தமிழகம்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்களில் மே தின விழா

140வது மே தின விழா 01.05.2026 அன்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகங்களிலும் ஏஐடியுசி சங்க அலுவலகங்களிலும் கொடியேற்றிக் கொண்டாடப்பட்டது.

பாலன் இல்லம்

சென்னை – தியாகராயர் நகரில் உள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைமை அலுவலகமான “பாலன் இல்லத்தில்” மே தின விழா கொண்டாடப்பட்டது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் டி.எம்.மூர்த்தி தலைமை தாங்கினார். கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் இரா.முத்தரசன் கட்சியின் செங்கொடியை ஏற்றி வைத்தார். மாநில துணைச் செயலாளர் நா.பெரியசாமி முன்னிலை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர்கள் வகிதா நிஜாம், டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், தென் சென்னை மாவட்டச் செயலாளர் எஸ்.கே.சிவா மற்றும் பா.செந்தில், மணிகண்டன், சௌமியா உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

சேலம்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்ட அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர் அ.மோகன் மே தினக் கொடியேற்றினார். மாவட்டத் துணைச் செயலாளர் எம்.ராமன் தலைமை தாங்க, எம்.முனுசாமி, ஆர்.எல்.முத்துராஜ கோபால், ஆர்.மோகனரங்கன், ஜெ.கணியன் பூங்குன்றன், பா.நேதாஜி மற்றும் எல். சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நங்கவள்ளியில் ஒன்றியச் செயலாளர் பழ.ஜீவானந்தம் தலைமையில், காப்பரத்தாம்பட்டி அகிலா ஸ்பின்னிங் மில்லில் தொடங்கி, ஜலகண்டாபுரம், சூரப்பள்ளி, வனவாசி, நங்கவள்ளி ஒன்றியம் முழுவதும் 47 இடங்களில் கொடியேற்றப்பட்டது. இதில் ஒன்றியத் துணைச் செயலாளர் கே.கிருஷ்ணன், மாவட்டக் குழு உறுப்பினர் எம்.கோகுலகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

விருதுநகர்

விருதுநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தில், மாவட்டச் செயலாளர் செந்தில்குமார் தலைமையில், மூத்த தோழர் காதர் முகையதீன் கொடியேற்றினார். மாநிலக் குழு உறுப்பினர் பாலமுருகன் சிறப்புரையாற்றினார். இதில் சக்கணன், மாரீஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம் மேற்கு, சாத்தூர், காரியாபட்டி, சிவகாசி, ராஜபாளையம் கிழக்கு ஆகிய இடங்களிலும் கொடியேற்றப்பட்டது.

திருவாரூர்

திருவாரூர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர் கேசவராஜ் முன்னிலையில், நாகை நாடாளுமன்ற உறுப்பினர் வை.செல்வராஜ் கட்சி கொடி ஏற்றினார். நகரச் செயலாளர் செல்வம், முன்னாள் நகரச் செயலாளர் மாரியப்பன் ஆகியோர் பங்கேற்றனர். மடவாடியார் தெருவில் கட்சி கொடியை, இரண்டாவது வார்டு செயலாளர் ராஜ மணிகண்டன் ஏற்றினார். வீ.தர்மதாஸ், எம்.ஏ.மாரியப்பன், ஜெயராமன் மே தின உரை ஆற்றினார்கள். நகரின் பல்வேறு இடங்களில் கட்சி கொடி ஏற்றப்பட்டது

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டக் கட்சி அலுவலகத்தில், மாவட்டச் செயலாளர் பி.வி.சீனிவாசன் தலைமையில், காஞ்சி தொகுதிக் குழு உறுப்பினர் பி.ஸ்டாலின் கொடியேற்றினார். ஓரிக்கை ராணுவ சாலையில் எஸ்.சந்திரன் கொடியேற்றினார். நாராயண பாளையம் தெருவில் காஞ்சிபுரம் தொகுதிச் செயலாளர் ஜே.கமலநாதன், சிங்கப்பெருமாள் கோவில் தெருவில் தொகுதிக் குழு உறுப்பினர் கே.சிங்காரவேல், ரங்கசாமி குளம் அம்மா உணவகம் அருகில் மாவட்டக் குழு உறுப்பினர் டி.சுந்தரமூர்த்தி தலைமையில், மாவட்டச் செயலாளர் பி.வி.சீனிவாசன் உரையாற்றினார்.

