தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்!
மாணவர், இளைஞர், மாதர் அமைப்பினர் தொடர் போராட்டம்

எஸ்,ஐ.ஆர்.என்ற பெயரில், இந்திய நாட்டின் 13 கோடி வாக்காளர்களின் வாக்குரிமையை, பறித்த தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும்,
டெல்லியில் ஜனநாயக முறையில் போராடிய மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட போராளிகள் மீது, ராணுவத்தைக் கொண்டு அடக்கு முறையை கட்டவிழ்த்து விட்டதை கண்டித்தும்,
தமிழ்நாடு முழுவதும் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், இந்திய தேசிய மாதர் சம்மேளனம், தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கங்களின் சார்பில் கோயம்புத்தூர், திருப்பூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், வடசென்னை, தென் சென்னை, திருச்சி, திருவாரூர், தஞ்சாவூர், தூத்துக்குடி, மதுரை, செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, தேனி, நாகப்பட்டினம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேலும் மாணவர் பெருமன்றம் இளைஞர் பெருமன்றம் சார்பில் தருமபுரி, கடலூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ரயில் நிலைய முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
