இ-பேப்பர்

NOV 07 – NOV 13

NOV 07 – NOV 13 Page 1

NOV 07 – NOV 13 Page 1
மொழி வழி மாநிலம் காத்து நிற்போம்; மாநில உரிமைகளுக்கு குரல் கொடுப்போம் - கே.பாலகிருஷ்ணன்

மொழி வழி மாநிலம் காத்து நிற்போம்; மாநில உரிமைகளுக்கு குரல் கொடுப்போம் - கே.பாலகிருஷ்ணன்

இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தில் நூறாண்டு வரலாற்று காலத்தில் அது சாதித்த சாதனை கள் ஏராளம். நாட்டு விடுதலைக்கு பின்னர் மொழி அடிப்படையிலான மாநிலங்கள் அமைவதற்கான போராட்டத்தை முன்னெடுத்து சாதித்தது மிக முக்கிய சாதனைகளில் ஒன்றாகும். பிரிட்டிஷ் அரசு பல மாநிலங்களாக இந்தியாவை பிரித்திருந்தாலும் அவர்களது நோக்கமெல்லாம் இந்திய மக்களை அடக்கி சுரண்டி கொள்ளை அடிப்பதையும், தனது ஆட்சி அதிகாரத்தை நீடிப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டதாகும். இதன்  அடிப்படையிலேயே ஒன்றாக இருந்த வங்க மாநி லத்தை இரண்டாகப் பிரித்து அறிவித்தது. வங்க மக்கள்  மத்தியில் தீவிரடைந்து வரும் விடுதலை போராட்டத்தை முறியடிக்கவும், இந்து – முஸ்லீம் என்ற மத மோதலை உருவாக்கி குளிர்காயும் நோக்கோடும் பிளவினை நிறைவேற்றியது. ஆனால் ஒன்றுபட்ட வங்க மக்களின் போராட்டம், அவர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் நடந்த மக்கள் போராட்டத்தின் விளை வாக பிரிட்டிஷ் அரசு பின் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பிரிந்த வங்கம் மீண்டும் ஒன்றிணைந்ததுவங்கப் பிரிவினை எதிர்ப்பு கிளர்ச்சிக் குப் பின்னர் காங்கிரஸ் கட்சி இந்திய மக்களின் மொழி உணர்வை கணக்கில் எடுத்துக் கொண்டு சில முக்கிய மான முடிவுகளை மேற்கொண்டது. 1920ஆம் ஆண்டு  நாக்பூரில் நடைபெற்ற அகில இந்திய மாநாட்டில் காங்கிரஸ் கட்சியின் மாநில கமிட்டிகளை மொழிவழி அடிப்படையில் அமைப்பது என தீர்மானித்தது மட்டு மின்றி அதற்கான உரியசட்டத் திருத்த விதிகளையும் மேற்கொண்டது. மேலும் அந்தந்த மாநிலத்தில் அவரவர் தாய்மொழி யில் கட்சி நடவடிக்கைகள், செயல்திட்டங்கள் இருக்க வேண்டுமெனவும், அகில இந்திய தலைமையோடு அவ ரவர் தாய்மொழியிலேயே தொடர்பு கொள்வதற்கான வழிவகை செய்யப்பட்டது. 

NOV 07 – NOV 13 Page 2

NOV 07 – NOV 13 Page 2
தமிழ்நாட்டில் 1.5 கோடி பேருக்கு தடுப்பூசி: அமைச்சர் தகவல்

தமிழ்நாட்டில் 1.5 கோடி பேருக்கு தடுப்பூசி: அமைச்சர் தகவல்

தமிழ்நாட்டில் இதுவரைக்கும் நடந்துள்ள 7 கட்ட மெகா முகாமில்  1.5 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 32,205 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இந்த மையங்களில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பயனாளிகளுக்கும் கொரோனா தடுப்பூசி முதல் தவணை மற்றும் 2-வது தவணை செலுத்தப்பட்டது. 5 முறை மெகா தடுப்பூசி முகாம்கள் ஞாயிற்றுக் கிழமைகளில் நடத்தப்பட்டது. மது அருந்துவோரும், இறைச்சி உணவு உண்போரும் ஞாயிற்றுக்கிழமைகளில் தடுப்பூசி போட்டுக்கொள்ள தயங்குவதாக கருத்து நிலவியதால், கடந்த வாரம் சனிக்கிழமை தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. 7-வது கட்ட தடுப்பூசி முகாமும் சனிக்கிழமை (அக்.30) நடந்தது.

5 முறை மெகா தடுப்பூசி முகாம்கள் ஞாயிற்றுக் கிழமைகளில் நடத்தப்பட்டது. மது அருந்துவோரும், இறைச்சி உணவு உண்போரும் ஞாயிற்றுக்கிழமைகளில் தடுப்பூசி போட்டுக்கொள்ள தயங்குவதாக கருத்து நிலவியதால், கடந்த வாரம் சனிக்கிழமை தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. 7-வது கட்ட தடுப்பூசி முகாமும் சனிக்கிழமை (அக்.30) நடந்தது. இதுகுறித்து சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், “ஏழாவது கட்டமாக நடந்த முகாமில் 17 லட்சத்து 14 ஆயிரத்து 111 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இவர்களில் முதல் தவணையாக 6 லட்சத்து 26 ஆயிரத்து 955 பயனாளிகளுக்கும் 2-வது தவணையாக 10 லட்சத்து 87 ஆயிரத்து 156 பேருக்கும தடுப்பூசி செலுத்தப்பட்டது. தமிழ்நாட்டில் இதுவரை நடந்த 7 கட்ட மெகா தடுப்பூசி முகாமில் 1 கோடியே 50 லட்சத்து 58 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது” என்றார்.

NOV 07 – NOV 13 Page 3

NOV 07 – NOV 13 Page 3
தீபாவளிக்காக 12 படுக்கைகளுடன் தீக்காய சிறப்பு சிகிச்சை பிரிவு ஆளுநரின் எதிர்மறைப் போக்கு: முத்தரசன் கண்டனம்

தீபாவளிக்காக 12 படுக்கைகளுடன் தீக்காய சிறப்பு சிகிச்சை பிரிவு

தீபாவளியை யொட்டிசென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 12  படுக்கைகளுடன் கூடிய தீக்காய சிறப்பு  சிகிச்சை பிரிவுக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. தீபாவளியையொட்டி பட்டாசு வெடிக் கும்போது எதிர்பாராமல் ஏற்படும் காயங்க ளுக்கு சிகிச்சை அளிக்க கீழ்ப்பாக்கம் அரசு  மருத்துவமனையில் ஒவ்வொரு ஆண்டும்  சிறப்பு தீக்காய சிகிச்சை வார்டு அமைக்கப்படுவது வழக்கம். அந்தவகையில் இந்த ஆண்டு 12 படுக்கைகளுடன் சிறப்பு தீக்காய வார்டு அமைக்கப்பட்டுள்ளன. இந்த சிறப்பு தீக்காய பிரிவு 24 மணி நேர மும் முழுமையாக செயல்படும். கீழ்ப்பாக்  கம் மருத்துவமனையிலுள்ள தீக்காய சிகிச்சை வார்டு ஏற்கனவே 70 படுக்கைகளு டன் செயல்பட்டு வருகிறது. தற்போது இந்த சிறப்பு தீக்காய வார்டு ஏற்படுத்தப்பட்டு கூடுத லாக 12 படுக்கை வசதிகள் அமைக்கப் பட்டுள்ளது.

இந்த சிறப்பு தீக்காய பிரிவில், தீக்காய சிகிச்சை துறை தலைவர் மருத்துவர் ரமாதேவி  தலைமையில், 22 மருத்துவர்கள், 21 செவிலி யர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் சுழற்சி முறையில் பணியில் இருப்பார்கள்.

ஆளுநரின் எதிர்மறைப் போக்கு: முத்தரசன் கண்டனம்

ஆளுநர் தனது எதிர்மறைப் போக்கு கைவிடப்பட வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியிருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை வருமாறு:- தமிழ்நாட்டின் புதிய ஆளுநராகப் பொறுப்  பேற்றுள்ள ஆர்.என்.ரவி அக். 30 அன்று பல்கலைக்கழகத் துணைவேந்தர்களின் கலந்தாலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளார். வேந்தர், துணை வேந்தர்களை அழைத்துப்  பேசுவது வழக்கமான ஒன்று, எனினும் தமிழ்நாடு ஒருமுகமாக நின்று, எதிர்ப்புத்  தெரிவிக்கும் தேசியக் கல்விக் கொள்கை யைப் படிப்படியாக அமல்படுத்த வேண்டும்  என அறிவுறுத்தியிருப்பது எதிர்மறைப் போக்காகும். இது மக்கள் தேர்ந்தெடுத்த அரசின் கொள்கை வகுக்கும் செயல்பாட்டில் குறுக்கிடுவதாகும். தமிழ்நாட்டின் தனித்துவத்தைக் கருத்தில்  கொண்டு, கல்விக் கொள்கை உருவாக்கப்ப டும் என முதல்வர் மக்களுக்கு உறுதி யளித்துள்ள நிலையில், மக்கள் உணர்வுக்கு  எதிராக ஆளுநர் தேசியக் கல்விக் கொள்கை யைக் குறுக்கு வழியில் அமல்படுத்த முயற்சிப்பது அமைதியை பாதிக்கும் செயலாகும். 

