இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஐந்து தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்தத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் விவரங்களை, கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் மார்ச் 29 ஆம் தேதி அறிவித்தார். அவை வருமாறு:
- திருத்துறைப்பூண்டி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் – க.மாரிமுத்து பி.காம்.,

2. தளி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் – டி.ராமச்சந்திரன் பி.எஸ்சி. எல்.எல்.பி.,

3. பவானிசாகர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் பி.எல்.சுந்தரம்

4. திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ரவி (எ) எம்.சுப்பிரமணியம்

5. திருவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் பி.மகாலிங்கம் எம்.ஏ, பி.எட்.,

வேட்பாளர்களின் வாழ்க்கைக் குறிப்புகள்:
-
திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் க.மாரிமுத்து – வாழ்க்கைக் குறிப்பு
க.மாரிமுத்து – 55
தகப்பனார் பெயர் – கண்ணு
கல்வி நிலை – வணிகவியல் இளங்கலைப் பட்டப்படிப்பு
மனைவி – ஜெயசுதா
மகன் 1 – ஜெயவர்மன்
மகள் 2 – தென்றல்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்த ஆண்டு 1994, திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியச் செயலாளராக பணியாற்றியவர். கட்சியின் முழுநேர ஊழியர்.
தற்போது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக்குழு உறுப்பினராக செயல்பட்டு வருகிறார்.
2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திருத்துறைப்பூண்டி தொகுதியில் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு மக்கள் பணியாற்றிய இவர் மீண்டும் இதே தொகுதியில் போட்டியிடுகிறார்.
2. தளி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் டி.ராமச்சந்திரன் – வாழ்க்கைக் குறிப்பு
இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தளி தொகுதி வேட்பாளர் டி.இராமச்சந்திரன் (58) சட்டப்படிப்பு முடித்தவர்.
இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியில் கடந்த 2007 ஆம் ஆண்டில் இணைந்து, தொடர்ந்து செயல்பட்டு வருபவர்.
சட்டமன்றத் தேர்தல்களில் தளி தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர். 2006 மற்றும் 2011 மற்றும் 2021 ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலில் மூன்று முறை வெற்றி பெற்று தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்டு வருகிறார்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளர், கட்சியின் தேசியக் குழு உறுப்பினர், மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் போன்ற பொறுப்புகளில் செயல்பட்டு வருகிறார். ஹோசூர் தொழிற்சாலை வளர்ச்சிக்கு பாடுபட்டு வருபவர்.
விவசாயிகளின் நிலவுரிமைக்கும், மலைப்பகுதி மக்கள் மருத்துவ வசதிக்கும் பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்.
இவரது வாழ்விணையர் கல்பனாவும் வழக்கறிஞர். இவர்களுக்கு திரிஷா, சந்தியா என இரு மகள்களும், பிரதீப் என்ற மகனும் இருக்கிறார்கள்.
அடித்தட்டு மக்களின் வாழ்வுரிமைக்கான போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருபவர். இதனால் சில வழக்குகளை எதிர் கொண்டு வருபவர். சில நேரங்களில் சிறை சென்ற அனுபவம் பெற்றவர். கட்சியின் சட்டமன்றக் கட்சி தலைவராக செயல்பட்டு வந்தார். தளித் தொகுதியில் ஐந்தாவது முறையாக வேட்பாளராக போட்டியிடுகிறார்.
-
பவானிசாகர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் பி.எல்.சுந்தரம் – வாழ்க்கைக் குறிப்பு
பி.எல்.சுந்தரம் – 57
தகப்பனார் பெயர் – லட்சுமணன்
கல்வி நிலை – 9 ஆம் வகுப்பு
மனைவி – பி.கே.லதா
மகன் 1 – சு.சேகுவேரா
பி.எல்.சுந்தரம், (வயது 57), பவானிசாகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பனையம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர்; இவரது பெற்றோர் விவசாயத் தொழிலாளிகள்; 9 ம் வகுப்பு வரை படித்துள்ளார்.
இவரது மனைவி, பி.கே.லதா, கிராம அஞ்சலக ஊழியராக பணிபுரிந்து வருகிறார்; ஒரே மகன் பெயர்: சேகுவேரா.
