தமிழகம்

அரசு அறிவித்த கரும்பு விலை ரூ.33

தமிழக அரசு இந்தாண்டு பொங்கல் தொகுப்புடன் ஒரு முழுக்கரும்பை மக்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளது. தமிழக அரசின் இந்த ஏற்பாடு நல்ல விஷயம் தான். ஆனால், கரும்பு விவசாயி களுக்கு அரசு அறிவித்த விலையான ஒரு கரும்புக்கு ரூ.33 கிடைத்ததா என்பது தான் கேள்வி. மதுரை மாவட்டத்தில் மேலூர் தாலுகா வில் பல்லவராயம்பட்டி, எட்டிமங்களம், சருகுவலையபட்டி, தனியாமங்கலம் பகுதிகளில் செங்கரும்பு என்ற சீனிக் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. கரும்பை அறுவடை செய்யும் பணிகள் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது. பொதுவாக மேலூர் தாலுகாவில் குறைந்தது ஆயிரம் ஏக்கரில் செங்கரும்பு பயிரிடப்படுவது வழக்கம். இந்தாண்டு அதிகபட்சம் 600 ஏக்கரில் கரும்பு பயிரிடப்பட்டிருந்தால் அது பெரிய விஷயம் என்கிறார் தமிழ்நாடு கரும்பு விவ சாயிகள் சங்கத்தின் மாவட்டப் பொருளா ளர் வி.அடக்கிவீரணன். உரம் விலை உயர்வு, கூலி உயர்வு, அதிக முதலீடு இவற்றால் கரும்பு பயிரிடும் விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை என்றார்.

மேலூர் தாலுகாவைச் சேர்ந்த மாரக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் வே.அ.அழகன் கரும்பு விவசாயி களில் ஒரு முன்னோடி. குறிப்பாக பாரம்பரி யமாக மக்கள் விரும்பிச் சாப்பிடும் செங்கரும்பை பயிரிட்டு வருகிறார். அவரிடம் தமிழக அரசு பொங்கல் கரும்பை விவசாயிகளிடமிருந்து ரூ.33-க்கு கொள்முதல் செய்யவேண்டுமெனக் கூறியுள்ளதே. அது நடந்ததா எனக் கேட்டதற்கு. அவரோ, இது இரண்டாவது விஷயமாக வைத்துக்கொள்ளுங்கள். கரும்புக்கு கட்டுபடியான விலை கிடைக்கிறதா என்பதே பெரியகேள்வியாக உள்ளது. ஒருவர் புதிதாக செங்கரும்பு பயிரிட்டால் ஏக்கருக்கு 60 மாட்டுவண்டி கரும்பு கிடைக்கும். தொடர்ந்து கரும்பையே சாகுபடி செய்துவந்தால் ஏக்க ருக்கு 50 மாட்டுவண்டி தான் கிடைக்கும். ஒரு மாட்டுவண்டி கரும்பு என்பது 300 கரும்பு மட்டுமே. என்னைப் பொறுத்த வரை ஏக்கருக்கு ரூ.1.25-லட்சம் வரை செலவு செய்துள்ளேன்.

கால தாமதமான அறிவிப்பு

தமிழக அரசு பொங்கலுக்கு முழுக் கரும்பு ரேசன் அட்டை வைத்துள்ள வர்களுக்கு வழங்குவோம் என்ற அறி விப்பு மிகக் காலதாமதமானது. குறைந் தது ஐந்து மாதத்திற்கு முன்பே இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்க வேண்டும். அப்போது தான் விவசாயிகள் வியாபாரி களிடம் சென்றிருக்க மாட்டார்கள். மேலூர் தாலுகாவில் பெரும்பாலும் எனது பார்வை யில் வியாபாரிகள் தான் அதிகளவு கொள்முதல் செய்துள்ளனர். 300 கரும்புக்கு அதாவது ஒரு மாட்டுவண்டி கரும்புக்கு மிக அதிகபட்சமாக ரூ.4,200 கிடைத்துள்ளது. கரும்பை வெட்டி ஏற்றிச் செல்லும் தூரம் குறைவாக இருந்தால் தான் இந்த விலை. தூரம் அதிகமாக அதிகமாக ரூ.3,500-தான் கிடைக்கும். எங்கள் ஊருக்கு அருகிலுள்ள சொசைட்டி கூட எங்களிடம் கரும்பை கொள்முதல் செய்யவில்லை. நான் சொசைட்டிக்கு சென்று பார்த்தேன். கரும்புக் கட்டுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அதன் தோகைகள் கருகிக் கிடக்கின் றன. எந்த ஊரிலிருந்து எந்த விவசாயியிட மிருந்து கொள்முதல் செய்தார்கள் எனத் தெரியவில்லை.

