இந்தியாதமிழகம்

மக்கள் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கான மாற்றம் தேவை நடைபயணம்

நாடு முழுவதும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பரப்புரை

இந்திய அரசியல் சட்டம் அனைவருக்கும் நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும் என்கிறது. ஆனால் இந்த உயரிய இலக்குகளை நடைமுறைப்படுத்துவதற்குப் பதிலாக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் பெருகுகின்றன; சிலரிடம் செல்வமும் அதிகாரமும் குவிகின்றன; பெரும்பான்மை மக்களின் வாழ்க்கை அவல நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளது.

வேலையின்மை, விலைவாசி உயர்வு, விவசாய நெருக்கடி, வணிக மயமாகும் கல்வி; மருத்துவம், தொழிலாளர் உரிமைகள் பறிப்பு, பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான அநீதிகள், ஜனநாயக அமைப்புகளின் சுதந்திரத்தை முடக்குவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

இதனிடையே, மதவெறி, சாதிவெறியைத் தூண்டுவதும், சமூக வலைத்தளங்களில் வீராப்பு பேசுவதும், ரீல்ஸ்களில் மூழ்கிக் கிடப்பதும், அரசியலற்ற உள்ளீடுகளையே அரசியல் போலப் பேசுவதுமாக மலிந்து வருகின்றன.

இந்தச் சூழலில்.. ஆகஸ்ட் 6 ஆம் தேதி முதல் மக்களின் உண்மையான பிரச்சனைகளையும் அதற்கு மாற்றம் தேவை என்பதையும் எடுத்துரைக்கும் நடைபயணப் பரப்புரை நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் இந்தியக் கம்யூனிஸ்ட் கடசி முன்னெடுத்த இந்த பரப்புரை நடைபயணம் ஆகஸ்ட் 15ஆம் தேதி தேசியக் கொடியை ஏற்றிவைத்து நிறைவடைகிறது.

தமிழ்நாட்டில் நடைபெறும் நிறைவுநாள் நிகழ்ச்சியில், கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா, அமர்ஜித் கவுர், ஆனி ராஜா, ராமகிருஷ்ண பாண்டா ஆகிய நான்கு தலைவர்களும் பங்கேற்கின்றனர்.

டெல்லியில் செப்டம்பர் 1ஆம் தேதி எழுச்சிமிகு பிரமாண்டப் பேரணி நடைபெறுகிறது. தமிழ்நாட்டிலிருந்து ஒரு சிறப்பு ரயில் – டெல்டா பகுதியிலிருந்து செல்ல இருக்கிறது. இதேபோன்று நாட்டின் பல்வேறு முனைகளிலிருந்தும் செல்வதற்குத் தோழர்கள் தயாராக இருக்கின்றனர்.

வடசென்னை: இராயபுரத்தில் உள்ள சிங்காரவேலர் மணிமண்டபத்தில், கட்சியின் மாவட்டச் செயலாளர் த.கு.வெங்கடேஷ் வேம்புலி தலைமையில், கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் சிங்காரவேலர் சிலைக்கு மாலை அணிவித்து, நடைபயண பரப்புரை இயக்கத்தைத் தொடங்கிவைத்தார்.

