அமெரிக்காவின் ஏகாதிபத்திய போர் வெறியைக் கண்டித்து சிபிஐ தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்

வெனிசுலா மீது தாக்குதல் நடத்தி அந்நாட்டு அதிபர் மதுரோவை அமெரிக்க அரசு கடத்திச் சென்று சிறை வைத்துள்ளது. அமெரிக்காவின் ஏகாதிபத்திய போர் வெறியைக் கண்டித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக 06.01.2026 அன்று தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

சென்னையில் அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம், மத்திய கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் இரா. முத்தரசன் தலைமையில் நடைபெற்றது. மாநிலத் துணைச் செயலாளர் எம்.ரவி, தேசியக்குழு உறுப்பினர் ஜி.ஆர். ரவீந்திரநாத், மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் க.பாரதி, மாவட்டச் செயலாளர்கள் எஸ்.கே.சிவா, வெங்கடேஷ் வேம்புலி, வரதன், ராஜ்குமார், கஜேந்திரன், மாணவர் பெருமன்ற மாநிலத் தலைவர் க.இப்ராகிம், சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஏ.ஆர்.சாந்தி உட்பட ஏராளமான தோழர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
மயிலாடுதுறையில் கட்சியின் மாவட்டச் செயலாளர் அ.சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் கண்டன உரையாற்றினர். ஆர்.இடும்பையன், எஸ்.கிருஷ்ணமூர்த்தி, கே.எஸ்.சிவராமன், கே.ராமன், வீ.நீதிசோழன், ஆர்.தமிழ்மலர் உள்ளிட்ட நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.

சேலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது. மாவட்டச் செயலாளர் ஏ. மோகன் தலைமை தாங்க, மாநிலக்குழு உறுப்பினர் ஏ.கந்தன், ஏஐஎஸ்எப் மாநிலச் செயலாளர் பா.தினேஷ், ஏஐஒய்எப் மாவட்டச் செயலாளர் இரா.ரமேஷ் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.

வெனிசுலா மீது தாக்குதல் நடத்தி அந்நாட்டு அதிபர் மதுரோவை அமெரிக்க அரசு சிறைபிடித்துள்ளது. இந்த அடாவடியைக் கண்டித்து 06.01.2026 அன்று கோவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) ஆகிய இடதுசாரி கட்சிகள் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.

நெல்லையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாநில நிர்வாக குழு உறுப்பினர் டி.இசக்கிதுரை, மாவட்டச் செயலாளர் ஆர் சடையப்பன் மற்றும் ஏ.சேதுராமலிங்கம், ஆர்.ரெங்கன், கே.முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.
விருதுநகர் மாவட்டத்தில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, விருதுநகர் ஆகிய நான்கு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இவற்றில், மாநில செயற்குழு உறுப்பினர் தி.ராமசாமி எக்ஸ் எம்.எல்.ஏ, மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் பி.லிங்கம் எக்ஸ் எம்.பி, மாநிலக்குழு உறுப்பினர்கள் வி.அழகிரிசாமி எக்ஸ் எம்.பி, வி.ரவி, வி.பாலமுருகன், மாவட்டச் செயலாளர் எஸ்.செந்தில்குமார் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.
தூத்துக்குடியில் மாவட்டச் செயலாளர் பி.கரும்பன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில துணைச் செயலாளர் என்.பெரியசாமி, மாவட்ட துணை செயலாளர் வி.பாலமுருகன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திரளான தோழர்கள் கலந்துகொண்டனர்.
தஞ்சாவூரில் பனகல் கட்டடம் அருகே இடதுசாரிகள் பொதுமேடை சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, சிபிஐ(எம்.எல்) லிபரேசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தமிழ்நாடு மக்கள் விடுதலை இயக்கம், சிபிஐ (எம்.எல்) மக்கள் விடுதலை, மக்கள் அதிகாரம், ம.க.இ.க உள்ளிட்ட இடதுசாரி அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டன.

ஒரத்தநாடு ஒன்றிய குழு சார்பாக பாப்பநாடு பேருந்து நிலையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வாசு இளையராஜா தலைமை தாங்கினார். சீனி முருகையன், கல்யாணசுந்தரம், கோசிமின், ராமலிங்கம், சிவசிதம்பரம், அய்யாக்கண்ணு, மாரிமுத்து, சின்னதம்பி உள்ளிட்டோர் உரையாற்றினர்.

தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் கோ.சக்திவேல் தலைமை தாங்கினார். மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் முத்து உத்திராபதி, மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.இராமச்சந்திரன், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் வெ.சேவையா உள்ளிட்டோர் உரையாற்றினர்.
தென்காசியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் த.இசக்கித்துரை தலைமை தாங்கினார். சிபிஐ மாநிலக் குழு உறுப்பினரும் கலை இலக்கிய பெருமன்றத்தின் மாநில பொதுச்செயலாளருமான டாக்டர் த.அறம் கண்டன உரையாற்றினார்.
ஈரோட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஈரோடு தெற்கு மாவட்டச் செயலாளர் பிரபாகரன் தலைமை தாங்கினார். கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஸ்டாலின் குணசேகரன் மற்றும் திருநாவுக்கரசு, துளசிமணி, சின்னசாமி, மணியன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் க.அன்புமணி தலைமை தாங்கினார். மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் த.லெனின், மாநிலக்குழு உறுப்பினர் அ.அசரப் அலி மற்றும் எஸ்.ராமகிருஷ்ணன், பி.தனசேகரன், எஸ்.சுகுமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

கடலூர், ஜவான்ஸ் பவன் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஆர்.கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். மாநகரச் செயலாளர் டி.நாகராஜ், துணைச் செயலாளர் ஜி.மணிவண்ணன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் குளோப், சுந்தர் ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அரியலூரில் மாவட்டச் செயலாளர் கே.நடராஜன் தலைமை தாங்கினார். மாவட்டப் பொருளாளர் ஜி.ஆறுமுகம், ஒன்றியச் செயலாளர்கள் து.பாண்டியன், ஜி.மருதமுத்து, இ.முருகேஸ்வரி, ஆர். தனசிங் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
தேனி பழைய பேருந்து நிலையம் அருகே மாவட்டச் செயலாளர் கி.பெருமாள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திரளான தோழர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
சின்னமனூர் ரவுண்டானா அருகே ஒன்றியச் செயலாளர் வே.ஜெய்ஹிந்த் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் இரா.தமிழ் பெருமாள் மற்றும் அ.முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக சாம் வளவன், தமிழ் புலிகள் கட்சியின் சார்பாக சா.பாண்டியன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினார்.
சென்னை, சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் மற்றும் இந்திய கலாச்சார நட்புறவுக் கழகம் சார்பாக 04.01.2026 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாணவர் பெருமன்றத்தின் மாவட்டச் செயலாளர் மணிகண்டன் தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர்கள் சச்சின், அன்பு, இஸ்கப் மாநிலச் செயலாளர் வித்யா, மாநிலக் குழு உறுப்பினர் திவ்யா ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

இதேபோன்று தமிழ்நாடு முழுவதும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.