NOV 07 – NOV 13 Page 4

NOV 07 – NOV 13 Page 4
பள்ளி வளாகங்களிலேயே மாணவர்களுக்கு தடுப்பூசி அரசு ஊழியர்களின் பணியிடை நீக்கத்தை தவிர்க்க அரசாணை

பள்ளி வளாகங்களிலேயே மாணவர்களுக்கு தடுப்பூசி

அண்மைக்காலமாக நிலவி வரும் பெருந்தொற்று சூழலைக்கருத்தில் கொண்டு  வரும் நவம்பர் 5 ஆம் தேதி  முதல் பள்ளி வளாகங்களி லேயே மாணவர்களுக்கு தடுப்பூசிகள் வழங்க அறிவு றுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில்  நவம்பர் 5 ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகளிலும் தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட சுகா தாரத்துறை இணை இயக்கு னர்களுக்கும் பொது சுகா தாரத்துறை இயக்குனர் மருத்துவர் செல்வ விநாய கம் அனுப்பி உள்ள சுற்ற றிக்கையில் கூறியிருப்ப தாவது:- கொரோனா காரணமாக பள்ளிகள் திறப்பு தாமதமா கின. 9 முதல் 12 ஆம் வகுப்பு  வரை உள்ள மாணவர்க ளுக்கான வகுப்புகள் ஏற்க னவே நடைபெற்று வரும் நிலையில் தற்போது 1 முதல் அனைத்து வகுப்புகளும் தொடங்கப்பட உள்ளன. அண்மைக்காலமாக நிலவி வரும் பெருந்தொற்று சூழலைக்கருத்தில் கொண்டு  வரும் நவம்பர் 5 ஆம் தேதி  முதல் பள்ளி வளாகங்களி லேயே மாணவர்களுக்கு தடுப்பூசிகள் வழங்க அறிவு றுத்தப்படுகிறது. 

அரசு ஊழியர்களின் பணியிடை நீக்கத்தை தவிர்க்க அரசாணை

அரசு ஊழியர் ஒருவர் முறை கேட்டில் ஈடுபட்டது தெரியவந் தால், ஓய்வு பெறும் நாளில் பணி யிடைநீக்கம் செய்வதை தவிர்த்து, 3 மாதங்களுக்கு முன்ன தாகவே உரிய முடிவை எடுக்க  வேண்டும். விசாரணை, நடவ டிக்கை ஆகியவற்றுக்கு உரிய  கால அளவை ஒழுங்கு நடவ டிக்கை அதிகாரிகள் பின்பற்ற வேண்டும்.

சம்பந்தப்பட்ட அரசு ஊழியர்  ஓய்வு பெறுவதைக் கருத்தில் கொண்டு அவருக்கு எதிரான குற்றச்சாட்டில் உரிய விளக் கத்தை அளிக்க வாய்ப்பு கொடுத்து, இயற்கை நியதிக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த செயல்பாடுகள் அனைத்தும் எழுத்துப்பூர்வமாக பதிவு செய்யப்பட வேண்டும். ஓய்வு பெறுவதற்கு முன்னரே  அதாவது 3 மாதங்களுக்கு முன்னரே துறை ரீதியான நடவ டிக்கைகளை முடிக்க வேண்டும். அவ்வாறு முடிக்க இயலாத பட்  சத்தில், நடவடிக்கையில் நிர்வாக ரீதியான தாமதத்தைக் கருத்  தில்கொண்டு அந்த அரசு ஊழி யரை ஓய்வுபெற அனுமதிக்க வேண்டும். ஓய்வு பெறும் நாளுக்கு 3 மாதங்களுக்கு முன் ஏதேனும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், போர்க்கால அடிப்படையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

NOV 07 – NOV 13 Page 5

NOV 07 – NOV 13 Page 5
சிறப்பு ரயில்களை ரெகுலர் ரயில்களாக ஆக்கும் பணி தொடங்கியது தஞ்சாவூரில் இந்தியாவின் முதல் உணவு அருங்காட்சியகம் திறப்பு

சிறப்பு ரயில்களை ரெகுலர் ரயில்களாக ஆக்கும் பணி தொடங்கியது

கொரோனா காலத்தில் சிறப்பு ரயில்களாக அறிவிக்கப்பட்டவற்றை சாதாரண ரயில்களாக மாற்றும் பணி தொடங்கியுள்ளதாக மதுரை நாடாளு மன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: கொரோனா காலத்தில் சிறப்பு ரயில்களாக அறிவிக்கப்பட்டவற்றை சாதாரண ரயில்களாக மாற்ற வேண்டும் என்றும், முதியோர் கட்ட ணச் சலுகை உள்ளிட்ட அனைத்து சலுகைகளையும் மீண்டும் வழங்க வேண்டும் எனவும் தொடர்ந்து முயற்சி கள் மேற்கொள்ளப்பட்டது.  இதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் நாளுக்கு நாள் கிடைத்து வருகிறது. பொதுப்பெட்டிகள் இணைப்பு உள்ளிட்டு நான் எழுப்பிய பல்வேறு கோரிக்கைகள் ஏற்கப்பட்டு அறி விக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக மிக முக்கியமான வெற்றியை பெற்றுள்ளோம். கொரோனா காலத்தில் ரயில்கள் அனைத்தும் சிறப்பு ரயில்களாக மாற்றப்பட்டு அதன் கட்டண மும் உயர்த்தப்பட்டிருந்தது.

எனவே அதனை மீண்டும் சாதாரண ரயில்களாக மாற்றி, கட்டணத்தினை குறைக்க வேண்டுமென ஒன்றிய அமைச்சரை நேரில் சந்தித்து வலி யுறுத்தப்பட்டது. இதில் மிக முக்கிய மான வெற்றி கிடைத்துள்ளது.

தஞ்சாவூரில் இந்தியாவின் முதல் உணவு அருங்காட்சியகம் திறப்பு

தஞ்சாவூர் - புதுக்கோட்டை சாலை யிலுள்ள இந்திய உணவுக் கழக அலு வலகத்தில் நாட்டிலேயே முதல் உணவு அருங்காட்சியகம் திங்கள்கிழமை திறக்கப்பட்டது. இந்த அருங்காட்சியகத்தை மும்பை யிலிருந்து மத்திய நுகர்வோர் விவ காரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். ஏறத்தாழ 1,860 சதுர  அடி பரப்பளவில் ரூ.1.10 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சி யகத்தை இந்திய உணவு கழகமும், பெங்களூரில் உள்ள விஸ்வேஸ்வ ரய்யா தொழில் மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகமும் இணைந்து உரு வாக்கியுள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் இந்தியா மற்றும் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு பழங்கால தானியச் சேமிப்பு முறைகள், உலகளாவிய மற்றும் உள்நாட்டு சேமிப்பில் உள்ள சவால்கள், உணவு தானிய உற்பத்தி சூழ்நிலைகளை விளக்கும் வகையில் நவீன தொழில் நுட்பங்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

NOV 07 – NOV 13 Page 6

NOV 07 – NOV 13 Page 6
வெள்ளம் பாதித்த குமரி மாவட்டத்தில் முதல்வர் ஆய்வு தோழர் நா.பாலசுப்பிரமணியன் மறைவு! சிறப்பு ரயில்களை ரெகுலர் ரயில்களாக ஆக்கும் பணி தொடங்கியது

வெள்ளம் பாதித்த குமரி மாவட்டத்தில் முதல்வர் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டத்தில் கன மழை யினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்களன்று (நவ.15) நேரில் ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு ஆறுதல் கூறி நிவாரண பொருட்கள் வழங்கினார். தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் 2 வாரங்களாகவே மழை பெய்து வந்தது.  நவம்பர் 12-ந் தேதி முதல் மிக கனத்த மழை கொட்டியது. அன்று முதல் தொடர்ந்து பெய்த மழையால் மாவட்டமே வெள்ளக்காடானது. 200-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டது. சுமார் 50 ஆயிரம் வீடுகளில் மழை நீர் புகுந்தது.

மேலும் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் கால்வாய் எது? சாலை எது? என்று தெரியாத அள வுக்கு வெள்ளம் ஓடியது. குழித்துறை, தோவாளை, தேரேகால் புதூர், தக்கலை, குமாரபுரம், நித்திரவிளை, கோதையாறு, குற்றியாறு, மோதிரமலை பகுதிகளில் பெரும்பாலான சாலைகள் சேதம் அடைந்தன.

தோழர் நா.பாலசுப்பிரமணியன் மறைவு!

