தமிழ்நாடு முழுவதும் அக். – 1 இடதுசாரிக் கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி 01.10.2026 அன்று தமிழ்நாடு முழுவதும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) லிபரேசன், எஸ்.யு.சி.ஐ ஆகிய இடதுசாரிக் கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
இதில் பங்கேற்ற இடதுசாரித் தலைவர்கள், ‘வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம்’ (SIR) எனும் பெயரில் சுமார் 13 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதற்கு பிரதமர் மோடியும். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பொறுப்பேற்க வேண்டும். எஸ்ஐஆர் பணிகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். நீக்கப்பட்ட உண்மையான வாக்காளர்களை மீண்டும் சேர்க்க வேண்டும். தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் தற்போதைய முறைக்கு மாற்றாக, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோரைக் கொண்ட தேர்வுக்குழுவே தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் நடைமுறை மீண்டும் கொண்டுவரப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.
தென்சென்னை: தென்சென்னை மாவட்டம் எம்.ஜி.ஆர். நகரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத், மாவட்டச் செயலாளர் எஸ்.கே.சிவா, சிபிஐ (எம்.எல்) லிபரேசன் சார்பாக என்.ஜேம்ஸ், ஏ.எஸ்.குமார் உள்ளிட்ட தோழர்கள் கண்டன உரையாற்றினர்.

வடசென்னை: வடசென்னை மாவட்டம் தங்க சாலையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் துணைச் செயலாளர் நா.பெரியசாமி, மாவட்டச் செயலாளர் த.கு.வெங்கடேஷ் வேம்புலி, சிபிஐ (எம்.எல்) லிபரேசன் சுரேஷ், எஸ்.யு,சி.ஐ – சிவக்குமார், கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் செல்வா கார்த்திக் உள்ளிட்ட தோழர்கள் கண்டன உரையாற்றினர்.

ஈரோடு: ஈரோடு மாநகரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் டி.எம்.மூர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பி.பழனிசாமி ஆகியோர் கண்டன உரையாற்றினர். சுந்தர்ராஜன் தலைமை தாங்கினார்.

மத்தியசென்னை: மத்தியசென்னை மாவட்டத்தில் சாஸ்திரி பவன் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ.வாசுகி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் வகிதா நிஜாம், சிபிஐ (எம்.எல்) லிபரேசன் மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.மோகன் உள்ளிட்ட தோழர்கள் கண்டன உரையாற்றினர்.
கோவை: கோவையில் மாவட்ட ஆட்சியர் வளாகம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப் பொருளாளர் எம்.ஆறுமுகம் எக்ஸ்.எம்.எல்.ஏ., கோவை மாவட்டச் செயலாளர் சி.சிவசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபன், சிபிஐ (எம்.எல்) லிபரேசன் மணிகண்டன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.

தென்காசி: தென்காசி நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் டி.இசக்கித்துரை பிஏபிஎல் தலைமை தாங்கினார். மாவட்டப் பொருளாளர் டி.சுப்பையா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி.குணசீலன், எஸ்.அயூப்கான், சிபிஐ (எம்.எல்) லிபரேசன் மாவட்டச் செயலாளர் வேல்முருகன், மாநிலக் குழு உறுப்பினர் இளையராஜா ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் கிட்டப்பா அங்காடி முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் பி.எஸ்.மாசிலாமணி, மாவட்டச் செயலாளர் அ.சீனிவாசன் உள்ளிட்ட இடதுசாரித் தோழர்கள் கண்டன உரையாற்றினர்.

இராமநாதபுரம்: இராமநாதபுரத்தில் அரண்மனை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்கள் கலந்துகொண்டனர்.
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி – அம்பேத்கர் சிலை அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் ஏ.வி.சரவணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன், சிபிஐ (எம்.எல்) லிபரேசன் மத்தியக்குழு உறுப்பினர் பாலசுந்தரம் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மூன்று கட்சிகளின் மாவட்டச் செயலாளர்கள் ஜெய்சங்கர், ராமசாமி, கலியமூர்த்தி தலைமை தாங்கினர்.

மதுரை: மதுரையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.கே.சாமி, பா.ராஜலெட்சுமி, சி.தாமஸ், எம்.நந்தாசிங், எம்.பாலமுருகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கணேசன், ரமேஷ், ஸ்டாலின் மற்றும் சிபிஐ (எம்.எல்) லிபரேசன், எஸ்.யு.சி.ஐ தோழர்கள் கலந்துகொண்டனர். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.நரசிம்மன் தலைமை தாங்கினார்.

திருச்சி – மணப்பாறை: மணப்பாறையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சி.பி.ஐ. தெற்கு ஒன்றியச் செயலாளர் ராஜேந்திரன் சி.பி.எம். வட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமை தாங்கினர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் துணைச் செயலாளர் இந்திரஜித் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புறநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிதம்பரம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புறநகர் மாவட்டத் துணைச் செயலாளர் பழனிச்சாமி உள்ளிட்டோர் உரையாற்றினர்.

நாமக்கல்: நாமக்கல்லில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் க.அன்புமணி, சிபிஐ (எம்.எல்) லிபரேசன் கோவிந்தராஜ், வெங்கடேஷ் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.

வேலூர்: வேலூரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஐ மாவட்ட செயலாளர் ஜி.லதா, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சீனிவாசன், சிபிஐ (எம்.எல் மாவட்ட செயலாளர் எம்.சரோஜா ஆகியோர் தலைமை தாங்கினர். சிபிஎம் மாவட்ட செயலாளர் எஸ்.பி.சங்கரி, சிபிஐ மாநிலக்குழு உறுப்பினர் எல்.மணி, சிபிஐ (எம் எல்) லிபரேசன் மாவட்டச் செயலாளர் இரணியன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

அரியலூர்: அரியலூரில் அண்ணாசிலை அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் எம். இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் டி. தண்டபாணி ஆகியோர் தலைமை தாங்கி, கண்டன உரையாற்றினர். சிபிஐ மாவட்டப் பொருளாளர் ஜி.ஆறுமுகம், ஒன்றிய செயலாளர்கள் து.பாண்டியன், ஜி.மருதமுத்து, இ.முருகேஸ்வரி ஆகியோர் கலந்துகொண்டனர்.

திருவள்ளூர்: பொன்னேரி அம்பேத்கர் சிலை அருகில், சிபிஎம் பகுதி செயலாளர் ஆர்.இ. சேகர் தலைமையில், இடதுசாரி கட்சிகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் என்.எஸ்.பிரதாப் சந்திரன், ஜி. பாலன், மீஞ்சூர் ஒன்றியச் செயலாளர் பி.வி.செந்தில், விவசாய சங்க மாவட்டத் தலைவர் என்.ஜீவா, தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.கிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட தலைவர்களில் ஒருவரான கே.விஜயன் உள்ளிட்ட ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

இதேபோன்று தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் இடதுசாரிக் கட்சிகளின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.