1989 ஆம் ஆண்டிலிருந்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து,தொடர்ந்து பணியாற்றி வருகிறார். 2006- ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில், பவானிசாகர் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்று, பணியாற்றியவர்.
2011 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பவானிசாகர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று, சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.
சட்டமன்ற தொகுதி மக்கள் கோரிக்கைகளை கேட்டுப் பெற்று, அவைகள் மீது தீர்வு காண தாளவாடி, அரேப்பாளையம், கடம்பூர், சத்தியமங்கலம், பவானிசாகர், புஞ்சை புளியம்பட்டி ஆகிய ஆறு இடங்களில் அலுவலகம் அமைத்து செயல்பட்டு வருகிறார்.
சத்தியமங்கலத்திற்கு அரசு கல்லூரி, தாளவாடி தனி வட்டம், சத்தியமங்கலத்தில் நகர்புற மருத்துவ மனை போன்றவைகள் கிடைக்க காரணமாக இருந்தவர்.
2016 ஆம் ஆண்டு தேர்தலில் மக்கள் நல கூட்டணியிலும், 2021 ஆம் ஆண்டில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆதரவுடனும் பவானிசாகர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு மக்களுடன் நெருக்கமான உறவில் இருந்து வருபவர். சமூகத்தின் அனைத்துப் பிரிவு மக்களின் பேரன்பையும், நன் மதிப்பையும் பெற்றுள்ளவர்.
விவசாயத் தொழிலாளர் சங்கம், பழங்குடி மக்கள் சங்கம், அமைப்புசாரா தொழிலாளர் சங்கம் போன்ற அமைப்புகளில் இணைந்து செயல்பட்டு வருபவர். அடித்தட்டு மக்களின் கல்வி மற்றும் மருத்துவ சிகிச்சைக்காக உதவி செய்து வருபவர்.
-
திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் எம். ரவி (எ) சுப்பிரமணியம் – வாழ்க்கைக் குறிப்பு
பெயர் – ரவி (எ) எம்.சுப்ரமணியன், வயது 69
தகப்பனார் பெயர் – எஸ்.முத்துசாமி (மறைவு)
தாயார் – எம்.நாச்சியம்மாள் (மறைவு
மனைவி – எஸ்.கஸ்தூரி
மகள் – மருத்துவர் எஸ்.நிவேதிதா MD (Pead)
கல்வி நிலை – எஸ்.எஸ்.எல்.சி.
முகவரி – 251, பி.எஸ்.சுந்திரம் ரோடு, பாளையக்காடு, திருப்பூர் 641 601
கட்சியில் தற்போதைய பொறுப்பு: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர்.
ரவி (எ) எம்.சுப்பிரமணியம் அவர்களின் குடும்பம் கம்யூனிஸ்ட் கட்சி குடும்பமாகும். மறைந்து விட்ட இவரது, தாயும், தந்தையும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்தவர்களாவர். இவரது மனைவியும், மகளும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களாக உள்ளனர். தோழர் ரவி (எ) எம்.சுப்பிரமணியம் பள்ளியில் படிக்கும் காலத்திலேயே கட்சியின் மாணவர் அமைப்பான அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்திலும், இளைஞர் அமைப்பான அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்திலும் உறுப்பினராக இருந்து செயல்பட்டவர்.
1973 ஆம் ஆண்டு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினரானார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் வட்டாரச் செயலாளராகவும், 2009 ஆம் ஆண்டு முதல் 2022 வரை திருப்பூர் மாவட்டச் செயலாளராகவும் செயல்பட்டவர். தற்போது இந்தியக் கம்யூனிஸ்ட கட்சியின் மாநில துணைச் செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார்.
இவர் கடந்த 1986 முதல் 1991 வரை திருப்பூர் நகரமன்ற உறுப்பினராக செயல்பட்டவர். இந்த தொகுதியில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக போட்டியிடுகிறார்.
-
திருவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் பி.மகாலிங்கம் எம்.ஏ, பி.எட் – வாழ்க்கைக் குறிப்பு
பி.மகாலிங்கம் – 52
மனைவி பெயர் – எஸ். புனிதா பி.எஸ்சி, எம்.ஏ. பி.எட்
அரசு சமூக நீதி பெண்கள் விடுதி, காப்பாளனி, திருவில்லிபுத்தூர்
குழந்தைகள்
1. எம். சந்தோஷ் பிரியா பி.ஈ (சிவில்) வேலை: நகராட்சி பொறியாளர், விருதுநகர் நகராட்சி
2. எம். மாதேஷ் எம்.பி.பி.எஸ் இறுதி ஆண்டு மாணவர், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி
கட்சியில் வகிக்கும் பொறுப்பு:
1. வத்திராயிருப்பு தாலுகா துணைச் செயலாளர்
2. விருதுநகர் மாவட்டக்குழு உறுப்பினர்
3. வத்திராயிருப்பு கூட்டுறவு பண்டகச் சாலையில் 2013 முதல் 2023 வரை இரண்டு முறை நிர்வாகக்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு பணியாற்றினார்.
தொழில்: விவசாயம்
ஊர்: கொடிக்குளம் பேரூராட்சி
நெடுங்குளம் கிராமம்
இருப்பு: கிருஷ்ணன் கோவில்