மார்க்சிஸ்ட கம்யூனிஸ்ட கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் விடுத்துள்ள இரங்கல் செய்தி வருமாறு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர்  நா.பாலசுப்பிரமணியன் (வயது 55) உடல்நலக் குறைவால் உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. கடந்த ஆண்டு  கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப் பட்டு தீவிர சிகிச்சைக்கு பின் குணமடைந்தார். அதன் பாதிப்பில் தொடர் சிகிச்சை பெற்று வந்த அவர், உடல் நலம் பாதிக்கப்பட்டு திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி ஞாயிறு (14.11.2021) இரவு உயிரிழந்துள்ளார். அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. 

சிறப்பு ரயில்களை ரெகுலர் ரயில்களாக ஆக்கும் பணி தொடங்கியது

பொதுப்பெட்டிகள் இணைப்பு உள்ளிட்டு நான் எழுப்பிய பல்வேறு கோரிக்கைகள் ஏற்கப்பட்டு அறி விக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக மிக முக்கியமான வெற்றியை பெற்றுள்ளோம். கொரோனா காலத்தில் ரயில்கள் அனைத்தும் சிறப்பு ரயில்களாக மாற்றப்பட்டு அதன் கட்டண மும் உயர்த்தப்பட்டிருந்தது.

எனவே அதனை மீண்டும் சாதாரண ரயில்களாக மாற்றி, கட்டணத்தினை குறைக்க வேண்டுமென ஒன்றிய அமைச்சரை நேரில் சந்தித்து வலி யுறுத்தப்பட்டது. இதில் மிக முக்கிய மான வெற்றி கிடைத்துள்ளது.  சிறப்பு ரயில் வண்டிகளை ரெகுலர்  வண்டிகளாக மாற்றுவதற்கு அவற்றின் எண்களை இணையத்தில் பதி வேற்றும் பணி ஞாயிறன்று இரவு துவங்கி யது. நவம்பர் 14 & 15 தேதிகளில் தொடங்கிய இந்தப் பணி ஏழு நாட்கள்  படிப்படியாக நடைபெறும்.

NOV 07 – NOV 13 Page 7

NOV 07 – NOV 13 Page 7
நெல்லுக்கு ஏக்கருக்கு ரூ. 30,000 நிவாரணம் வழங்கிடுக! ‘நீட்’எதிர்ப்பு போராட்டம்: சென்னையில் மாணவர்கள் கைது கேரளத்தில் தொடரும் கனமழை: சபரிமலை செல்ல கட்டுப்பாடுகள்

நெல்லுக்கு ஏக்கருக்கு ரூ. 30,000 நிவாரணம் வழங்கிடுக!

மார்க்சிஸ்ட கம்யூனிஸ்ட கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் விடுத்துள்ள இரங்கல் செய்தி வருமாறு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர்  நா.பாலசுப்பிரமணியன் (வயது 55) உடல்நலக் குறைவால் உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. கடந்த ஆண்டு  கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப் பட்டு தீவிர சிகிச்சைக்கு பின் குணமடைந்தார். அதன் பாதிப்பில் தொடர் சிகிச்சை பெற்று வந்த அவர், உடல் நலம் பாதிக்கப்பட்டு திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி ஞாயிறு (14.11.2021) இரவு உயிரிழந்துள்ளார். அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

‘நீட்’எதிர்ப்பு போராட்டம்: சென்னையில் மாணவர்கள் கைது

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய கோரி போராட்டம் நடத்திய மாணவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். ‘நீட்’ தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரி தமிழக அரசு சட்ட மசோதாவை நிறைவேற்றியது. அந்த மசோதாவிற்கு இரண்டு மாதமாகியும் ஆளுநர் ஒப்புதல் தராமல் உள்ளார். கல்வியில்  மதத்தை புகுத்தவும், கல்வி நிலையங்களை தனியாருக்கு கொடுக்கும் வகையிலும் ஒன்றிய அரசு புதிய கல்வி கொள்கையை கொண்டு வந்துள்ளது. இந்நிலையில், ‘நீட்’ விலக்க மசோதா விற்கு ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும், புதிய கல்விக் கொள்கையை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி அக்.27 அன்று சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட னர். அதேநாளில், நாடு முழுவதும் பல்வேறு வடிவங்களில் மாணவர் சங்கத்தினர் போராட்டத்தை நடத்தினர். நவ.13 அன்று சத்தியாகிரக போராட்டத்தையும் நடத்தினர். இதன் தொடர்ச்சியாக, இந்தியா முழுவதும் திங்களன்று (நவ.15) மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு மாண வர்கள் போராட்டம் நடத்தினர்.

இதன் ஒருபகுதி யாக சென்னையில் சாஸ்திரி பவனை தடுப்புகளை மீறி முற்றுகையிடச் சென்ற மாணவர்களை காவலர்கள் தடுத்து கைது செய்தனர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் க.நிருபன் சக்கரவர்த்தி, “நீட் தேர்வால் தமிழகத்தில் 24 மாணவர்கள் உயிரி ழந்துள்ளனர்.

கேரளத்தில் தொடரும் கனமழை: சபரிமலை செல்ல கட்டுப்பாடுகள்

பத்தனம்திட்டா மாவட்டம் உட்பட கேரளத்தில் சனிக்கிழமை இரவு முதல் பெய்துவரும் கனமழையால் சபரிமலைக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக மேற்கொள்ளப்படும் ஏற்பாடுகளில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கோயில் வாசல் திறக்கும் போது மேலும்  அதிக அளவில் பக்தர்கள் நுழைவது இன்றைய நிலையில் சிரமத்தை ஏற்படுத்தும் என கேரள முதல்வர் அறி வித்திருந்தார். நதி நீர் கலங்கி வருவ தால் குடிநீருக்கும் குளியலுக்கும் தண்ணீர்  பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  எனவே, அடுத்து வரும் சில நாட்களில் சபரிமலைக்கு வரும் நபர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முதல்வர் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.   கக்கி- ஆனத்தோடு அணையின் மதகு சிறிய அளவில் உயர்த்தப்பட்டுள்ளது. பம்பா  அணையின் நீர்மட்டம் அதிகபட்ச அளவை எட்டியுள்ளது. எந்த நேரத்திலும் அணை திறக்கப்படலாம். 

NOV 07 – NOV 13 Page 8

NOV 07 – NOV 13 Page 8
பிர்சா முண்டா அருங்காட்சியகம் : பிரதமர் திறந்து வைத்தார் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களுக்கு எதிராக அகில இந்திய எதிர்ப்பு தினம் அனுசரித்திடுக!

பிர்சா முண்டா அருங்காட்சியகம் : பிரதமர் திறந்து வைத்தார்

விடுதலை போராட்ட வீரரும் பழங்குடி இன தலைவருமான பிர்சா முண்டாவின் 146வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது நினைவாக ராஞ்சியில் உருவாக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.  விடுதலை போராட்ட வீரரும் பழங்குடி இன தலைவருமான பிர்சா முண்டாவின் 146வது பிறந்த நாள் விழா திங்களன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஜார்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சியில் அவரது நினைவாக அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். விழாவில் பேசிய பிரதமர் மோடி, ஆண்டுதோறும் பிர்சா முண்டாவின் பிறந்த நாளான நவம்பர் 15ம் தேதி பழங்குடி இன கவுரவ தினமாக கொண்டாடப்படும் எனத் தெரிவித்தார். 

சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களுக்கு எதிராக அகில இந்திய எதிர்ப்பு தினம் அனுசரித்திடுக!

கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் போன்ற சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவதைக் கண்டித்து வரும் டிசம்பர் 1 அன்று அகில இந்திய எதிர்ப்பு தினம் அனுசரித்திடுமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவல் விடுத்துள்ளது. இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆர்எஸ்எஸ்/சங் பரிவார் அமைப்புகளின் கீழ் இயங்கும் அமைப்புகள் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லீம்கள் முதலான சிறுபான்மையினருக்கு எதிராக மேற்கொண்டுவரும் தாக்குதல்கள் அதிகரித்து வருவது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துள்ளது. முகநூல் (facebook) போன்ற சமூக ஊடக மேடைகள் வழியாக எப்படியெல்லாம் பாஜக தலைவர்கள் மதவெறி நஞ்சை உமிழ்ந்து, வன்முறையைத் தூண்டிவிடுகிறார்கள் என்பதற்கு பல எடுத்துக்காட்டுகள் சமீபத்தில் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. இவ்வாறு மதவெறி நடவடிக்கைகளில் ஈடுபடும் கயவர்களுக்கு எதிராக சட்டத்தின்கீழ் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாதது மட்டுமல்ல, இதனால் பாதிப்புக்கு உள்ளாகும் நபர்களைப் பாதுகாப்பதற்குப் பதிலாக, பாஜக ஆளும் பல மாநிலங்களில்  நிர்வாகமானது  பாதிப்புக்கு ஆளானவர்களையே தண்டிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன.