சேலம்: பனைமரத்துப்பட்டி – வீரபாண்டி ஒன்றியத்தில், வீரபாண்டி ஒன்றியச் செயலாளர் எம். பாலன், சேலம் ஒன்றியச் செயலாளர் எஸ்.பி.கே.இராமச்சந்திரன் ஆகியோர் தலைமையில் தொடங்கிய பரப்புரை இயக்கத்தில், கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் சிறப்புரையாற்றினார். மாநில நிர்வாக குழு உறுப்பினர்கள் ஏ.மோகன், க.பாரதி, மாவட்ட செயலாளர் என்.கே.செல்வராஜ், மாநில குழு உறுப்பினர் ஏ.கந்தன், மாவட்டத் துணைச் செயலாளர் எம்.ராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நாமக்கல்: ஆகஸ்ட் 9 அன்று திருச்செங்கோட்டில் நடைபெற்ற பரப்புரை, அண்ணா சிலை முன்பு நிறைவடைந்தது. அங்கு நடைபெற்ற கூட்டத்திற்கு திருச்செங்கோடு நகரச் செயலாளர் எஸ்.சுகுமார் தலைமை தாங்கினார். கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், மாநில துணைச் செயலாளர் எம்.ரவி ஆகியோர் பரப்புரையின் நோக்கங்களை எடுத்துரைத்து உரையாற்றினர். மாவட்டச் செயலாளர் க.அன்புமணி, நகர துணைச் செயலாளர் பி.கார்த்திக் மற்றும் எஸ்.ராமகிருஷ்ணன், பி.தனசேகரன், சி.ஜெயராமன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.

தென்சென்னை: கண்ணகி நகரில், கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் வகிதா நிஜாம் பரப்புரை தொடங்கிவைத்து உரையாற்றினார்.

 

  • சைதாப்பேட்டையில் கட்சியின் மாநில கட்டுப்பாட்டுக் குழு தலைவர் கே.சுப்பராயன் எம்.பி பரப்புரையை தொடங்கிவைத்தார். மாவட்டச் செயலாளர் எஸ்.கே.சிவா, மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஏழுமலை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
  • தென்சென்னை எல்டாம்ஸ் சாலையில் தொடங்கிய பரப்புரை பட்டினப்பாக்கம் கடற்கரையில் நிறைவடைந்தது. கண்ணன் ஈவெரா, வித்யா, சந்துரு, மயிலை ப.கண்ணன் ஆகியோர் தலைமையில், மாவட்டச் செயலாளர் எஸ்.கே.சிவா தொடங்கிவைத்தார். இதில் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, எஸ்.கபாலி, மணிகண்டன், சி.பி.மாறன், கோவிந்தராஜூலு உள்ளிட்டோர் உரையாற்றினர். டாக்டர் வெங்கடாசலபதி நிறைவுரையாற்றினார்.

தென்காசி: கீழஆம்பூரில் கட்சியின் மாநிலத் துணைச்செயலாளர் நா.பெரியசாமி முன்னாள் எம்எல்ஏ பரப்புரையைத் தொடங்கிவைத்தார். மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் ஏ.பரமசிவன் தலைமை தாங்க, மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் இசக்கித்துரை, ஒன்றியச் செயலாளர் எஸ். சிவசுப்பிரமணியன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.

கோவை: பரப்புரையை கட்சியின் மாநிலப் பொருளாளர் எம்.ஆறுமுகம் தொடங்கிவைத்தார். மாவட்டச் செயலாளர் சி.சிவசாமி தலைமையில் ஒரு குழு, மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் கே.எம்.செல்வராஜ் மற்றும் மாநிலக் குழு உறுப்பினர் கலை அஸ்வினி தலைமையில் ஒரு குழு, மாவட்டத் துணைச் செயலாளர்கள் ஜே.ஜேம்ஸ், சி.தங்கவேல் ஆகியோர் தலைமையில் ஒரு குழு என மூன்று குழுக்களாகப் பிரிந்து மக்களை சந்தித்தனர்.

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தில் தேசியக் கட்டுபாட்டுக் குழு உறுப்பினர் இரா.முத்தரசன் பரப்புரையை தொடங்கி வைத்தார்.

திருவாரூர்: கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கேசவராஜ் தலைமையில், மாநில நிர்வாக குழு உறுப்பினர் பி.எஸ்.மாசிலாமணி பரப்புரையைத் தொடங்கி வைத்தார். மாநில கட்டுப்பாட்டுக் குழு செயலாளர் கோ.பழனிச்சாமி முன்னாள் எம்எல்ஏ, மாநில செயற்குழு உறுப்பினர் பி.பத்மாவதி முன்னாள் எம்எல்ஏ உள்ளிட்டோர் உரையாற்றினார்.