எதிர்காலத்தில் இடைத்தரகர்கள், வியாபாரிகள் தலையீட்டை தமிழக அரசு தடுக்கவேண்டும். வரும் ஆண்டில் பொங்கலுக்கு இலவசக் கரும்புக்கான அறிவிப்பை ஐந்து மாதத்திற்கு முன்பாக அறிவிக்கவேண்டும். ஒரு கரும்பின் கொள்முதல் விலை ரூ.33 என்றால் ஒரு மாட்டு வண்டி கரும்பை ரூ.9,900-க்கு கொள்முதல் செய்திருப்பார்கள். நாங்கள் பலன் பெற்றிருப்போம். அரசின் பலன் எங்களுக்கு சாதகமாக இல்லை என்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடக்குவலையபட்டி கிளைச் செயலாளர் உ.அழகுராஜ் கூறுகையில், இந்தாண்டு நான் கரும்பு பயிரிடவில்லை. எனது உறவினர்கள், நண்பர்கள் பயிரிட்டுள்ள னர். கரும்பு விலை நிர்ணயம் செய்வது வியாபாரிகள் தான். கரும்பின் நீளம், பருமன் ஆகியவற்றைப் பொறுத்தது. மண்ணின் வளமும் இதில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கும். பாடுபட்டு உழைத்த விவசாயிக்கு கரும்புக்கு நியாயமான விலை கிடைக்கவில்லை. ஒரு கரும்பு ரூ.16 முதல் ரூ.17 வரையே விற்பனை யாகியுள்ளது. அரசு கூறிய ரூ.33 கிடைத்திருந்தால் என்னைப் போன்ற விவசாயிகள் எவ்வளவு மகிழ்ச்சியடைந் திருப்பார்கள்.

அரசு திட்டமிட்டு முன்னறிவிப்பு செய்திருந்தால் விவசாயிகள் வியாபாரிகளை நாடியிருக்கமாட்டார்கள். கரும்பு பயிரிட்ட ஐந்தாவது மாதத்தில் வியா பாரிகள் வந்து கரும்பின் நீளம், அதன் பருமனை வைத்து எவ்வளவு அறுவடை யாகும் என்பதை கணக்கிட்டு விலை வைத்து சென்றுவிடுகிறார்கள். அரசின் கொள்முதல் விலைக்கும் வியாபாரிகள் பெறும் விலைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. வருங்காலத்தில் தமிழக அரசு, செங்கரும்பு விளைச்சல் பகுதியைக் கண்டறிந்து அருகிலுள்ள கூட்டுறவு சங்கங்களுடன் இணைப்பை ஏற்படுத்த வேண்டும். அப்படி செய்யும் பட்சத்தில் கரும்புக்கு நியாயமான விலை கிடைக்கும். கரும்பு உற்பத்தி பரப்பு அதிகரிக்கும். சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கங்கள் செங்கரும்புக்கான சாகுபடி செலவை கடனாக வழங்கினால், அறுவடையின் போது கழித்துக்கொள்ளலாம் என்றார்.

விற்பனை எப்படி?

தைப்பொங்கலுக்கு இன்னும் மூன்று தினங்கள் உள்ள நிலையில் பொங்கல் திருநாள் வியாபாரம் மதுரையில் துவங்கியுள்ளது. சிம்மக்கல் பகுதியில் கரும்பு மற்றும் பனங்கிழங்கு விற்பனை சூடுபிடித்துள்ளது. 15 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு ரூ.500 முதல் ரூ. 600 வரை விற்பனை செய்யப்படுகிறது. இது குறித்து யானைக்கல் அருகில் வியாபாரம் செய்து கொண்டிருந்த செல்லூர் பகுதியை சேர்ந்த கனகவல்லி என்பவர் கூறுகை யில், மேலூர் அருகில் உள்ள மாங்குளம் பகுதியில் இருந்து கரும்பு இறக்குமதி செய்துள்ளோம். கடந்த ஆண்டு ஒரு கட்டு கரும்பின் விலை ரூபாய் 350 முதல் 500 வரை விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு கரும்பின் விலை கூடியுள்ளது. ஏனென்றால் ரேசன் கடைகளுக்கு அரசு அதிகளவில் கரும்புகளை வாங்கிச் சென்று விட்டதால் விற்பனைக்கு குறை வாகவே வந்துள்ளது. அதனால் விலை அதிகரித்துள்ளது. நல்ல விளைச்சலோடு கரும்பு உள்ளது என்று கூறினார்.

பனங்கிழங்கு வியாபாரம் செய்து வரும் லட்சுமி என்ற பெண் கூறுகையில் மார்கழி மாதம் பனங்கிழங்கு இராமநாதபுரம் பகுதி யில் இருந்துதான் அதிகமாக விற்பனைக்கு வரும். மாசி மாதம் தான் தூத்துக்குடி மாவட்ட பகுதிகளில் இருந்து விற்பனைக்கு வரும். தற்போது இராம நாதபுரம் பகுதியில் இருந்து விற்பனைக்கு வந்துள்ள கிழங்கு நன்றாக உள்ளது. ஒரு கட்டு 10 முதல் 25 எண்ணம் வரை உள்ளது ரூ. 100 க்கு விற்கப்படுகிறது என்றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button