NOV 07 – NOV 13 Page 9

NOV 07 – NOV 13 Page 9
எல்ஐசியின் வலிமை சாதாரணமல்ல; பங்குகளை விற்க அனுமதிக்கமாட்டோம் சிவகாசியில் பதுக்கி வைக்கப்பட்ட பட்டாசுகள் வெடித்ததில் கட்டிடம் தரைமட்டம்

எல்ஐசியின் வலிமை சாதாரணமல்ல; பங்குகளை விற்க அனுமதிக்கமாட்டோம்

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் சார்பில் மதுரையில் மாநில அளவிலான எல்ஐசி பங்கு விற்பனை எதிர்ப்பு சிறப்பு மாநாடு  நடைபெற்றது.  இம்மாநாட்டில் உரையாற்றிய திமுக நாடாளுமன்ற உறுப்பி னர் டி.கே.எஸ்.இளங்கோவன் பேசு கையில், “மத்தியில் நடைபெறுவது அடிமைகளின் ஆட்சி. அதாவது கார்ப்பரேட்டுகளின் ஆட்சி. பொதுச் சொத்துக்களை சூறையாட கார்ப்ப ரேட்டுகளுக்கு ஏற்றவர்கள் தான் இன்றைய ஆட்சியாளர்கள்.” என்று சாடினார். “1965-ஆம் ஆண்டில் ரூ. ஐந்து கோடி முதலீடுடன் தொடங்கப்பட்ட பின்பு அரசு முதலீடு சட்ட நிர்பந்தத் திற்காக ரூ.100 கோடியாக உயர்த்தப் பட்டது. அதற்குப் பின்னர் ஒரு  போதும் மத்திய அரசின் உதவியை  எல்ஐசி நாடியதில்லை. எல்ஐசி யின் உதவியைத் தான் மத்திய அரசு நாடியுள்ளது. ரூ. 5கோடி முத லீட்டிற்கு ஒன்றிய அரசிற்கு எல்ஐசி  கொடுத்த டிவிடெண்ட் மட்டும் 28,239 கோடி. இது தவிர நிறுவன வரி ஜிஎஸ்டி வரி என பல லட்சம்  கோடிகளை எல்ஐசி வழங்கி வரு கிறது. இப்படிப்பட்ட எல்ஐசியின்  பங்குகளை விற்க முயற்சிக்கின்ற னர். இதை நாம் அனுமதிக்கக் கூடாது” என்றும் அவர் கூறினார்.

சிவகாசியில் பதுக்கி வைக்கப்பட்ட பட்டாசுகள் வெடித்ததில் கட்டிடம் தரைமட்டம்

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் நேருஜி நகரில் அனுமதியின்றி சட்ட விரோ தமாக பதுக்கி வைக்கப்பட்டி ருந்த பட்டாசுகள் திடீரென வெடித்து ஏற்பட்ட விபத்தில் கட்டிடங்கள் தரை மட்டமாகி யது. சிவகாசியில் ஆயுதப் படை குடியிருப்பு அருகே உள்ளது நேருஜி நகர். இங்கு, தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தில், அனுமதி யின்றி, பாதாள அறையில் ஏராளமான பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந் தது. முதல் தளத்தில் பட்டா சுக்குத் தேவையான அட் டைக் குழாய்கள் தயாரிக்கும் பகுதியும், 2வது தளத்தில் அலுவலக அறை மற்றும் கட்டிடத்தின் உரிமையாளர் குடும்பத்துடன் இருந்து வந் துள்ளார்.  தீபாவளி விற்பனை முடிந்ததும், விற்பனையா காத மீதமுள்ள பட்டாசுகள், பண்டல் பண்டலாக பாதாள அறையில் இருப்பு வைக்கப் பட்டதாகவும், பட்டாசு தயா ரிக்கத் தேவையான மூலப் பொருட்களும் அத்துடன் சேர்த்து அனுமதி இல்லாத கட்டிடத்தில் இருப்பு வைக் கப்பட்டிருந்ததாகவும் கூறப் படுகிறது.

NOV 07 – NOV 13 Page 10

NOV 07 – NOV 13 Page 10
‘இபிஎஸ் 95’ ஓய்வூதியத் திட்டம் வரமா? சாபமா? - கே.பி. பாபு உச்சநீதிமன்றத்தில் அளித்த வாக்குறுதிகள் பறிப்பு

‘இபிஎஸ் 95’ ஓய்வூதியத் திட்டம் வரமா? சாபமா? - கே.பி. பாபு

தொழிலாளர்களும், தொழிற்சங்கமும் தொடர்ந்து போராடியதன் விளைவாக வும் உச்சநீதிமன்றத்தில் திரு. நகாரா  அவர்கள் தொடுத்த வழங்கில், “ஓய்வூதியம்  என்பது கருணையினால் வழங்கப்படுவதில்லை; அது தொழி லாளர்கள் உரிமை” என்று தீர்ப்பு  அளித்ததன் விளைவாகவும் ‘தொழிலாளர் ஓய்வூதியத்திட்டம் 95’ என்ற (EMPLOYEES PENSION SCHEME 95) திட்டத்தை 1995 நவம்பர் 16 அன்று அப்போதைய பிரதமர் பி.வி.நரசிம்மராவ் அறிமுகம் செய்தார். நாடாளுமன்றத்தின் மூலம் உருவாக்கப்பட்ட வருங்கால வைப்புநிதி  திட்டம் 1952 சட்டத்தின் ஒரு பகுதி யான பென்ஷன் திட்டத்தை கொண்டுவரும் போது நாடாளுமன்றத்தின் உறுப்பினர்கள் கருத்துகளை கேட்காமலும், எந்த விவாதமும் இல்லாமலும் இ.பி.எஸ்1995 திட்டத்தை அவசர கதியில் அரசு கொண்டு  வந்தது. இந்த திட்டத்தில் ஒன்றிய அரசு 1.16% பங்களிப்பும் தொழிலாளி தனது பங்களிப்பாக, நிர்வாகம்  செலுத்தும் வருங்கால வைப்பு நிதியின் பங்களிப்பான 12% லிருந்து 8.33% ஐ பென்ஷன்  நிதிக்காக செலுத்த வேண்டும்.

வருங்கால வைப்பு நிதி சட்டம் 1952 மற்றும் குடும்ப  ஓய்வூதிய திட்டம் 1971, ஆகிய இரண்டு திட்டங்களில் கடைப்பிடிக்கப்பட்ட சட்டப்படியான அரசின் சம பங்களிப்பு மறுக்கப்பட்டது.

உச்சநீதிமன்றத்தில் அளித்த வாக்குறுதிகள் பறிப்பு

இபிஎஸ் 95 - திட்டத்தில் தொழிலாளி சேர்வதற்கான விருப்பத்தை கேட்காமல் சேருவதற்கு  கட்டாயப் படுத்தக் கூடாது என்று சி.ஐ.டி.யு சங்கம் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தது. ஒன்றிய அரசு, இ.பி.எஸ்95 திட்டம் ஒரு சிறந்த சமுகநல பாதுகாப்பு திட்டம் என்றும், இதில் பென்ஷன் மட்டுமல்ல, தொழி லாளி விரும்பினால் 1/3 பென்ஷனை விட்டுகொடுத்து (COMUTATION SCHEME) தனது பங்களிப்பில் ஒரு பகுதியை பெற்றுக் கொள்ளலாம் என்றும்; ‘போட்ட  முதலீடு திரும்பக் கிடைக்கும்’ (RETURN OF CAPITAL) என்ற பெயரில் 20  ஆண்டுக்கு பிறகு  அவரது பென்ஷனை போன்று 100 மடங்கு தொகையைத்  திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்றும், மேலும்  காப்பீட்டுத் திட்டம் உள்ளது என்றும் உச்சநீதி மன்றத்தில் வாதிட்டது. உச்ச நீதிமன்றமும் ஒன்றிய  அரசின் வாதங்களை ஏற்றுக்கொண்டு தொழி லாளர்கள் மனுவை தள்ளுபடி செய்தது. ஆனால் இந்த திட்டத்தில் உள்ள சிறப்பு அம்சங்கள்  என்று உச்சநீதிமன்றத்தில் தெரிவித்த எல்லா அம்சங் களையும் 2008ல் ஒன்றிய அரசு தன்னிச்சையாக ரத்து செய்தது.

NOV 07 – NOV 13 Page 11

NOV 07 – NOV 13 Page 11
சென்னையில் மீண்டும் கனமழை உடல் உறுப்புகள் தானத்திற்கு ‘ஆதார்’ கட்டாயம் கொலீஜியம் சர்வாதிகாரம்: வழக்கறிஞர்கள் ஆவேசம் டெல்டாவில் பயிர்கள் சேதம்: இன்று அறிக்கை தாக்கல் திருவண்ணாமலை : 2 ஆயிரம் ஹெக்டேர் பயிர் பாதிப்பு

சென்னையில் மீண்டும் கனமழை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 25 ஆம் தேதி தொடங்கியது. அதில்  இருந்து தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. அந்தமான் அருகே உருவான காற்ற ழுத்த தாழ்வு நிலை வடதமிழகம் நோக்கி கடந்த 10 ஆம் தேதி நகர்ந்தது. இதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் பலத்த மழை கொட்டியது. சென்னை நகரம் வெள்ளத் தில் மிதந்தது. கடந்த 11 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு நிலை  தாழ்வு மண்டலமாக மாறி சென்னை அருகே  கரையை கடந்தது. அப்போது மிக கனமழை கொட்டியது. 