காஞ்சிபுரம் மாவட்ட ஏஐடியுசி சார்பில், பல்லாவரம் கண்டோன்மென்ட், கல்பாக்கம் அணு ஆற்றல் ஊழியர் சங்கம், டிஏஇ கூட்டுறவு சங்கம், சென்ட்ரல் வேர் ஹவுஸ், மறைமலை நகர் செக்பாயிண்ட், ஊரி ஆட்டோமோடிவ்ஸ், விர்கோ பாலிமர், புரோ வெண்டாஸ், சிறுசேரி கிரவுன், மதுராந்தகம் கான்கார்ட் டெக்ஸ்டைல்ஸ், உள்ளாட்சி, ஆட்டோ, கட்டடம், உள்ளிட்ட சங்கங்கள் மற்றும் ஆலை வாயில்களிலும் செங்கொடி ஏற்றப்பட்டது.

நெல்லை

நெல்லை மாவட்ட ஏஐடியுசி அலுவலகத்தில், மாவட்ட பொதுச்செயலாளர் ஆர்.சடையப்பன் தலைமையில், நெல்லை மண்டலச் செயலாளர் ஏ.வெடிகண்ட பெருமாள் கொடியேற்றினார். ஏஐடியுசி மாநிலச் செயலாளர் எஸ்.சின்னச்சாமி சிறப்புரையாற்றினார்.

வள்ளியூரில் லோடுவேன் ஓட்டுநர் சங்கச் செயலாளர் சுந்தர் கொடியேற்றினார். களக்காடு ஒன்றியத்தில் கட்சி அலுவலகம், வடகரை, கட்டளை, கீழப்பத்தை, ஏர்வாடி, திருமங்கனேரி ஆகிய இடங்களில் கொடியேற்றப்பட்டது. இதில் களக்காடு ஒன்றியச் செயலாளர் எம்.லெனின் முருகானந்தம், எஸ்ஏபி பாலன், சுகுமாறன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அம்பை-சேரை ஒன்றியத்தில் வி.கே.புரம், அம்பை சிவந்திபுரம் ஆகிய இடங்களில் கொடியேற்றப்பட்டது. இதில் ஒன்றியச் செயலாளர் பி.முருகன், அம்பை நகரச் செயலாளர் வி.வடிவேல உள்பட பலர் கலந்து கொண்டனர். பத்தமடையில் நகரச் செயலாளர் என்.பி.ஷேக் தலைமையில் மூன்று இடங்களில் கொடி ஏற்றப்பட்டது.

நெல்லை டவுன் கூலித் தொழிலாளர்கள் சங்கத்தில் ஏஐடியுசி கொடியை மாநிலச் செயலாளர் எஸ். சின்னச்சாமி, சிபிஐ கொடியை மாவட்டச் செயலாளர் ஆர். சடையப்பன் ஆகியோர் கொடி ஏற்றினார்கள். நெல்லை அரசு போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகத்தில் கொடியேற்றப்பட்டது. கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் சங்கத் தலைவர் எம்.சுடலைக்கண்ணு தலைமையில் கொடியேற்றப்பட்டது.

மணிகண்டம் ஒன்றியம்

மணிகண்டம் ஒன்றியம் சோமரசம்பேட்டை அலுவலகத்தில் எஸ்.பத்மாவதி தலைமையில், கட்டடத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் எம்.ஆர்.முருகன் கொடி ஏற்றினார். நாச்சிகுறிச்சியில் என்.பாஸ்கரன் தலைமையில், சிபிஐ மணிகண்டம் ஒன்றியத் துணைச் செயலாளர் கே.மேகராஜ் கட்சிக் கொடியினை ஏற்றினார். பாரதி நகரில் கே.ஜெயலெட்சுமி தலைமையில், கே.என்.ஜெகநாதன் கட்சி கொடியினை ஏற்றி வைத்தார். சபரி நகரில் ஏ.இன்னசென்ட் விமலாமேரி கட்சி கொடியினை ஏற்றினார். தாயனூரில் மாரியாயி தலைமையில், எஸ்.லெட்சுமிபிரபா கட்சி கொடியினை ஏற்றி வைத்தார்.

மணப்பாறை

மணப்பாறையில் பல்வேறு இடங்களில் கொடி ஏற்றப்பட்டது இதில் கட்சியின் புறநகர் மாவட்டச் செயலாளர் பழனிசாமி, பொருளாளர் ஜனசக்தி உசேன், ஒன்றியச் செயலாளர் ராஜேந்திரன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் தங்கராசு, ரவிச்சந்திரன், கணேசன் ஆகியோர் பங்கேற்றனர்.

