
அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ள வன்னி அரசு, ஷாஜகானுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்துகளை தெரிவித்துள்ளது.
இது குறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சரவையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வன்னியரசு அவர்களும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியைச் சேர்ந்த ஷாஜகான் அவர்களும் அமைச்சர்களாக இன்று பொறுப்பேற்றுள்ளனர்.
புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ள வன்னியரசு மற்றும் ஷாஜகான் ஆகிய இருவருக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.