அறிக்கைகள்

கைதுகளால் போராட்டத்தை அடக்க முடியாது

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி எச்சரிக்கை

காந்தி பிறந்தநாளான அக்டோபர் – 2 ஆம் தேதி அன்று, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவி விலக வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெற்றது. இதில் இடதுசாரி மாணவர் அமைப்புகள் மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் கலந்துகொண்டனர். அவர்கள் அனைவரையும் டெல்லி காவல்துறை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கைது செய்தது.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான பி.சந்தோஷ் குமார், டெல்லி மாநிலச் செயலாளர் பேராசிரியர் தினேஷ் வர்ஷ்னே, அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் (ஏஐஎஸ்எஃப்) பொதுச்செயலாளர் தினேஷ் சீரங்கராஜ், ஏ.ஐ.எஸ்.ஏ. அமைப்பின் தேசியத் தலைவர் நேகா போரா உட்பட இடதுசாரி மாணவர், இளைஞர் அமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.

டெல்லி காவல்துறையின் அடக்குமுறைக்கு கடும் கண்டனம் தெரிவித்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, கைதுகளால் போராட்டத்தை அடக்கிவிட முடியாது என எச்சரித்தது. மேலும், “காந்தியையும், ஜனநாயகத்துக்கான அவரது போராட்டத்தையும், பொது வாழ்வில் நேர்மையையும் நினைவுகூரும் நாளில், வாக்குரிமையைப் பாதுகாக்கவும் ஜனநாயகத்தைக் காக்கவும் போராடுபவர்களை ஒடுக்க மோடி அரசு காவல்துறையைப் பயன்படுத்துகிறது. கைதுகளால் போராட்டத்தை அடக்க முடியாது. வாக்குத் திருடர் பதவி விலகியே தீர வேண்டும்” என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உறுதிபடத் தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button