உடல் உறுப்புகள் தானத்திற்கு ‘ஆதார்’ கட்டாயம்

உடல் உறுப்புகளை தானமாக பெறுவ தற்கும், வழங்குவதற்கும் ஆதார் கட்டாயம்  என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக இணைய தளங்களில் பதிவு செய்வோர், உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான நோயாளிகளை ஒரு மருத்துவமனையில் இருந்து மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றுதல், உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வருவோர் ஆதார் எண் அடிப்படையில் அத்தகைய சேவை களை பெறலாம். தொடர்பில்லா சேவைகளை பெறவும், ஆதாரை கட்டாயமாக்கி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

கொலீஜியம் சர்வாதிகாரம்: வழக்கறிஞர்கள் ஆவேசம்

சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி இடமாற்றும் செய்தற்கு எதிர்ப்பு தெரி வித்து சென்னையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உச்சநீதிமன்றத்தின் கொலீஜியத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, சென்னை உயர்நீ திமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த  சஞ்ஜிப் பானர்ஜியை, மேகாலயா உயர்நீதி மன்றத்திற்கு மாற்றவும்,  அலகாபாத் உயர்நீதி மன்ற நீதிபதி முனிஸ்வர் நாத் பண்டாரியை, சென்னை உயர் நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யவும் பரிந்துரைத்துள்ளது. இதற்கு அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் உள்ளிட்ட பல சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து, முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என  கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் ஆவின் கேட் அருகே மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத் தலைமையில் திங்களன்று (நவ. 15) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில்  அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் கே.இளங்கோ, மாநில பொருளாளர் எஸ்.சிவக்குமார், மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன், மூத்த வழக்கறிஞர் விஜயகுமார், பார்வேந்தன், (விசிக) உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

டெல்டாவில் பயிர்கள் சேதம்: இன்று அறிக்கை தாக்கல்

தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடு துறை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் பெய்த கனமழை காரண மாக ஆயிரக்கணக்கான ஹெக்டேரில் பயிரிடப்பட்ட விவசாய பயிர்கள் மழை நீரில் மூழ்கி கிடக்கின்றன. சேதம் அடைந்த விவசாய பயிர்களை காப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வும், பயிர் சேத விவரங்களை அறியவும் ஐ.பெரியசாமி தலைமையிலான அமைச்சர் கள் அடங்கிய குழுவை முதலமைச்சர் அமைத்தார். இந்த குழுவில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ரகுபதி, பெரியகருப்பன், அற.சக்கரபாணி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் இடம்பெற்று இருந்தனர். இந்த குழுவினர் டெல்டா மாவட்டத்தை பார்வை யிட கடந்த 12 ஆம் தேதி சென்றிருந்தனர். முதலில் தஞ்சாவூர் சென்ற 7 அமைச்சர்களும் அங்கு ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினர். மாவட்டத்தில் நெற்பயிர்கள் உள்ளிட்ட பயிர் வகைகள் எவ்வளவு ஹெக்டேரில் பயிரிடப்பட்டு இருந்தது? அதில் எவ்வளவு சேதம் அடைந்துள்ளது? என்ற விவரங்கள் குறித்து துறை அதிகாரிகளுடன் விரிவாக விவாதித்தனர்.

திருவண்ணாமலை : 2 ஆயிரம் ஹெக்டேர் பயிர் பாதிப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில்  மழை வெள்ளத்தால் 2,032 ஹெக்டேர்  விவசாய நிலங்கள் பாதிக்கப்பட் டுள்ளதால் ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தி லும் பருவ மழை தீவிரமடைந்துள் ளது. அணைகள், ஏரிகள், குளங்கள்  உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வழி கின்றன. விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளை வெள்ள நீர்  சூழ்ந்து மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. தாழ்வானப் பகுதி யில் வசிக்கும் மக்கள் மற்றும் ஆற்றங் கரையோரம் வசிக்கும் மக்களை, முகாம்களில் தங்க வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றனர். இம்மாவட்டத்தில் கடந்த அக்டோ பர் 1 ஆம் தேதி முதல் நவம்பர் 12 ஆம்  தேதி வரை, மழை வெள்ளத்துக்கு இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் 78 முகாம்கள் அமைக்கப்பட்டு 145 சிறுவர்கள், 141 பெண்கள் மற்றும் 121 ஆண்கள் என  மொத்தம் 407 பேர் தங்க வைக்கப் பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றனர். மக்களுக்கு தேவையான உணவு மற்றும் அடிப்படை வசதிகளை வரு வாய் மற்றும் உள்ளாட்சித் துறையி னர் செய்து வருகின்றனர்.

NOV 07 – NOV 13 Page 12

NOV 07 – NOV 13 Page 12
கோவில் நிதியில் கல்லூரிகள்: நீதிமன்றம் தடை சிபிஐ, அமலாக்கப்பிரிவு இயக்குநர்களின் பணிக் காலத்தை நீட்டிப்பதா? நா.பாலசுப்பிரமணியம் மறைவு ஜி.ராமகிருஷ்ணன் இரங்கல் சாத்தையாறு அணை நிரம்பியது சிவகங்கையில் இந்திய மாணவர் சங்க பேரவைக் கூட்டம் மாணவி பொன்தாரணி தற்கொலை மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்

கோவில் நிதியில் கல்லூரிகள்: நீதிமன்றம் தடை

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத்துறை மானியக்கோரிக்கையின்போது, 1,500 கோடி ரூபாய் மதிப்பில் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அதில், மாநிலம் முழுவதும் பத்து கோயில்களின் நிதியில் 150  கோடி ரூபாய் செலவில் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று  அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் மயிலாப்பூர்  கபாலீஸ்வரர் கோவில் சார்பில் சென்னை கொளத்தூரிலும், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் சார்பில் பரமத்தி வேலூரிலும், பழனி  கோவில் சார்பில் தொப்பம்பட்டியிலும், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சார்பில் விளாத்திகுளத்திலும் என 4 இடங்களில் கல்லூரிகள் தொடங்க அனுமதி அளித்து தமிழக உயர்கல்வித்துறை செயலாளர் கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி அரசாணை பிறப்பித்தார். இந்த அரசாணைக்கு தடை விதிக்கக்கோரியும், அதை  ரத்து செய்து, கோவில் சொத்துக்களை உரிய நடைமுறை களை பின்பற்றாமல் பயன்படுத்த தடை விதிக்கக்கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் டி.ஆர்.ரமேஷ் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

சிபிஐ, அமலாக்கப்பிரிவு இயக்குநர்களின் பணிக் காலத்தை நீட்டிப்பதா?

 மத்தியக் குற்றப்புலனாய்வுக் கழகம் (சிபிஐ), அமலாக்கப் பிரிவு  ஆகியவற்றின் இயக்குநர்களின் பணிக்காலத்தை  இரண்டு ஆண்டுகளிலிருந்து ஐந்து ஆண்டு காலத்திற்கு நீட்டித்து ஒன்றிய அரசாங்கம் இரு அவசரச் சட்டங்களை பிறப்பித்திருப்பதை ரத்து செய்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலை மைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்தியக் குற்றப்புலனாய்வுக் கழகம் (சிபிஐ), அமலாக்கப் பிரிவு ஆகியவற்றின் இயக்குநர்களின் பணிக்காலத்தை  இரண்டு ஆண்டுகளிலிருந்து ஐந்து ஆண்டு காலத்திற்கு நீட்டித்து ஒன்றிய அரசாங்கம் இரு அவசரச் சட்டங்களை பிறப்பித்திருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கண்டனம் தெரிவிக்கிறது. மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகமும், அமலாக்கப் பிரிவும் ஆளும் கட்சி தன் நிகழ்ச்சிநிரலை முன்னெடுத்துச் செல்வ தற்கான அரசியல் அங்கமாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவற்றினால், எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் தொடர்ந்து குறிவைக்கப்பட்டு வருகிறார்கள். 

