உள்ளூர் செய்திகள்

வேலை நேரத்தை 12 மணி நேரமாக திருத்தி இருப்பது உழைக்கும் மக்களுக்கு செய்யும் துரோகம் – எம் ஆறுமுகம் பேச்சு.

செய்தித்தொகுப்பு: A P மணிபாரதி

கோவை: தொழிற்சாலைகள் சட்டப்படி தொழிலாளர்களுக்கு 8 மணி நேரம் வேலை என்ற உரிமை வழங்கப்பட்டிருந்தது. கடந்த 12ம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் எட்டு மணி நேரம் வேலை என்பதை 12 மணி நேரமாக உயர்த்தி சட்ட திருத்தம் 65 A செய்யப்பட்டுள்ளது.

இதற்கு தொழிலாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தொழிற்சங்கங்களும் இந்த சட்ட திருத்தத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந்த நிலையில் இன்று 21.04.2024 மாலை 5 மணிக்கு கோவை மத்திய தந்தி அலுவலகம் முன்பு ஏ.ஐ.டி.யூ.சி. சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயலாளர் எம். ஆறுமுகம் தலைமை தாங்கினார். அவர் பேசும்போது, “எட்டு மணி நேரம் வேலை என்பது தொழிலாளர்கள் போராடி பெற்ற உரிமை. குறிப்பாக ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கம் போராடி பெற்ற உரிமை. அந்த உரிமையை தமிழக அரசு தற்போது பரித்துள்ளது. மத்திய அரசு தொழிலாளர் நல சட்டங்களை திருத்தியபோதும், பிற மாநில அரசுகள் இந்த திருத்தத்தை செய்யாத நிலையில், தமிழக அரசு முந்திக்கொண்டு திருத்தம் செய்துள்ளது வருத்தம் அளிக்கிறது.

தொழிற்சங்க சட்டம் வெள்ளையர் ஆட்சி காலத்தில் 1926ல் கொண்டு வரப்பட்டது. தொழில் தகராறு சட்டம் 1947 லும், தொழிற்சாலைகள் சட்டம் 1948ம் உருவாக்கப்பட்டது.

மோடி ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பின் தொடர்ச்சியாக தொழிலாளர் உரிமைகள் பறிக்கப்படு வருகின்றன. 44 தொழிலாளர் நல சட்டங்கள் நான்கு சட்டங்களாக சுருக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு கொண்டுவந்துள்ள ( 65 A ) இந்த சட்ட திருத்தம் என்பது உழைக்கும் மக்களுக்கு செய்யும் துரோகம் ஆகும் என்றும் எம்.ஆறுமுகம் கூறினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொதுச் செயலாளர் சி. தங்கவேல், சி.சிவசாமி, பி.மௌனசாமி, கட்டிட தொழிலாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் என். செல்வராஜ், கோயமுத்தூர் லேபர் யூனியன் பொதுச் செயலாளர் ஆர்.பாலகிருஷ்ணன், மு.வ. கல்யாணசுந்தரம், ஜே. ஜேம்ஸ், என்.சோமசுந்தரம், கோட்டை நாராயணன், சி. நந்தினி, ராபர்ட் ப.பா. ரமணி, டி. கந்தவேல், செல்வராஜ், சுமதி கந்தசாமி உட்பட ஏராளமானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button