  • திருத்துறைப்பூண்டியில் மாநில கட்டுப்பாட்டுக் குழு செயலாளர் கோ.பழனிச்சாமி முன்னாள் எம்.எல்.ஏ., மாநிலக்குழு உறுப்பினர் கே.உலகநாதன் முன்னாள் எம்.எல்.ஏ. மாவட்டச் செயலாளர் எஸ்.கேசவராஜ் உள்ளிட்டோர் உரையாற்றினார்.
  • கோட்டூர் ஒன்றியத்தில் 49 ஊராட்சிகளில் ஒன்றியச் செயலாளர் எம்.செந்தில்நாதன் தலைமையில் தேசிய கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் இரா.முத்தரசன் தொடங்கி வைத்தார். விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் கே.உலகநாதன் முன்னாள் எம்எல்ஏ, மாணவர் பெருமன்ற மாநிலத் தலைவர் இப்ராஹிம், என்.மணிமேகலை, ஜெ.பி.வீரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

விருதுநகர்: திருவில்லிப்புத்தூர், வத்திராயிருப்பு, அருப்புக்கோட்டை, கிருஷ்ணன் கோவில் ஆகிய ஊர்களில் பரப்புரை நடைபெற்றது. கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் டி.எம்.மூர்த்தி, மாநில செயற்குழு உறுப்பினர் தி.ராமசாமி முன்னாள் எம்எல்ஏ, மாவட்டச் செயலாளர் எஸ்.செந்தில்குமார் உள்ளிட்டோர் உரையாற்றினர்.

  • திருவில்லிபுத்தூர் பேரூராட்சியில் பரப்புரையை மாநில துணைச் செயலாளர் நா.பெரியசாமி துவக்கி வைத்தார். இராஜபாளையம் கிழக்கு ஒன்றியத்தில் ஏ.ஜெயகுமார் தலைமையில், ஆர்.பி.முத்துமாரி துவக்கிவைத்தார்.

மயிலாடுதுறை: தில்லையாடியில், தில்லையாடி வள்ளியம்மை நினைவிடத்தில் கட்சியின் தேசியக் கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் இரா.முத்தரசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பரப்புரையை தொடங்கிவைத்தார். மாவட்டச் செயலாளர் அ.சீனிவாசன், வி.ச. மாவட்டச் செயலாளர் கே.எஸ்.சிவராமன், வி.ச. மாவட்டச் தலைவர் பெ.வீரராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தருமபுரி: இண்டூர் பேருந்து நிலையம் அருகில், கட்சியின் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர்கள் க.பாரதி, த.லெனின் ஆகியோர் கோரிக்கையை விளக்கி பேசினர். கட்சியின் வட்டாரச் செயலாளர் பி.மாது தலைமை தாங்க, மாவட்டச் செயலாளர் எஸ்.கலைச்செல்வம், விவசாய சங்க மாவட்ட செயலாளர் எஸ்.சின்னசாமி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.மாதேஸ்வரன், எம்.மாதையன், எம்.சிவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  • இதே போன்று பாலக்கோடு பேருந்து நிலையம் அருகில், வட்டாரச் செயலாளர் பி.மாதப்பன் தலைமையில் பரப்புரை நடைபெற்றது. நல்லம்பள்ளி ஒன்றியத்தில் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர்கள் எம்.நவீன்குமார், ஆர்.சுப்பிரமணி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

திருப்பத்தூர்: திருப்பத்தூரில் மாவட்டச் செயலாளர் நந்தி தலைமையில், காந்தி சிலைக்கு மாலை அணிவித்து, மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் த.லெனின் பரப்புரையைத் தொடங்கிவைத்து உரையாற்றினார்.