மருங்கபுரி ஒன்றியம் கள்ளக்கம்பட்டி, காரப்பட்டி, பொன்னம்பட்டி பேரூராட்சி, அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஏஐடியூசி கொடியேற்றப்பட்டது. இதில் ஒன்றியச் செயலாளர் ஆறுமுகம், துணைச் செயலாளர் கோவிந்தராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்

வையம்பட்டி ஒன்றியம் என் பூலாம்பட்டி, பாம்பாட்டி, பட்டிமம்பத்தை பகுதிகளில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கொடியேற்றப்பட்டது. இதில் வையம்பட்டி ஒன்றியச் செயலாளர் தங்கராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்

திருவெறும்பூர் கணேசா ரவுண்டானாவில், ராதாகிருஷ்ணன் தலைமையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, ஏஐடியூசி கொடிகள் ஏற்றப்பட்டன. கட்சியின் முன்னாள் மாநிலக் குழு உறுப்பினர் செல்வராஜ் கட்சி கொடியேற்றினார். ஜெயக்கொடி ஏஐடியுசி கொடியேற்றினார். இதில் புறநகர் மாவட்டச் செயலாளர் ராஜ்குமார், பக்கிரிசாமி ஆகியோர் மே தின உரை நிகழ்த்தினர். லால்குடி நகரத்தில் குணசேகரன், உப்பிலியா புரத்தில் மருதை, துறையூரில் கணேசன், தொட்டியத்தில் மூர்த்தி, தா.பேட்டையில் கந்தசாமி. முசிறியில் சண்முகம் ஆகியோர் கொடியேற்றினர்.

தஞ்சை

தஞ்சை மாவட்ட ஏஐடியுசி சார்பில், மாவட்ட அலுவலகத்தில், மாவட்டத் தலைவர் வெ.சேவையா தலைமையில், மாநகரச் செயலாளர் முத்துக்குமரன் முன்னிலையில், மாவட்ட செயலாளர் கோ.சக்திவேல் கட்சி கொடியினை ஏற்றினார், ஏஐடியூசி கொடியினை தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் சி.சந்திரகுமார் ஏற்றினார். இதே போல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கொடி ஏற்ற்ப்பட்டது.

நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஏஐடியுசி சார்பில் மே தின விழா கொடியேற்றி கொண்டாடப்பட்டது. திருச்செங்கோடு நகர கட்சி அலுவலகத்தில், நகரச் செயலாளர் எஸ்.சுகுமார் தலைமையில், மாவட்ட செயலாளர் க.அன்புமணி கொடியேற்றி சிறப்புரையாற்றினார். ஏஐடியூசி மாவட்ட பொதுச் செயலாளர் பி.தனசேகரன், ஏஐடியூசி மாவட்ட செயலாளர் எஸ்.ராமகிருஷ்ணன் மற்றும் என்.செல்வராஜ், பி.கார்த்திக், ஆர்.கோபிராஜ், டி.கே.சுப்பிரமணி, ஏஐடியூசி ஏ.குமார் ஆகியோர் மே தின வரலாறு குறித்து உரையாற்றினர்.

திருச்செங்கோடு ஒன்றியம் சன்னபாறை, வட்டூர் பள்ளிபாளையம் பகுதியில் ஒன்றிய செயலாளர் கே.முரளிகிருஷ்ணன் தலைமையில் கட்சி கொடியேற்றிக் கொண்டாடப்பட்டது. நாமக்கல் எஸ்.பழையபாளையம் கட்சி அலுவலகத்தில், மாவட்டக்குழு உறுப்பினர் பி.வி.சிவகுமார் தலைமையில் மூத்த தோழர் எஸ்.முத்துசாமி கட்சி கொடியை ஏற்றி வைத்தார். ராசிபுரத்தில் எஸ்.மணிமாறன் தலைமையில் கட்சி கொடி ஏற்றி மே தினம் கொண்டாடப்பட்டது. வெண்ணந்தூரில் பி.ஆர்.செங்கோட்டுவேல் தலைமையில் கட்சி கொடி ஏற்றி மே தினம் கொண்டாடப்பட்டது.

ஏஐடியூசி சுமைப்பணி சங்கம் சார்பாக அண்ணாசிலை ஸ்டாண்ட் உட்பட ஆறு இடங்களில் ஏஐடியூசி மாவட்ட பொதுச் செயலாளர் பி.தனசேகரன் தலைமையில் 183 தொழிலாளர்களுக்கு சிவப்புத்துண்டு அணிவித்து கொண்டாடப்பட்டது.

திருப்பூர் – காங்கேயம்

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில், ஏஐடியூசி – சிஐடியு சார்பாக மே தினப் பொதுக்கூட்டம், ஏஐடியூசி ஒன்றியத் தலைவர் என்.செல்லமுத்து தலைமையில் நடைபெற்றது. ஏஐடியூசி சார்பில் பி. நதியா, சிஐடியு சார்பில் ஆர். மைதிலி ஆகியோர் சிறப்புரையாற்றினர். ஏஐடியூசி சார்பாக எம்.ராஜேந்திரன், எஸ்.பொன்னுசாமி, வி.மணிமேகலை, செ.அழகு மீனா, பி. பால்ராஜ், தங்கராஜ், சிஐடியு சார்பாக இரா.செல்வராஜ், எம்.கணேசன், பி.வேலுச்சாமி, கே. சித்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button