
காவிரியில் மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிகளுக்கு ஒன்றிய அரசு துணை போகக் கூடது. நாடாளுமன்றத்தில் காவிரிப் பிரச்சினையில், தமிழ்நாட்டின் உரிமைகளை பறிக்கும் வகையில் ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் பேசியதை கண்டித்தும், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை உடனடியாக திறந்து விடுமாறும் வலியுறுத்தி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், 01.08.2026 அன்று தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி: ஆர்ப்பாட்டத்தில் மாநிலத் துணைச் செயலாளார் நா.பெரியசாமி எக்ஸ் எம்எல்ஏ, கட்சியின் மாவட்டச் செயலாளர் பி.கரும்பன் உள்ளிட்டோர் கண்டன உரை ஆற்றினர்.

தஞ்சாவூர்: தலைமை அஞ்சலகம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் கோ.சக்திவேல் தலைமை தாங்கினார். மாவட்டத் துணைச் செயலாளர் ஆர்.இராமச்சந்திரன், மாவட்டப் பொருளாளர் கோ.பாஸ்கர் உள்ளிட்டோர் உரையாற்றினர்.

திருப்பத்தூர்: ஆட்சியர் அலுவலகம் முன்பு, மாவட்டச் செயலாளர் நந்தி தலைமை தாங்கினார். மாநிலக் குழு உறுப்பினர் பா.தினேஷ், முன்னாள் மாவட்டச் செயலாளர்கள் சுந்தரேசன், சாமிக்கண்ணு, விவசாய சங்க மாவட்டச் செயலாளர் முல்லை, நகரச் செயலாளர் ராஜா, துணை செயலாளர் பைரோஸ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தென்சென்னை: தேனாம்பேட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, கட்சியின் தென் சென்னை மாவட்டச் செயலாளர் எஸ்.கே.சிவா தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், டாக்டர் ஏ.ஆர்.சாந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கோவை: பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு, கட்சியின் மாவட்டத் துணைச் செயலாளர் ஜே.ஜேம்ஸ் தலைமையில், மாவட்டச் செயலாளர் சி.சிவசாமி, கட்சியின் மாநிலப் பொருளாளர் எம்.ஆறுமுகம் எக்ஸ்.எம்எல்ஏ, மாவட்டத் துணைச் செயலாளர் சி.தங்கவேல், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் பி.மௌனசாமி, கே.எம்.செல்வராஜ், மௌ.குணசேகர், வி.ஆர்.பாண்டியன், ஜி.பி.சக்திவேல் மாநிலக்குழு உறுப்பினர் கலைஅஸ்வினி, ஏ.அஸ்ரப் அலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நாமக்கல்: மாவட்டச் செயலாளர் க.அன்புமணி தலைமையில் நடைபெற்றது. மாநில நிர்வாக குழு உறுப்பினர் அ.மோகன், மாவட்டக் குழு உறுப்பினர் டி.கே.சுப்பிரமணியம், ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க மாவட்டத் தலைவர் எஸ்.ராமகிருஷ்ணன், விவசாய சங்க மாநிலக் குழு உறுப்பினர் கே.பி.வி.பூபேஷ், ஏஐடியூசி மாவட்டப் பொதுச் செயலாளர் பி.தனசேகரன், விவசாய சங்க மாவட்டச் செயலாளர் என்.செல்வராஜ், திருச்செங்கோடு நகரச் செயலாளர் எஸ்.சுகுமார் ஆகியோர் உரையாற்றினர்.

தருமபுரி: பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு, மாவட்டச் செயலாளர் எஸ்.கலைச்செல்வம் தலைமையில் நடைபெற்றது. மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் எஸ்.தேவராசன், ஏஐடியூசி மாநிலச் செயலாளர் சின்னசாமி, ஏஐடியூசி மாவட்டச் செயலாளர் கே.மணி, விவசாய சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.சின்னசாமி, இளைஞர் பெருமன்ற மாவட்டச் செயலாளர் நவீன்குமார், ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க மாவட்டச் செயலாளர் சுப்பிரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினார்.

இராமநாதபுரம்: பரம்பக்குடி காந்தி சிலை முன்பு, கட்சியின் மாவட்டப் பொறுப்பு செயலாளர் என்.கே.ராஜன் தலைமையில், மாநில நிர்வாக குழு உறுப்பினர் பெ.லிங்கம் எக்ஸ் எம்.பி. சிறப்புரையாற்றினார். மாவட்டத் துணைச் செயலாளர்கள் கே.ஜீவானநதம், எஸ்.எம்.ஜெயசீலன், பரமக்குடி நகரச் செயலாளர் கே.ஆர்.சுப்பிரமணியன், மாவட்டப் பொருளாளர் ஜி.லோகநாதன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

மயிலாடுதுறை: கிட்டப்பா அங்காடி முன்பு, கட்சியின் மாவட்டச் செயலாளர் அ.சீனிவாசன் தலைமை தாங்கினார். மயிலாடுதுறை நகரச் செயலாளர் ஒய்.எஸ்.சர்புதீன், ஒன்றியச் செயலாளர் எஸ்.மனோன்ராஜ், மாவட்டத் துணைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, விவசாய சங்க மாவட்டத் தலைவர் பி.வீரராஜ், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் வி.நீதிசோழன் உள்ளிட்டோர் கண்டன உரை ஆற்றினர்.

திருச்சி: மணப்பாறை பேருந்து நிலையம் முன்பு, கட்சியின் தெற்கு ஒன்றியச் செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

திருப்பூர் புறநகர்: மாவட்டக் குழுவின் சார்பில், ஊத்துக்குளி ஆர்.எஸ்.பகுதியிலும், உடுமலை மத்திய பேருந்து நிலையம் அருகிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் எம்.மோகன், வி.ஏ.சரவணன், எஸ்.தெய்வசிகாமணி, இரா.முத்துசாமி, எஸ். முத்துக்குமார், சி.சுப்பிரமணியன், என்.கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சேலம்: கோட்டை ஸ்டேட் வங்கி அருகில், மாவட்டச் செயலாளர் என்.கே.செல்வராஜ் தலைமையில், மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் ஏ.மோகன், மாநிலக் குழு உறுப்பினர் ஏ.கந்தன், மாவட்டத் துணைச் செயலாளர்கள் எம்.ராமன், பழ.ஜீவானந்தம், மாவட்ட பொருளாளர் இரா.ரமேஷ் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.