தமிழ்நாடு முழுவதும் 500 இடங்களில் விவசாயிகள் சாலை மறியல்
ரூ.75,000 வரை கடன் தள்ளுபடி: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வரவேற்பு

தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் சார்பில், மாவட்ட தலைநகரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளுக்கு முன், வட்டார அளவில் ஆர்ப்பாட்டங்களும், சென்னை தலைமை கூட்டுறவு பதிவாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டமும், சென்னையில் காத்திருப்பு போராட்டங்கள் நடத்தப்பட்டும், மூன்று தடவை சங்க நிர்வாகிகளை, அமைச்சர்கள் அழைத்து பேசிய நிலையில், சங்க நிர்வாகிகள் வலியுறுத்தியபடி தமிழ்நாடு அரசு செய்யல்படவில்லை.
இந்நிலையில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்கள் மற்றும் அகில இந்திய விவசாயிகள் மகாசபை இணைந்து, 21.10.2026 அன்று, தமிழ்நாடு முழுவதும் 500 மையங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சுமார் 30,000 பேர் கலந்து கொண்டு கைது செய்யப்பட்டனர்.
இப்போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர்கள் பி.எஸ்.மாசிலாமணி, சாமி நடராஜன், நாகை நாடாளுமன்ற உறுப்பினர் வை.செல்வராஜ், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் க.மாரிமுத்து, மாநிலத் தலைவர் டி.ரவீந்திரன், மாநில நிர்வாகிகள் த.இந்திரஜித், எம்.லகுமைய்யா, சிவசூரியன், வி.கிருஷ்ணமூர்த்தி, சி.எம். துளசிமணி, விவசாயத் தொழிலாளர் சங்கங்கள் மாநில நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.





இந்நிலையில் விவசாயிகளின் பயிர்க்கடன் கடன் தள்ளுபடி குறித்து நான்காவது கட்ட பேச்சுவார்த்தை, தமிழ்நாடு அரசின் அழைப்பின் பேரில் சென்னை தலைமை செயலக கூட்டரங்கில் 22.10.2026 அன்று பிற்பகல் நடைபெற்றது.
கூட்டத்தில் மாண்புமிகு அமைச்சர்கள் புஸ்லி ஆனந்த், ஆதவ் அர்ஜீனா, செங்கோட்டையன், வினோத், காந்தி ராஜ், ரமேஷ், விஜய் தமிழன் பார்த்திபன் உள்ளிட்ட ஏழு அமைச்சர்கள் மற்றும் நிதித்துறை செயலாளர் சித்திக், பேரிடர் துறை செயலாளர் அமுதா, கூட்டுறவுத்துறை தலைமை பதிவாளர் மற்றும் செயலாளர் பங்கு கொண்டார்கள்.
தேர்தல் கால வாக்குறுதிபடி கடன் தள்ளுபடி செய்திட வலியுறுத்தி சங்க நிர்வாகிகள் பேசினர். நிதி நெருக்கடியை திரும்ப திரும்ப அமைச்சர்கள் கூறினார்கள்.
முடிவாக, சிறு, குறு மற்றும் இதர விவசாயிகள் அனைவருக்குமே ரூபாய் ஒரு லட்சம் வரை தள்ளுபடி செய்வது என அமைச்சர்கள் முதல்வரின் முடிவாக அறிவித்தனர்.
இதை வரவேற்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.எஸ். மாசிலாமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.