விளையாட்டு

ஆஸ்திரேலிய ஓபன் தகுதி சுற்று இந்தியர்கள் அடுத்தடுத்து அதிர்ச்சி தோல்வி

நடப்பாண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொட ரில் தற்போது தகுதி சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் ராமநாதன், இத்தாலி வீரர் மார்கோவிடம் 6-3, 7-5 என்ற செட் கணக்கில் வீழ்ந்தார். மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் அங்கிதா ரெய்னா, உக்ரைன் வீராங்கனை லெசியாவிடம் 6-1, 6-0 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார். யுகி பாம்பரி மட்டுமே வெற்றி ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் யுகி பாம்பரி, போர்ச்சுக்கல் வீரர் ஜோவோவை 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி தகுதி சுற்றின் அடுத்த கட்டத்திற்கு முன்னேறினார். குணேஸ்வரன் இன்று மோதல் புதனன்று நடைபெறும் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் குணேஸ்வரன், ஜெர்மனி வீரர் மெர்ட்டரை எதிர்கொள்கிறார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button