Uncategorizedதமிழகம்

வேலை உரிமையை பறிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து இரயில் முற்றுகை

தமிழ்நாடு முழுவதும் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் போராட்டம்

தமிழ்நாட்டில் உள்ள இரயில்வே, வங்கி, இன்சூரன்ஸ், பிஎஸ்என்எல் உள்ளிட்ட ஒன்றிய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் 1 லட்சம் இடங்களை பறித்து, தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு துரோகம் செய்யும் ஒன்றிய அரசை கண்டித்தும் தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்க வலியுறுத்தியும், இரயில்வே, வங்கி, தனியார்துறையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த சட்டம் நிறைவேற்று, பொத்துறை நிறுவனங்களை விற்காதே, ஒன்றிய மற்றும் மாநில அரசுக்காலிப் பணியிடங்களை உடனே நிரப்பு, முதலாளிக்கு ஆதரவான புதிய தொழிலாளர் சட்டங்களை திரும்பப்பெறு, ஒப்பந்த மற்றும் அவுட்சோர்சிங் முறையை ரத்து செய் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு முழுவதும் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில், 5.1.2026 அன்று ரயில் நிலையங்களை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஏராளமான இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

தர்மபுரியில் மாவட்டச் செயலாளர் எம்.நவீன் குமார், மாவட்டத் தலைவர் வெங்கடேசன் தலைமையில், மாநிலச் செயலாளர் க.பாரதி பங்கேற்றார்.

தேனியில் மாவட்ட செயலாளர் கே.மணிகண்டன், மாவட்டத் தலைவர் விக்னேஸ்வரன் தலைமையில், மாநிலத் தலைவர் இரா.தமிழ் பெருமாள் உரையாற்றினார்.

நாமக்கல் வஞ்சிபாளையத்தில் மாவட்டச் செயலாளர் சாதிக் தலைமையில், மாணவர் பெருமன்ற மாநிலச் செயலாளர் பா.தினேஷ் உரையாற்றினார்.

ராணிப்பேட்டை அரக்கோணத்தில் மாவட்டத் துணைத் தலைவர் ஆ.பிரகாஷ் தலைமையில், மாணவர் பெருமன்ற மாநிலத் தலைவர் க.இப்ராஹிம் கலந்து கொண்டார்.

வடசென்னை கொருக்குப்பேட்டையில் மாவட்டச் செயலாளர் எம்.காவிரிச்செல்வம், கோட்டி சுரேஷ் தலைமையில் முற்றுகையிட்டனர்.

விருதுநகரில் மாவட்ட செயலாளர் லி.பகத்சிங், மாவட்டத் தலைவர் தினேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது.

ஈரோட்டில் மாநிலத் துணைச் செயலாளர் எம்.சுரேந்தர், மாநில நிர்வாக குழு உறுப்பினர் ஜி.கல்யாணசுந்தரம் தலைமையில் நடைபெற்றது.

கோவையில் மாவட்டச் செயலாளர் மௌ.குணசேகர், மாவட்டத் தலைவர் அபிமன் தலைமையில் நடைபெற்றது. மாநிலத் துணைச் செயலாளர் கலை அஸ்வினி உரையாற்றினார்.

மதுரை புறநகர் திருமங்கலத்தில் மாவட்டச் செயலாளர் கா.கிருஷ்பாக்கியம் தலைமையில் நடைபெற்றது.

தூத்துக்குடி கோவில்பட்டியில் மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமையில், மாநிலத்துணைத் தலைவர் அ.ரஞ்சனிகண்ணம்மா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சேலம் ஜங்ஷனில் மாவட்டச் செயலாளர் இரா.ரமேஷ் தலைமையில் நடைபெற்றது.

திருப்பூர் மாநகரில் மாவட்டச் செயலாளர் ஆ.அரவிந்த்குமார், மாவட்டத் தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்றது.

திருப்பூர் புறநகரில் மாவட்டச் செயலாளர் எஸ்.தெய்வசிகாமணி, மாவட்டத் தலைவர் காளீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

திருப்பத்தூரில் மாநிலக் குழு உறுப்பினர் முருகேசன் தலைமையில் நடைபெற்றது.

விழுப்புரத்தில் மாவட்டச் செயலாளர் சந்துரு தலைமையில் நடைபெற்றது.

கடலூர் பண்ருட்டியில் மாவட்டச் செயலாளர் எம்.மோகன் தலைமையில் நடைபெற்றது.

அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட அமைப்பாளர் ஆர்.தமிழ்மணி தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறையில் மாவட்டச் செயலாளர் ஜான்சன் தலைமையில் நடைபெற்றது.

நாகப்பட்டினத்தில் மாவட்டச் செயலாளர் ச.சந்திரமோகன், மாவட்டத் தலைவர் மாரி கார்த்திகேஷன் தலைமையில் நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டத்தில் மாவட்டச் செயலாளர் கோ.சரவணன், மாவட்டத் தலைவர் எஸ்.பாலமுருகன் தலைமையில் நடைபெற்றது.

தஞ்சை வடக்கு கும்பகோணத்தில் மாவட்ட செயலாளர் ஆர்.மாதா மணி தலைமையில் நடைபெற்றது.

தஞ்சை தெற்கு மாவட்டத்தில் மாநிலப் பொருளாளர் க.காரல் மார்க்ஸ் தலைமையில் நடைபெற்றது.

திருச்சி ஜங்ஷனில் மாநிலத் துணைத் தலைவர் எம்.செல்வகுமார், புறநகர் மாவட்டச் செயலாளர் தமிழரசன் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல்லில் மாவட்டச் செயலாளர் இரா.வினோத் குமார் தலைமையில் நடைபெற்றது.

புதுக்கோட்டையில் மாவட்டச் செயலாளர் மாரிமுத்து தலைமையில் நடைபெற்றது.

மத்திய சென்னை கடற்கரை இரயில் நிலையத்தில் மாவட்ட அமைப்பாளர் இம்ரான் தலைமையில் நடைபெற்றது.

திருநெல்வேலியில் மாவட்டத் தலைவர் கே.முத்துகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் சுரேஷ் தலைமையில் நடைபெற்றது.

தென்காசியில் மாவட்டச் செயலாளர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button