தமிழகம்

ஏஐடியுசி 106ஆம் ஆண்டு அமைப்பு தினம்

தமிழ்நாடு முழுவதும் கொண்டாட்டம்

இந்தியத் தொழிலாளி வர்க்கத்தின் முதல் தொழிற்சங்கமான ஏஐடியுசியின் 106ஆம் ஆண்டு அமைப்பு தினம் தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.

கோவை: கோவை காட்டூரில் உள்ள ஏஐடியுசி அலுவலகத்தில் சங்கக் கொடியை ஏற்றியும், மறைந்த தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா அவர்களின் 6ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

இதற்கு வங்கி ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநிலச் செயலாளர் எம்.வி.ராஜன் தலைமை தாங்கினார். ஏஐடியுசி மாநிலச் செயலாளர் எம்.ஆறுமுகம் எக்ஸ்.எம்.எல்.ஏ கொடி ஏற்றினார். மாவட்ட ஏஐடியூசி கவுன்சில் செயலாளர் சி.தங்கவேல் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார். கட்சியின் மாவட்டச் செயலாளர் சி.சிவசாமி, மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் சாந்திசந்திரன், கே.வெங்கடாசலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஜீவா இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்குக் கட்சியின் மாவட்டத் துணைச் செயலாளர் ஜே.ஜேம்ஸ் தலைமை தாங்கினார். மேற்கண்ட தலைவர்களுடன் மாவட்ட துணைச் செயலாளர் எம்.குணசேகர், கே.ஆர்.தங்கராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட கட்சி அலுவலக வாயிலில் ஏஐடியுசி கொடியை, நாகை நாடாளுமன்ற உறுப்பினர் வை.செல்வராஜ் ஏற்றி, குருதாஸ் தாஸ்குப்தா திருவுருவப் படத்திற்கு மலைமாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தினார். இதில் கட்சியின் மாவட்டச் செயலாளர் கேசவராஜ், ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் சந்திரசேகர ஆசாத், துணைச்செயலாளர் பழக்கடைச் செல்வம், மாவட்டத் தலைவர் ஜே.குணசேகரன், மாவட்டக் குழு உறுப்பினர் வீ.தர்மதாஸ் ஆகியோர் புகழஞ்சலி செலுத்தினார்கள்.

தருமபுரி: தருமபுரி தொலைபேசி நிலையம் அருகில், ஏஐடியூசி மாவட்ட துணைத் தலைவர் ஆர்.சுதர்சனன் சங்கக் கொடியை ஏற்றினார். இதில் ஏஐடியூசி மாவட்டப் பொதுச் செயலாளர் கே.மணி, கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர்கள் எஸ்.சின்னசாமி, எம்.மாதேஸ்வரன், இண்டூர் வட்டாரச் செயலாளர் மாது, போக்குவரத்து மண்டலப் பொதுச் செயலாளர் சி.நாகராசன், உள்ளாட்சிப் பணியாளர் சங்க மாவட்ட தலைவர் மனோகரன், தூய்மைப் பணியாளர் சங்க மாவட்டச் செயலாளர் செல்வி, கட்டடச் சங்க விஜயா, ஏஐஒய்எப் எம்.நவீன்குமார், ஒடுக்கப்பட்டோர் சுப்ரமணி, ஆஷா சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.மேனகா, என்எப்டிஇ முனியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அம்பை: அம்பாசமுத்திரம் விக்ரமசிங்கபுரத்தில் குருதாஸ் தாஸ்குப்தா அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு நாள் மற்றும் ஏஐடியுசியின் 106ஆம் ஆண்டு அமைப்பு தினம் செங்கொடி ஏற்றிக் கொண்டாடப்பட்டது.

தஞ்சை: தஞ்சாவூர் மாவட்ட அலுவலகம் முன்பு, மாவட்ட தலைவர் வெ.சேவையா தலைமையில், கொடியினை ஏஐடியுசி தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் சி.சந்திரகுமார் ஏற்றினார். குருதாஸ் தாஸ்குப்தா படத்திற்கு, ஏஐடியூசி மாநிலச் செயலாளர் ஆர்.தில்லைவனம் அஞ்சலி செலுத்தினார்.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் தஞ்சாவூர் புறநகர் கரந்தை கிளை, ஜெபமாலைபுரம் தஞ்சாவூர் நகர் கிளை, திலகர் திடல் மாலை நேர காய்கறி அங்காடி, தமிழ்நாடு நுகர்வோர் பொருள் வாணிபக் கழக மண்டல அலுவலகம், கட்டுமானம், ஆட்டோ நிறுத்தம் ஆகிய இடங்களில் கொடியேற்றப்பட்டது. நிகழ்வில் ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் துரை.மதிவாணன், தமிழ்நாடு பண்ணைசங்க மாநிலத் துணைத் தலைவர் தி.திருநாவுக்கரசு உள்ளிட்டோர் கலந்து கொன்டனர்.

மாவட்டத்தில் பாபநாசம், கும்பகோணம், திருப்பனந்தாள், பாப்பாநாடு, தொண்டாராம்பட்டு கட்டுமானக் கிளைகள் உள்ளிட்டுப் பல்வேறு இடங்களில் கொடியேற்றப்பட்டது.

