சண்டிகரில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 25வது பேராயம்


இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 25ஆவது பேராயம் சண்டிகரில் ஞாயிறன்று, எழுச்சிமிகு பேரணி, பொதுக்கூட்டத்துடன் தொடங்கியது. இதில் பேசிய இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா, “பாஜகவை அதிகாரத்திலிருந்து அகற்றுவதே உடனடி நோக்கம், வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைத்துப் போராட்டம் நடத்தப்படும்” என்றார்.
நேற்று பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 800க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்ற பிரதிநிதிகள் மாநாடு தொடங்கியது. கட்சியின் மூத்த தலைவர் பூபிந்தர் சான்பர் கட்சிக் கொடியை ஏற்றிவைத்தார். பொதுச்செயலாளர் டி.ராஜா தொடங்கிவைத்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி, சிபிஐ(எம்-எல்) லிபரேஷன் தீபங்கர் பட்டாச்சார்யா, பார்வர்டு பிளாக், ஆர்எஸ்பி உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்களும் மாநாட்டை வாழ்த்திப் பேசினர்.




