கட்டுரைகள்

கடன் முழுமையாக செலுத்திய பிறகும் பத்திரம் விடுவிப்பதில் ஏன் காலதாமதம்?

கபில்தேவ் குமார்

தமிழ்நாடு முழுவதும் நிதி நிறுவனங்கள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களிடம் சொத்துப் பத்திரங்களை அடமானமாக வைத்து கடன் பெற்ற பொதுமக்கள், தங்களது கடனை முழுமையாகச் செலுத்திய பின்னரும் அடமானப் பத்திரத்தை திரும்பப் பெறுவதிலும், அடமானப் பதிவை முறையாக முடித்து வைப்பதிலும் தேவையற்ற கால தாமதம் மற்றும் அலைக்கழிப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது.

கடன் தொகை முழுமையாக செலுத்தப்பட்டவுடன் பொதுமக்களுக்கு அவர்களது அசல் பத்திரங்களை உரிய முறையில் ஒப்படைத்தல், அடமானப் பதிவை முடித்தல் மற்றும் அதற்கான ஆவணங்களை வழங்கவில்லை. இதில் தெளிவான காலக்கெடு மற்றும் ஒரே மாதிரியான நடைமுறையை பின்பற்றவில்லை, பத்திரப்பதிவுத் துறையும் நடைமுறைகள் குறித்து தெளிவான தகவலையும் வழங்கவில்லை. பொதுமக்களை மீண்டும் மீண்டும் நிதி நிறுவனங்களிடம் சென்று வருமாறு கூறப்படுகிறது. நிதி நிறுவனத்திடம் சென்று கேட்டால் எங்கள் நிதி நிறுவனத்திற்கு கடவுச்சொல் இன்னும் வழங்கவில்லை என்றும் கூறுகின்றனர்.

மேலும் பத்திரப்பதிவுத்துறை அலுவலர்களும் நிதி நிறுவனத்தினரும் கடன் முழுமையாக செலுத்திய பிறகு ஆவணம் பெற போராடிக் கொண்டிருக்கும் பொதுமக்களை ஏளனமாகவும், தரக்குறைவாகவும் நடத்தி அலைக்கழித்து மன உளைச்சலுக்கு ஆளாக்குகின்றனர்.

பொதுமக்கள் அலுவலகங்களுக்கும், நிதி நிறுவனங்களுக்கும் இடையே தேவையின்றி அலைக்கழிக்கப்படுவதை தடுத்து,

♦ வெளிப்படையான, விரைவான மற்றும் பொதுமக்களுக்கு எளிதான நடைமுறையை அமல்படுத்த வேண்டும்.

♦ ஒற்றைச்சாளர (single window) அல்லது ஒருங்கிணைந்த ஆன்லைன் முறையை ஏற்படுத்த வேண்டும்.

♦ அடமானப் பதிவு முடிப்பதற்கு தேவையான கடவுச்சொல் உள்ளிட்ட மின்னணு நடைமுறைகளை உரிய நேரத்தில் மேற்கொள்ள வேண்டும்.

♦ கடன் முழுமையாக செலுத்திய பொதுமக்களுக்கு அடமானப் பத்திரம் விடுவிப்பு மற்றும் அடமானப் பதிவு முடித்தலுக்கு காலக்கெடு நிர்ணயிக்கப்பட்ட ஒரே மாதிரியான நடைமுறையை தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை பாதிக்கப்பட்ட பொதுமக்கள் முன் வைக்கின்றனர்.

மேலும் கடனை முழுமையாக செலுத்திய பிறகு சொந்த பத்திரத்தை மீட்க பொதுமக்கள் ஏன் அலைக்கழிக்கப்பட வேண்டும் என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.

எனவே, தமிழ்நாடு அரசு பாதிக்கப்பட்டவர்களின் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு உரிய நடவடிக்கை எடுத்து தீர்வு காண வழிவகை செய்ய வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button