நா.பாலசுப்பிரமணியம் மறைவு ஜி.ராமகிருஷ்ணன் இரங்கல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்ட செயற்குழு உறுப்பினரும், சிஐடியு தலைவருமான தோழர் நா.பாலசுப்பிரமணியம் மறைவுக்கு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார். நா.பாலசுப்பிரமணியம் மாணவப் பருவத்திலேயே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து பணியாற்றியவர். பல்வேறு போராட்டங்களுக்கு தலைமையேற்றவர். கொரோனா நோய்த்தொற்று காரணமாக  அவர் மரணமடைந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அவருடைய துணைவியார் அஜீதா மற்றும் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

சாத்தையாறு அணை நிரம்பியது

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்ட செயற்குழு உறுப்பினரும், சிஐடியு தலைவருமான தோழர் நா.பாலசுப்பிரமணியம் மறைவுக்கு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார். நா.பாலசுப்பிரமணியம் மாணவப் பருவத்திலேயே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து பணியாற்றியவர். பல்வேறு போராட்டங்களுக்கு தலைமையேற்றவர். கொரோனா நோய்த்தொற்று காரணமாக  அவர் மரணமடைந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அவருடைய துணைவியார் அஜீதா மற்றும் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

சிவகங்கையில் இந்திய மாணவர் சங்க பேரவைக் கூட்டம்

இந்திய மாணவர் சங்க பேரவைக் கூட்டம் சிவகங்கை யில் நடைபெற்றது.  இதில், மாணவர் சங்கத்தின் மாநில துணைச் செயலா ளர்கள் அரவிந்தசாமி, பிருந்தா ஆகியோர் கலந்துகொண்ட னர். ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர் சுரேஷ் வாழ்த்தி பேசினார்.  பேரவையில், 8 பேர் கொண்ட மாவட்ட அமைப்புக்குழு உருவாக்கப்பட்டது. மாவட்ட அமைப்பாளராக விக்னேஷ்வீரன், மாவட்ட துணை அமைப்பாளராக அலெக்ஸ் பாண்டியன் தேர்வு செய்யப்பட்டனர்.  சிவகங்கையில் சட்டக்கல்லூரி, காளையார்கோவிலில் அரசு கலைக் கல்லூரி தொடங்க வேண்டும். மாவட்டம் முழுவதும் சத்துணவுக்கு தரமான அரிசி வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாணவி பொன்தாரணி தற்கொலை மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்

இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் கோவை மாணவி பொன்தாரணியின் தற்கொலைக்கு காரணமான ஆசிரி யர் மிதுன் சக்ரவர்த்தியை கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட செயலாளர் வசந்த் சுர்ஜித் கண்டன உரை யாற்றினார். இதைத்தொடர்ந்து அஞ்சலி கூட்டம் நடை பெற்றது. இதில், மாணவர் சங்கத்தின் மாவட்ட தலைவர் கோ.வசந்த், மாவட்ட நிர்வாகிகள் வில்லியம் ஜாய், வியட் நாம், வைஷ்ணவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

NOV 07 – NOV 13 Page 13

NOV 07 – NOV 13 Page 13
கட்டுமான சங்க புதிய கிளைகள் அமைப்பு சிவகங்கையில் இந்திய மாணவர் சங்க பேரவைக் கூட்டம் கட்டுமான சங்க புதிய கிளைகள் அமைப்பு நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 140.35 அடியாக உயர்வு அடுத்த ஆண்டு ஊசி தட்டுப்பாடு ஏற்படும் இன்று முதல் கட்டுப்பாடுகள் நீக்கம் புறநகர் மின்சார ரயில்களில் அலைமோதிய மக்கள் கூட்டம்

கட்டுமான சங்க புதிய கிளைகள் அமைப்பு

சிஐடியு-கட்டுமானத் தொழிலாளர் சங்கத்தின் புதிய கிளைகள் அமைக்கப்பட்டன. திருச்சுழி ஒன்றியத்திற்குட்பட்ட கோணப்பநேந்தலில் புதிய கிளை அமைக்கப்பட்டது. கிளைத் தலைவராக வி.மகாலிங்கம், செயலாளராக கே.சரவணக்குமார், பொரு ளாளராக வி.ராஜ்குமார், துணைத் தலைவராக பெரிய சாமி, துணைச் செயலாளராக பெரிய கருப்பன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மஞ்சம்பட்டியில் தலைவராக பி.அன்னத்தாய், செய லாளராக ஜி.பார்வதி, பொருளாளராக ஏ.அம்சவள்ளி, துணைத் தலைவராக முத்துஇருளாயி, துணைச் செயலா ளராக இந்திரா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட பொதுச் செயலாளர் பி.ராமர், ஒன்றிய செயலாளர் சுரேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சிவகங்கையில் இந்திய மாணவர் சங்க பேரவைக் கூட்டம்

இந்திய மாணவர் சங்க பேரவைக் கூட்டம் சிவகங்கை யில் நடைபெற்றது.  இதில், மாணவர் சங்கத்தின் மாநில துணைச் செயலா ளர்கள் அரவிந்தசாமி, பிருந்தா ஆகியோர் கலந்துகொண்ட னர். ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர் சுரேஷ் வாழ்த்தி பேசினார்.  பேரவையில், 8 பேர் கொண்ட மாவட்ட அமைப்புக்குழு உருவாக்கப்பட்டது. மாவட்ட அமைப்பாளராக விக்னேஷ்வீரன், மாவட்ட துணை அமைப்பாளராக அலெக்ஸ் பாண்டியன் தேர்வு செய்யப்பட்டனர்.  சிவகங்கையில் சட்டக்கல்லூரி, காளையார்கோவிலில் அரசு கலைக் கல்லூரி தொடங்க வேண்டும். மாவட்டம் முழுவதும் சத்துணவுக்கு தரமான அரிசி வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கட்டுமான சங்க புதிய கிளைகள் அமைப்பு

சிஐடியு-கட்டுமானத் தொழிலாளர் சங்கத்தின் புதிய கிளைகள் அமைக்கப்பட்டன. திருச்சுழி ஒன்றியத்திற்குட்பட்ட கோணப்பநேந்தலில் புதிய கிளை அமைக்கப்பட்டது. கிளைத் தலைவராக வி.மகாலிங்கம், செயலாளராக கே.சரவணக்குமார், பொரு ளாளராக வி.ராஜ்குமார், துணைத் தலைவராக பெரிய சாமி, துணைச் செயலாளராக பெரிய கருப்பன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மஞ்சம்பட்டியில் தலைவராக பி.அன்னத்தாய், செய லாளராக ஜி.பார்வதி, பொருளாளராக ஏ.அம்சவள்ளி, துணைத் தலைவராக முத்துஇருளாயி, துணைச் செயலா ளராக இந்திரா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட பொதுச் செயலாளர் பி.ராமர், ஒன்றிய செயலாளர் சுரேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 140.35 அடியாக உயர்வு

நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் முல்லைப் பெரியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் 140.35 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் மழையால் அணையின் நீர்மட்டம் ஞாயிறன்று 139.85 அடியாக உள்ளது. திங்களன்று காலை நில வரப்படி 140 .35 அடியை தொட்டது. அணைக்கு நீர்வரத்து 3378 கன அடியாக இருந்தது. அணையில் இருந்து 2300 கன அடி திறக்கப்படுகிறது. விரைவில் 142 அடியை எட்டும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர். வைகை அணை முழு கொள்ளளவை எட்டி 69.29 அடி யாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது. அணைக்கு 1627 கன அடி நீர் வருகிறது. 3 மாவட்ட பாசனம் மற்றும் மதுரை மாநகர குடி நீருக்காக 1619 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணை நீர்மட்டம் 55 அடி. அணைக்கு வரும் 100 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது. சோத்துப் பாறை அணையின் நீர்மட்டம் 126.34 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 42 கன அடி நீர் வருகிறது .30 கன அடி திறக்கப்படுகிறது. பெரியாறு 26., தேக்கடி 23.8, கூடலூர் 26.3, மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

அடுத்த ஆண்டு ஊசி தட்டுப்பாடு ஏற்படும்

உலகம் முழுவதும் தற்போது கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இதனால் ஊசி சிரெஞ்சு அதிகமாக தேவைப்படுகிறது. இவற்றை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் உற்பத்தியை அதிகப்படுத்தின. ஆனாலும் கூட போதுமான ஊசி சிரெஞ்சுகளை உற்பத்தி செய்ய முடியவில்லை. எனவே  அடுத்த ஆண்டு ஊசி சிரெஞ்சுக்கு உலகம் முழுவதும் கடும் தட்டுப்பாடு ஏற்படும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் முதன்மை ஆலோசகர் லிசா ஹெட்மென் இது சம்பந்தமாக கூறியதாவது:- உலகம் முழுவதும் உள்ள ஊசி சிரெஞ்சு தயாரிக்கும் நிறுவனங்களால் ஆண்டுக்கு 600 கோடி சிரெஞ்சுகளையே உற்பத்தி செய்ய முடியும். கடந்த ஓராண்டில் மட்டும் கொரோனா தடுப்பூசிக்காக 725 கோடி ஊசி சிரெஞ்சுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. எனவே இருப்பு இருந்த சிரெஞ்சுகள் அனைத்தும் பயன்படுத்தப்பட்டுவிட்டன. 

