தமிழகம்

கோவில் மனையில் குடியிருப்போர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய காத்திருப்புப் போராட்டம்

தமிழ்நாடு கோவில் மனையில் குடியிருப்போர் சங்கத்தின் சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய காத்திருக்கும் போராட்டம் 27.10.26 அன்று நடைபெற்றது.

கோவில் மனையில் குடியிருப்போர் மற்றும் கடைகள் வைத்திருப்பவர்களுக்கு, 1988 க்கு முன்பு இருந்த பகுதி முறையை கடைபிடிக்க வேண்டும், அரசாணை 85 அமல்படுத்த வேண்டும், 2000ம் ஆண்டு இந்து சமய அறநிலைத்துறை சட்டத்தின் புகுத்தப்பட்ட 34 ஏ,பி.சி, டி பிரிவுகளை ரத்து செய்ய வேண்டும், உயர்த்தப்பட்ட வாடகை நிலுவைத் தொகையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும், குடியிருப்பவரின் மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு, கழிவுநீர் இணைப்பு சேவைகள் பெறுவதை உறுதி செய்ய வேண்டும்.

அண்டை மாநிலங்களைப் போல இனாம் ஒழிப்பு சட்டத்தில் திருத்தம் செய்து, 1988 இல் பட்டா பெற இயலாதவர்கள் தற்போது பெற்றுக்கொள்ள வகை செய்துள்ளது போன்று, தமிழ்நாட்டிலும் 30/1963 சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது.

சென்னை: சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், மாநிலத் தலைவர் வி,ஏ.பாலசுப்பிரமணியம், மாநிலப் பொருளாளர் எஸ்.ஏழுமலை ஆகியோர் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தை, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தொடங்கி வைத்தார். திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் க.மாரிமுத்து கண்டன உரையாற்றினார். இதில் ஆர்.பூங்கொடி எக்ஸ் எம்.சி, ஏ.வாசு எக்ஸ் எம்.சி, கே.மணி ஆகியோர் பங்கேற்றனர்.

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் பரசுராமன் தலைமையில்சிபிஐ செங்கல்பட்டு மாவட்டச் செயலாளர் ராஜ்குமார், ஏஐடியுசி தேவராஜ், மூர்த்தி, எஸ்.ஆர்.பெருமாள், எஸ்.குமார் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். மாநிலப் பொருலாளர் எஸ்.ஏழுமலை போராட்டத்தை முடித்து வைத்தார்.

காங்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளையார்பாளையத்தியில், சங்கத்தின் மாநிலப் பொருளாளர் எஸ்.ஏழுமலை தலைமையில், சிபிஐ காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் பி.வி.சீனிவாசன், என்.சந்திரன்,பி.குமரவேல், பி.கோபால் உள்ளிட்டோர் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில், கோவில் மனையில் குடியிருப்பு சங்க தலைவர் பக்கிரிச்சாமி, செயலாளர் மகேந்திரன், பொருளாளர் செம்பை கோவிந்தராஜ், சிபிஜ மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் கலியபெருமாள், பட்டுக்கோட்டை நகரச் செயலாளர் சுதாகர் மற்றும் சுகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button