உலக செய்திகள்

கியூபா தனியாக இல்லை!

உலகளாவிய கையெழுத்து இயக்கத்திற்கு உலக தொழிற்சங்க சம்மேளனம் அறைகூவல்

கியூபா மீது அமெரிக்கா பொருளாதார மற்றும் அரசியல் அழுத்தங்களை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. தற்போது கியூப புரட்சியின் தளபதிகளில் ஒருவரும், பிடல் காஸ்ட்ரோவின் தம்பியும், முன்னாள் அதிபர், முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சருமான ராவுல் காஸ்ட்ரோ (வயது 94) மீது, அமெரிக்கா குற்றவியல் வழக்கு பதிவு செய்துள்ளது.

1996ல் மியாமியை அடிப்படையாகக் கொண்ட கியூபா எதிர்ப்பு அமைப்பான Brothers to the Rescue இயக்கிய இரண்டு சிறிய விமானங்களை கியூபா விமானப்படை சுட்டு வீழ்த்தியது. அந்தச் சம்பவத்தில் நால்வர் உயிரிழந்தனர்; அவர்களில் மூவர் அமெரிக்கர்கள் என்று அமெரிக்கா கூறுகிறது. அந்நேரத்தில் ரவுல் காஸ்ட்ரோ கியூபாவின் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்ததால், அமெரிக்க குடிமக்களை கொல்ல சதி செய்தது, கொலை குற்றச்சாட்டு, விமானங்களை அழித்தது என்று அவர் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்துள்ளது.

அத்து மீறி ஈரானுக்குள் புகுந்து அந்நாட்டின் உச்ச தலைவர் கொமேனியை படுகொலை செய்தது. வெனிசுலாவிற்குள் நுழைந்து அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா ஃபுளோரஸ் ஆகியோரை கைது செய்தது. இது போன்ற ஒரு கொடுஞ்செயலுக்கு கியூபைவை ஆட்படுத்தி, கியூபாவின் இறையாண்மையை சீரழிக்கும் நோக்கத்தில் ராவுல் காஸ்ட்ரோவை குறிவைத்துள்ளது.

இந்நிலையில் கியூபாவுடன் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் உலக தொழிற்சங்க சம்மேளனம் கையெழுத்து இயக்கத்திற்கான அழைப்பை விடுத்துள்ளது.

இணைய வழியாக கையொப்பமிட இயல்பவர்கள் https://www.firmoporcuba.com/print இணைய பக்கத்தில் உள்ள இணைப்பு வழியாக அனுப்பவும், அந்த இணைப்பை பகிரவும் வேண்டும்.

அதே இணைய பக்கத்தில் உள்ள படிவத்தை தேவையான பிரதிகள் எடுத்து கையொப்பங்களைப் பெற்று, அதனை ஸ்கேன் செய்து contact@firmoporcuba.com மற்றும் wftunorth@lists.mayfirst.org ஆகிய மின்னஞ்சல் முகவரிக்கும், ஏஐடியுசி தலைமைக்கு aituchq@gmail.comவழியாக ஏஐடியுசி தேசிய தலைமைக்கும், tnaituc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தமிழ்நாடு ஏஐடியுசிக்கும் அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று தமிழ்நாடு ஏஐடியூசி பொதுச்செயலாளர் ம.இராதாகிருஷ்ணன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

சென்னையில் கையெழுத்து இயக்கம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் சம்மேளனம் நிர்வாகக் குழுக் கூட்டம் 2026 மே 25 அன்று சென்னையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் “கியூபா தனியாக இல்லை” என்ற உலகளாவிய கையெழுத்து இயக்கத்தின் ஒரு பகுதியாக, கியூபாவிற்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.

பின்னர் சேகரிக்கப்பட்ட கையெழுத்துப் படிவம் ஏஐடியூசி தேசியச் செயலாளர் டி.எம்.மூர்த்தி, தமிழ்நாடு மாநிலப் பொதுச் செயலாளர் எம்.ராதாகிருஷ்ணன் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button