இன்று முதல் கட்டுப்பாடுகள் நீக்கம் புறநகர் மின்சார ரயில்களில் அலைமோதிய மக்கள் கூட்டம்

கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதால் தமிழகத்தில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. மின்சார ரயில் பயணத்துக்கு இருந்த கட்டுப்பாடுகளும் திங்களன்று முதல் முழுமையாக விலக்கிக் கொள்ளப்பட்டன. மின்சார ரயிலில் கூட்ட நெரிசல் மிகுந்த காலை மற்றும் மாலை நேரங்களில் ஆண்கள் பயணம் செய்ய அனுமதிக்காத நிலை இருந்து வந்தது. இந்நிலையில், அனைத்து புறநகர் மின்சார ரயில்களிலும் திங்களன்று முதல் பயணிகள் முழுமையாக பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சீசன் டிக்கெட், ரிட்டன் டிக்கெட், முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகள் யூ.டி.எஸ். செயலி மூலம் டிக்கெட் எடுப்பதற்கும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் மின்சார ரயில்களில் இன்று வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது. சென்ட்ரல்-திருவள்ளூர், அரக்கோணம், சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி- சூலூர்பேட்டை, கடற்கரை-தாம்பரம்- செங்கல்பட்டு, கடற்கரை-வேளச்சேரி ஆகிய 4 மார்க்கங்களிலும் உள்ள ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி இருந்தது. கடந்த ஒரு வாரமாக கனமழை பாதிப்பால் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.

NOV 07 – NOV 13 Page 14

NOV 07 – NOV 13 Page 14
உரத் தட்டுப்பாட்டை போக்கிடுக! அனைத்து விவசாயிகள் சங்கத்தினர் போராட்டம் மழைநீர் வடிகால் அமைக்கக் கோரி மறியல் போராட்டம் மாற்றுச் சான்றிதழ் வழங்கப் போவதாக மிரட்டுவதா? தனியார் பேருந்துகளை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் அரசு பேருந்துகள் அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் நெல்லுக்கு பணம் வழங்க வேண்டும்

உரத் தட்டுப்பாட்டை போக்கிடுக! அனைத்து விவசாயிகள் சங்கத்தினர் போராட்டம்

விருதுநகர் மாவட்டத்தில் தற்போதுள்ள உரத் தட்டுப் பாட்டை போக்கிட வேண்டும். 2020 மற்றும் 2021 ம் ஆண்டில் பயிர் செய்யப்பட்ட அனைத்துப் பயிர்களுக்கும் காலதாமதமின்றி காப்பீடு வழங்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு வங்கிகளும் பயிர் காப்பீடு வழங்க வேண்டும். விளை நிலங்களில் புகுந்து பயிர் களை நாசம் செய்யும் காட்டுப் பன்றிகள் மற்றும் மான்களை வனத்துறையினர் அப்புறப் படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அனைத்து விவசாயிகள் சங்கத்தி னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் அ.விஜயமுருகன் தலைமையேற்றார். துவக்கி வைத்து தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் என்.ஏ.ராமச்சந்திரராஜா பேசி னார். விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் வி.முருகன் கண்டன உரையாற்றினார்.  மேலும் இதில், தென்னை விவ சாயிகள் சங்க மாவட்டத் தலை வர் முத்தையா, தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் மாநி லக்குழு உறுப்பினர் மங்கையற் கரசி ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.

மழைநீர் வடிகால் அமைக்கக் கோரி மறியல் போராட்டம்

மதுரை மாநகராட்சியே 81 வது வார்டு கீழ அண்ணாத்தோப்பு தெருவில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றி மழை நீர் வடிகால் அமைக்க வேண்டும், புதிய தார்ச்சாலை அமைத்துக் கொடுக்க வேண்டும், வைகையாற்று தென்கரையில் சாலை விரி வாக்கத்திற்காக இடிக்கப்பட்ட பொது சுகாதார வளாகத்தை சீர மைத்து கொடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய - 2 ஆம் பகு திக்குழு கீழ அண்ணாத் தோப்பு கிளை சார்பிலும், பொதுமக்கள் சார்பிலும் ராஜாமில் ரோட்டில் கிளைச் செயலாளர்கள் ஆறு முகம், சந்திரன் ஆகியோர் தலை மையில் மறியல் போராட்டம் நடைபெற்றது.  போராட்டம் ஆரம்பித்த சில நிமிடங்களில் மாநகராட்சி அதி காரிகள் மற்றும் காவல்துறை யினர் மறியலில் ஈடுபட்டவர் களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தெருவில் தற்காலிகமாக சாலை அமைக்கும் பணியினை மேற் கொண்டனர்.  மறியலில் பகுதிக் குழு செய லாளர் பி.ஜீவா, பகுதிக்குழு உறுப்பினர் பி.கோபிநாத், இ. உதயநாதன், வீரமுத்து, சிஐ டியு சலவைத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் இரா.பாலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மாற்றுச் சான்றிதழ் வழங்கப் போவதாக மிரட்டுவதா?

விருதுநகரில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிர்வாகத்தினர் ஆன்-லைன் வகுப்புகளை கவனிக்கவில்லையென்ற குற்றத் திற்காக 110 மாணவர்களுக்கும் மாற்றுச் சான்றிதழ் வழங்கி, மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்குவதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. விருதுநகரில் செந்திக்குமாரநாடார் கல்லூரி உள்ளது. இங்கு ஏராளமான மாணவ, மாணவி கள் படித்து வருகிறோம். இந்நிலையில், கொரோனா தொற்று காரணமாக கல்லூரிகள் நடைபெறவில்லை.  அக்காலங்களில் ஆன்-லைன் வகுப்புகளுக்கு கல்லூரி நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. அப்போது, செல்போன் ரீசார்ஜ் செய்ய வசதி இல்லாததாலும், சரிவர சிக்னல் கிடைக்காத காரணத்தாலும், பலருக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தாலும், 110 மாணவர்கள் சரியாக ஆன்-லைன் வகுப்பில் பங்கேற்கவில்லை. தற்போது கல்லூரி துவங்கியதும், ஆன்-லைன் வகுப்பில் பங்கேற்காத மாணவர்கள் அனைவரும் தங்களது பெற்றோரை கல்லூரிக்கு அழைத்து வர வேண்டும் என கல்லூரி முதல்வர் உத்தரவிட்டார். 

தனியார் பேருந்துகளை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் அரசு பேருந்துகள்

திண்டுக்கல் மாவட்டத்தில் தனியார் பேருந்து கட்டணத்தை விட அரசு பேருந்து களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படு கிறது.  தனியார் பேருந்துகளில் தான் பொது வாக கூடுதலாக கட்டணம் வசூலிப்பார்கள். அரசு பேருந்துகளில் மக்களுக்கு சலுகை செய்வது போல கட்டணங்களை குறைப்பது வழக்கம்.  ஆனால் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பேருந்துகளில் தலைகீழாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியிலிருந்த அதிமுக அரசு பயணிகளிடம் கட்டணம் என்ற பெயரில் கசக்கி பிழிந்து வந்துள்ளது. தனி யார் பேருந்துகளைக் காட்டிலும் அரசு பேருந்துகளில் கட்டணம் அதிகமாக வசூ லிக்கப்பட்டு வருகிறது.  இது தொடர்பாக பொதுமக்கள் பல முறை அரசு போக்குவரத்து நிர்வாகங்க ளுக்கு புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கை யும் எடுக்கப்படவில்லை. திண்டுக்கல்லில் இருந்து நத்தம் செல்லும் அரசு பேருந்து களில் நபர் ஒருவருக்கு கட்டணமாக ரூ.30 வசூலிக்கப்படுகிறது.  ஆனால், தனியார் பேருந்துகளில் கட்ட ணமாக ஒரு நபருக்கு ரூ.23 தான் வசூ லிக்கப்படுகிறது. ஒரு நபரிடம் ஒரு ரூபாய், 2 ரூபாய் கூடுதலாக வசூலிக்கலாம். 

அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் நெல்லுக்கு பணம் வழங்க வேண்டும்

அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் கொள்முதல் செய்த நெல்லுக்கு பணம்  வழங்க வேண்டும், உர தட்டுப்பாட்டை போக் கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதுதொடர்பாக தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மதுரை மாவட்ட தலைவர் எஸ்.பி.இளங்கோவன், மாவட்ட துணைச் செயலாளர் தனசேகர், கிழக்கு தாலுகா பொருளாளர் பொன்னையன், மேற்கு ஒன்றி யச் செயலாளர் நாகேந்திரன் ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் திங்களன்று மனு அளித்தனர். அவர்கள் அளித்துள்ள மனுவில் கூறி யிருப்பதாவது: மதுரை மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங் களின் மூலமாக அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த கொள்முதல் நிலையங்களில் விவ சாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் பணம் வழங்காமல் தொடர்ந்து காலதாமதம் செய்து வருகின்றனர்.  இதனால், விவசாயிகள் விவசாயத்திற் காக வாங்கிய கடன்களையும் நெல்லை கொள்முதல் நிலையங்களில் விற்பதற்காக வாங்கிய கடன்களையும் திரும்ப செலுத்த முடியாமல் விவசாயத்தையும் தொடங்க முடியாமல் பெரும் துயரங்களை சந்தித்து வருகின்றனர்.