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட ஏஐடியூசி 106-ஆம் ஆண்டு அமைப்பு தினக் கருத்தரங்கம் ஏஐடியூசி வரலாறும் இன்றைய தொழிலாளர்கள் நிலையும் என்ற தலைப்பில், திருச்செங்கோடு கட்சி அலுவலகத்தில் ஏஐடியூசி மாவட்டப் பொதுச் செயலாளர் பி.தனசேகரன் தலைமையில் நடைபெற்றது. கட்டடச் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.குமார், சைசிங் சங்கத் தலைவர் கே.பி.ராமலிங்கம் ஆகியோர் முன்னிலையில், ஏஐடியூசி மாநிலச் செயலாளர் எஸ்.சின்னச்சாமி சிறப்புரை ஆற்றினார். அரசு போக்குவரத்துக் கழகம் என்.முருகராஜ், ஏஐடியூசி மாவட்டச் செயலாளர் எஸ்.ராமகிருஷ்ணன், வி.தொ.ச மாவட்டச் செயலாளர் சி.ஜெயராமன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

திருச்சி மாநகர்: திருச்சி மண்ணச்சநல்லூர் கடைவீதியில், ஏஐடியுசி கட்டடச் சங்க ஒன்றிய தலைவர் ஞானசேகரன் தலைமையில், மாநிலத் துணைத் தலைவர் க.சுரேஷ், மாவட்டச் செயலாளர் செல்வகுமார், தலைவர் முருகன், ஏஐடியுசி மாவட்ட தலைவர் நடராஜா உள்ளிட்டோர் உரையாற்றினர்.

திருச்சி 23 வது வார்டில் ஆட்டோ தொழிற்சங்கத் தலைவர் துரைராஜ் தலைமையிலும், மணப்பாறையில் ஆட்டோ சங்க மாவட்டத் தலைவர் த.இந்திரஜித் தலைமையிலும்,

திருவெறும்பூரில் பெல் ஆலைவாயிலில் பொதுச் செயலாளர் லோகநாதன் தலைமையிலும், சிறுகடை வியாபாரிகள் சங்கம் சார்பில் தெப்பக்குளம் நந்தி கோவில் தெருவில் செயலாளர். அன்சர்தீன் தலைமையிலும், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக மலைக்கோட்டை கிளை சார்பில் தலைவர் விக்கிரமாதித்தன் தலைமையிலும், எடமலைப்பட்டி புதூரில் வேன் ஸ்டாண்ட் கௌரவத் தலைவர் சரவணன் தலைமையிலும், சோமரசம்பேட்டையில் கட்டடச் சங்க மாவட்ட துணைத் தலைவர் மருதாம்பாள் தலைமையிலும் சங்கக் கொடி ஏற்றப்பட்டது.

அரியலூர்: அரியலூரில் நகராட்சி அலுவலகம் முன்பு, சுகாதாரத் தொழிலாளர் சங்கச் செயலாளர் ரெ.நல்லுசாமி முன்னிலையில், சங்கத் தலைவர் டி.தண்டபாணி கொடி ஏற்றினார். ஏஐடியுசி மாவட்ட அலுவலகத்தில் கொடியை, கட்சியின் மாவட்டப் பொருளாளர் ஜி.ஆறுமுகம் ஏற்றினார்.

கரூர்: கரூர் மாவட்டத்தில் ஏஐடியுசி மாவட்டத் தலைவர் கே.குப்புசாமி கொடியேற்றினார். இதில் மாவட்டச் செயலாளர் ஜி.பி.எஸ்.வடிவேலன், துணைத் தலைவர் ஆர்.அறிவழகன், துணைச் செயலாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் உரையாற்றினார்கள். சிபிஐ மாவட்டச் செயலாளர் கே.கலாராணி குருதாஸ் தாஸ்குப்தா படத்திற்கு அஞ்சலி செலுத்தினார்.

தென்சென்னை: தென்சென்னை ஏஐடியுசி மாவட்ட அலுவலகம் அசோக் நகர் ஜீவா இல்லத்தில், ஏஐடியுசி கௌரவத்தவைவர் எஸ்.ஏழுமலை கொடி ஏற்றினார். இதில் மாவட்ட பொருளாளர் ஆர்.விஜயகுமார், டி.சி.கே.சுந்தரம் செங்கொடி ஆட்டோ சங்க தலைவர் எம்.ரங்கநாதன், செயலாளர் டி.சுப்பிரமணி, பொருளாளர் கோடம்பாக்கம் எல்.மாணிக்கம், டி.பழனி, சைதை முனியம்மாள். புலம்பெயர் தொழிலாளர் சங்க அமைப்பாளர் காரம்பாக்கம் பத்மாவதி ஜெயராஜ் உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.

செங்கல்பட்டு: மறைமலைநகர் செக் பாயிண்ட் ஏஎல்எஸ் தொழிற்சங்கம் சார்பில் ஆலை வாயில் முன்பு, சங்கச் செயலாளர் ஜி.தரணி தலைமையில், மாவட்டப் பொதுச் செயலாளர் எம்.ஜஹாங்கீர் ஏஐடியுசி கொடி ஏற்றினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button