  • கந்திலி ஒன்றியம் கஜநாயக்கன்பட்டியில் ஒன்றியச் செயலாளர் ஆர்.அண்ணாமலை தலைமையில், மாணவர் பெருமன்றத்தின் மாநிலச் செயலாளர் பா.தினேஷ் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

திருப்பூர் புறநகர்: திருப்பூர் புறநகர் மாவட்டம் காங்கேயம் ஒன்றியம் சிவன்மலை கிராமம், சிக்கரசம்பாளையம் கிளையில், நடைபயண பரப்புரையை கட்சியின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் மு.கண்ணகி துவக்கி வைத்தார். இதில் கட்சியின் புறநகர் மாவட்டத் துணைச் செயலாளர் பி.நதியா, மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.முத்துக்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.

அரியலூர்: அரியலூர் கயர்லாபாத் கிராமத்தில் து.பாண்டியன் தலைமை தாங்க, மாவட்ட பொருளாளர் ஜி.ஆறுமுகம் பரப்புரையை துவக்கி வைத்தார். கல்லக்குடி மாரியம்மன் கோயில் அருகே டி.தண்டபாணி துவக்கி சிறப்புரையாற்றினார். பின்னர் ஊர்வலமாக சென்று மக்களிடையே துண்டு பிரசுரம் வழங்கினார்கள்.

குமரி: குமரியில் ஜீவா மணிமண்டபம் அருகில் இருந்து, கட்சியின் நாகர்கோவில் மாநகரச் செயலாளர் கே.நாகராஜன் தலைமையில், மாவட்டக் குழு உறுப்பினர் வி.அருள்குமார் பரப்புரை தொடங்கி வைத்தார். கட்சியின் மாவட்டச் செயலாளர் தா.சுபாஷ் சந்திரபோஸ், துணைச் செயலாளர்கள் எஸ்.அனில் குமார் உட்பட பல தோழர்கள் பங்கெடுத்தனர்.

திருச்சி: திருச்சி மணப்பாறை தெற்கு ஒன்றியம் புத்தாநத்தம் கடைவீதியிலும், வையம்பட்டி ஒன்றியம் குளத்துரம்பட்டியிலும் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. மணப்பாறையில் நகரச் செயலாளர் தங்கராஜ் தலைமையில், கட்சியின் முன்னாள் மாநில நிர்வாக குழு உறுப்பினர் இந்திரஜித் பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார்.

மதுரை மாநகர்: மதுரை தெற்கு பகுதியில் எம்.பாலமுருகன் தலைமையில் பரப்புரை இயக்கம் நடைபெற்றது. இதில் எம்.நந்தாசிங், எம்.எஸ்.முருகன், ஜி.பாலகிருஷ்ணன், தத்துவத்துரை, முத்துலெட்சுமி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், கட்சியின் நகரச் செயலாளர் கே.செந்தில் ஆறுமுகம், தாலுகா செயலாளர் ஜி.பாபு ஆகியோர் தலைமையில், கட்சியின் மாநிலத் துணைச் செயலாளர் நா.பெரியசாமி முன்னாள் எம்எல்ஏ, மாவட்டச் செயலாளர் பி.கரும்பன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரத்தில் முன்னாள் மாவட்டச் செயலாளர் எல்.மேகநாதன் கொடியேற்றித் தொடங்கி வைத்தார், மாவட்டச் செயலாளர் ஏ.ராஜ்குமார், மாவட்ட துணைச் செயலாளர்கள் வீராசாமி, எ.பாலாஜி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தேனி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் ஒன்றியச் செயலாளர் பா.பிச்சைமணி தலைமையில், திம்மரசநாயக்கனூர், பிள்ளைமுகம்பட்டி, தி.பொம்மிநாயக்கன்பட்டி, மல்லையாபுரம் ஆகிய கிராமங்களில் நடைபெற்ற பரப்புரையில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வே.பரமேஸ்வரன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் பி.மணவாளன், க.முனீஸ்வரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button