NOV 07 – NOV 13 Page 15

NOV 07 – NOV 13 Page 15
அஞ்சல் ஓய்வூதியர் சங்க மாவட்ட கிளை மாநாடு முக்தர் அப்பாஸ் நக்வி கூறுகிறார் நாடாளுமன்றத்தில் பெகாசஸ் குறித்த விவாதத்தை அனுமதிக்க முடியாது! மருத்துவமனை முறைகேடுகளை அம்பலப்படுத்தியவர் பீகாரில் சமூக ஆர்வலர் எரித்துப் படுகொலை!

அஞ்சல் ஓய்வூதியர் சங்க மாவட்ட கிளை மாநாடு

அகில இந்திய அஞ்சல் ஆர்எம்எஸ் ஓய்வூதியர் சங்கம் மதுரை மாவட்ட கிளையின் முதல் மாநாடு ஞாயிறன்று மதுரை தர்மபுரம் ஆதீன மடம் அரங்கில் நடைபெற்றது.  மாநாட்டை அகில இந்திய பொதுச்செயலாளர் கே.இராக வேந்திரன் துவக்கி வைத்து உரை யாற்றினார். மாநில பொதுச்செய லாளர் பி.மோகன், தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதிய சங்க மாவட்டத் தலைவர் குரு.தமிழரசு, முதுநிலை அஞ்சல் அதிகாரி நாக நாதன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.  மாநாட்டில், தலைவராக ஏ.பழ னிச்சாமி, செயலாளராக எஸ்.பாண்டி யன், செயல் தலைவராக எஸ்.அப்பன் ராஜ், பொருளாளராக வில்லியம் ராஜன் உள்ளிட்ட நிர்வாகக்குழு உறுப் பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மதுரையில் சிஜிஹெச்எஸ் மருத்துவமனை துவங்குதல், மத்திய நிர்வாக தீர்ப்பாயம் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் அமைப்பது, புதிய பென்சன் திட்டத்தை கைவிடுதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.அகில இந்திய அஞ்சல் ஆர்எம்எஸ் ஓய்வூதியர் சங்கம் மதுரை மாவட்ட கிளையின் முதல் மாநாடு ஞாயிறன்று மதுரை தர்மபுரம் ஆதீன மடம் அரங்கில் நடைபெற்றது.  மாநாட்டை அகில இந்திய பொதுச்செயலாளர் கே.இராக வேந்திரன் துவக்கி வைத்து உரை யாற்றினார். மாநில பொதுச்செய லாளர் பி.மோகன், தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதிய சங்க மாவட்டத் தலைவர் குரு.தமிழரசு, முதுநிலை அஞ்சல் அதிகாரி நாக நாதன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.  மாநாட்டில், தலைவராக ஏ.பழ னிச்சாமி, செயலாளராக எஸ்.பாண்டி யன், செயல் தலைவராக எஸ்.அப்பன் ராஜ், பொருளாளராக வில்லியம் ராஜன் உள்ளிட்ட நிர்வாகக்குழு உறுப் பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மதுரையில் சிஜிஹெச்எஸ் மருத்துவமனை துவங்குதல், மத்திய நிர்வாக தீர்ப்பாயம் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் அமைப்பது, புதிய பென்சன் திட்டத்தை கைவிடுதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முக்தர் அப்பாஸ் நக்வி கூறுகிறார் நாடாளுமன்றத்தில் பெகாசஸ் குறித்த விவாதத்தை அனுமதிக்க முடியாது!

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் பெகாசஸ் வேவுபார்ப்பு விவ  காரத்தை பேசுவதற்கு அனுமதி அளிக் கப்படாது என்று மாநிலங்களவை துணைத் தலைவரும், ஒன்றிய அரசின் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்ச ருமான முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித் துள்ளார். நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரை, நவம்பர் 29 முதல் டிசம்பர் 23 வரை நடத்த ஒன்றிய அமைச்சரவைக் குழு பரிந்துரைத்துள்ளது. இந்தக் கூட்டத் தொடரில் விலைவாசி உயர்வு, வேலையின்மை அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. பெகா சஸ் வேவு மென்பொருள் மூலம் நீதி பதிகள், எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் வேவுபார்க்கப் பட்ட விவகாரத்தையும் எதிர்க்கட்சிகள் எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையிலேயே முக்தர் அப்பாஸ் நக்வி மேற்கண்டவாறு கூறியுள்ளார். “மக்களவை சபாநாயகர், மாநிலங்க ளவைத் தலைவர் முடிவின் அடிப்படை யில், நாட்டில் தற்போது நிலவும் அனைத்து விவகாரங்களையும் விவாதிக்க அரசு தயாராக உள்ளது.

மருத்துவமனை முறைகேடுகளை அம்பலப்படுத்தியவர் பீகாரில் சமூக ஆர்வலர் எரித்துப் படுகொலை!

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் எரித்துப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பீகார் மாநிலத்தில் சமூக ஆர்வலர்கள் கொலை செய்யப்படும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. அந்த வகையில், தற்போ தும் ஒரு சமூக ஆர்வலர் கொலை செய்யப் பட்டு இருக்கிறார். பீகாரில் உள்ள மதுபானி மாவட்டம் பெனிபேட்டி என்ற இடத்தை சேர்ந்தவர் புத்திநாத் ஜா (வயது 22). உள்ளூர் பத்திரி கையாளராக பணியாற்றி வந்த அவர், சமூக செயற்பாட்டாளராகவும் பல்வேறு முறைகேடுகள், ஊழல்களை அம்பலப் படுத்தி வந்ததாகத் தெரிகிறது. குறிப்பாக முறைகேட்டில் ஈடுபடும் மருத்துவமனை கள், போலி டாக்டர்கள் குறித்த தகவல் களை வெளியிட்டு வந்துள்ளார். இதனால், பல மருத்துவமனைகள் அபராதம் கட்ட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது டன், சில மருத்துவமனைகள் இழுத்து மூடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

NOV 07 – NOV 13 Page 16

NOV 07 – NOV 13 Page 16
திரைச்சீலை விழுந்த கிளாஸ்கோ மாநாடு - கிளாஸ்கோ, நவ. 15 -

திரைச்சீலை விழுந்த கிளாஸ்கோ மாநாடு - கிளாஸ்கோ, நவ. 15 -

காலநிலை குறித்த ஐநாவின் காப் 26 உச்சி மாநாடு கிளாஸ்கோ நகரில் நீண்ட பேச்சுவார்த்தைகளுக்கும், பேரங்களுக்கும் இடையில் முடிந்தது. 2015 பாரிஸ் உடன்படிக்கையில் எட்டப்பட்ட புவி வெப்ப உயர்வை 1.5 டிகிரிக்குள் கட்டுப்படுத்துதல் என்ற கோட்பாடு இன்னமும் உயிருடன் உள்ளது. கரியின் பயன்பாட்டைக் குறைத்தல், பசுமைக்குடில் வாயுக்கள் வெளியேற்றத்தைக் குறைத்தல், ஏழை நாடுகளுக்கு நிதியுதவி போன்ற முக்கிய அம்சங்கள் உள்ளடங்கிய தீர்மானம் ஏற்கப்பட்டது. இந்தியாவின் கடைசி நிமிட தீர்மான அறிக்கையில் “கரியை முற்றிலும் குறைத்தல்” என்ற வாசகத்திற்குப் பதில் “படிப்படியாகக் குறைத்தல்” என்ற (phasing out coal to merely phasing down) என்னும் நீர்த்துப்போகச்செய்த மாற்றத்துடன் தீர்மானம் நிறைவேறியது. சயிண்டிபிக் அட்வைஸ் (Scidntific advice) அமைப்பின் கூற்றுப்படி 1.5 டிகிரி என்ற குறிக்கோள் கிளாஸ்கோவில் போதுமான முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. 2023இல் எகிப்தில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள அடுத்த மாநாட்டில் இந்த விஷயம் எடுத்துச் செல்லப்படவுள்ளது.

நிறைவேறாத இலட்சியம்

1.5 என்ற குறிக்கோள் பூமியைக் காக்க உலகத் தலைவர்கள் அவசரமாக செயல்படவேண்டிய விஷயம் என்று மாநாட்டிற்கு தலைமை வகித்த யு. கே. கேபினட் மந்திரி அலோக் ஷர்மா கூறினார். இந்த கனவு கிளாஸ்கோவில் பலவீனமடைந்துள்ளது. இதன் நாடிநரம்புகள் வலுவற்றுப் போயுள்ளன. வரும் மாநாட்டிலேனும் வாக்குறுதிகள் செயல்வடிவம் பெற்றால் மட்டுமே 1.5 என்ற கனவு நிறைவேறும். நம் பூமி மெல்லிய ஒரு நூலில் தொங்கிக்கொண்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button