பில்கிஸ்பானு கொலை வழக்கில் 2 குற்றவாளிகள் ஜாமினில் விடுதலை
இந்திய மாதர் தேசிய சம்மேளனம் (NFIW) கண்டனம்

2002ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தில் கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ்பானு கும்பல் பாலியல் வன்கொடுமைக்குஆளாக்கப்பட்டார். அவரது குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் கும்பலால் படுகொலை செய்யப்பட்டனர். நீதிக்கான தொடர்ந்து போராட்டத்தை நடத்தினார். இந்திய மாதர் தேசிய சம்மேளனம் பில்கிஸ் பானுவிற்குஆதராவாக போராடியது.11 குற்றவாளிகளும் சிறையில் அடைக்கப்பட்டனர்.ஆனால் தண்டனை பெற்ற குற்றவாளிகள் அரசாலும் நீதித்துறையாலும் 2022ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டு சங் பரிவாரங்கள் சிறை வாசலில் மாலை அணிவித்து பட்டாசு வெடித்துக் வரவேற்கப்பட்டனர்.இது வெட்கித் தலைகுனிய வேண்டிய செயலாகும்.
இதைக் கண்டித்தும் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் போராடியது.பில்கிஸ் பானுவின் தொடர் போராட்டத்தால் குற்றவாளிகளை மீண்டும் சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் தண்டனை பெற்ற பிபின் சந்த் கன்னையா லால் ஜோசி, பிரதீப் ரமண்லால் மோதியா ஆகிய 2 குற்றவாளிகள் ஜாமினில் விடுவிக்கப்பட்டுஅவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்தும் உச்ச நீதிமன்றம் அண்மையில் பிறப்பித்த உத்தரவை இந்திய மாதர் தேசிய சம்மேளனம் வன்மையாக கண்டிக்கிறது.
இத்தகைய கொடூரமான பாலியல் குற்றவாளிகளுக்கு நீண்டகால சிறைவாசத்தைக் காரணமாக காட்டி பிணை வழங்குவதை ஏற்கமுடியாது. இவ்விரு குற்றவாளிகளும் பரோல்விடுப்பில் வெளியில்தான் இருந்துள்ளார்கள்.
உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள இந்த தீர்ப்பு பாதிக்கப்பட்ட பில்கிஸ்பானுவின் தரப்பு வாதத்தை கேட்காமலும் அவரது பதிலைக்கோராமல் ஒருதலைப்பட்சமாக எடுக்கப்பட்ட முடிவு. பல ஆண்டுகளாக பில்கிஸ்பானுவும் அவரது குடும்பத்தினரும் அனுபவித்து வரும் மனவேதனையை கணக்கில் கொள்ளவில்லை.
மேலும் அவர்களுக்கு அச்சத்தையும் பாதுகாப்பில்லாத நிலையையும் இது உருவாக்கும் என இந்திய மாதர் தேசிய சம்மேளனம் கருதுகிறது. இது தனிப்பட்ட வில்கின்ஸ் பானுவின் பிரச்சனை அல்ல ஒட்டுமொத்த
பெண்களுக்கான பிரச்சனையாகும்.
சமூகத்தில் நிலவும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைக்கு ஊக்கமளிக்கும் தீர்ப்பாகும்.பெண்களின் கண்ணியம் மற்றும் அடிப்படை உரிமைகள் மீதான தாக்குதலாகும். இஸ்லாமியர்களுக்கு எதிரான அச்சுறுத்தல் பாஜக அரசின் மனு நீதி கோட்பாட்டை நடைமுறைப்படுத்தும். செயலை தீர்ப்பு வெளிப்படையாக தெரிவிக்கிறது.
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடருகின்ற சூழலில் மிகக் கொடூரமான பாலியல் வழக்குகளில் கூட நீதியையும் பொறுப்பு ஏற்காத பிஜேபி அரசை இந்திய மாதர் தேசிய சம்மேளனம் வன்மையாக கண்டிப்பதோடு பில்கிஸ் பானுவிற்கு நீதி வழங்கப்படவேண்டும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ரத்து செய்யப்படவேண்டும் என்று இந்திய மாதர் தேசிய சம்மேளனம் வலியுறுத்துகிறது. பில்கிஸ் பானுவுடன் இணைந்து போராடும்.