விழா மூன்று அமர்வுகளாக ஒழுங்குபடுத்தப்பட்டு நடத்தப்பட்டது. காலை அமர்வில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தின் 45 ஆம் ஆண்டு விழாவாகவும், சங்கத்தன் சிறப்பு பேரவைக் கூட்டமாகவும் நடைபெற்றது.
அரசுப் பணியாளர் சங்கத்தின் 45வது அமைப்பு தின விழாவில், இச்சங்கத்தின் போராட்ட வரலாறுகள் பற்றியும், பெற்றெடுத்த சாதனைகள் பற்றியும் உரையாற்றப்பட்டது. க.பாலசுப்பிரமணியன் இயக்கவுரை ஆற்றினார்.
காலை அமர்வு இரண்டில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் சங்கத்தின இயக்கத் குரலாக 1981-லிருந்து வெளிவந்துகொண்டுள்ள, “பணியாளர் குரல்” இதழில், கொள்கைப் பிரகடனமாக பதிவு செய்யப்பட்ட, தலையங்கங்களின் தொகுப்பு, புத்தகமாக வெளியிடப்பட்டது.

1983-லிருந்து வெளிவந்த தலையங்கங்களின் தொகுப்பு நூலை, இச்சங்க முன்னாள் பொதுச்செயலாளர் க.அறிவாழி தொகுத்திருந்தார். இந்நூலை வெளியிட்டு,சிபிஐயின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் உரை நிகழ்த்தினார். சிபிஐ கட்சியின் திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே. சுப்பராயன், நூலைப் பெற்றுக்கொண்டு உரை நிகழ்த்தினார். பொருளாளர் த.முருகேசன் நன்றி கூறினார்.
மூன்றாவது அமர்வாக, அரசுப்பணியாளர் சங்கத்தின் இணைப்புச் சங்கமாக, தமிழகத்தில் உள்ள 12,525 ஊராட்சிகளில் பணிபுரியும் ஊராட்சிச் செயலர்கள் சங்கத்தின் ‘கோரிக்கை மாநாடு’, இச்சங்கத்தின் மாநிலத் தலைவர், ஜான் போஸ்கோ பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. இச்சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் வி.வேல்முருகன் இயக்கவுரை ஆற்றினார்.
தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறையின் மாண்புமிகு அமைச்சர், என். ஆனந்த் பங்கேற்று விழாப் பேருரை நிகழ்த்தினார்.
சி.பி.ஐ. கட்சியின் மாநிலச் செயலர் மு.வீரபாண்டியன், கே.சுப்பராயன் எம்பி. வகிதாநிஜாம்(ஏ.ஐ.டி.யு.சி), த.லெனின் (த.நா.ஒ.வா.இ.), அ.பாஸ்கர் (ஏ.ஐ.டி.யு.சி.) ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் சங்கத்தின் மேனாள் பொதுச்செயலாளர் பாலுச்சாமி, கோரிக்கைபற்றி விளக்க உரை நிகழ்த்தினார்.
இச்சங்க கோரிக்கைகளுள் முக்கிய மூன்று கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
-
- தமிழ்நாடு அரசின் கீழ் பணிபுரியும் காலமுறை ஊதியத்தின் கீழ், உள்ள பணியாளர்களுக்கு, 10 ஆண்டுகள் முடித்தவர்களுக்கு தேர்வு நிலையும், 20 ஆண்டுகள் பணிமுடித்தவர்களுக்கு சிறப்பு நிலையும் வழங்கி, உயர் ஊதியவிகிதம் வழங்கப்படுகிறது. ஊராட்சி செயலர்களுக்கும் தேர்வு நிலை, சிறப்புநிலை வழங்கிடல் வேண்டும்
- ஊராட்சி செயலர்களுக்கு, தற்போது, சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களுக்கு இணையாக, சிறப்பு ஓய்வூதியம் மாதம் ரூ.2000 மட்டுமே வழங்கப்படுகிறது. காலமுறை ஊதியத்தின் கீழ் உள்ள இப்பணியாளர்களையும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள த.நா. அரசின் உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியம் திட்டத்தில்” (TAPS) சேர்த்திட வேண்டும்.
- ஊராட்சி செயலர்களுக்கு, அரசுக் கருவூலம் மூலம் மாத ஊதியம் வழங்கப்பட வேண்டும்.
மாண்புமிகு அமைச்சர் அவர்களின் உரையில்,
ஊராட்சி செயலர்களின் மூன்று முக்கிய கோரிக்கைகள் பற்றி சங்கத் தலைவர்களும். சி.பி.ஐ. கட்சியின் மாநிலச் செயலாளர் அண்ணன் மு.வீரபாண்டியன் அவர்களும் பேசியுள்ளார்கள்.
இக்கோரிக்கைகள் குறித்த அறிவிப்பை அரசாணையாக வெளியிடுவதில் சாதகமான முடிவு கண்டிட, ஏஐடியுசி ஊராட்சிசெயலர்கள் சங்கங்களின் தலைவர்களோடும், துறையின் முதன்மைச் செயலாளரும் கூடி விரைவில் முத்தரப்புப் பேச்சு நடத்தி அரசாணையை வெளியிட தயாராக மாண்புமிகு அமைச்சர் அவர்கள் ஆயிரக்கணக்கான பணியாளர்களின் அரங்கம் அதிரும் கரவொலியோடு கூறினார்கள்.

முப்பெரும் விழாவின் முக்கிய முத்துகள்
♦ தமிழ்நாடு அரசுப்பணியாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் தோழர் இரா.சத்யமூர்த்தியின் கடுமையான உழைப்பிற்கும், தோழர் ஜான்போஸ்கோ பிரகாஷ் அவர்களின் உழைப்பிற்கும் கிடைத்த வெற்றியாக இம்மாநாடு அமைந்தது என்பது மிகையல்ல.
♦ சங்க மூத்த தோழர்கள் ஏ.இ. பாலுச்சாமி, க.அறவாழி, தர்மபுரி கிருஷ்ணன், எட்வர்டு ஜெயசீலன், பெரியசாமி, பி.செல்வராஜ் மற்றும் ஓய்வு பெற்ற தோழர்கள் பலர் கலந்துகொண்டு, மாநாட்டை சிறப்பித்தனர். அரசுப் பணியாளர் சங்கத்தின் இணைப்பு மற்றும் தோழமைச் சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
தொகுப்பு: இரா.சத்யமூர்த்தி