தமிழகம்

தமிழ்நாடு முழுவதும் மே தின விழா கோலாகலம்

ஏஐடியுசி, சிஐடியு சார்பாக பேரணி, பொதுக்கூட்டம்

தொழிலாளி வர்க்கம் இத்தனை ஆண்டுகளாகப் போராடிப் பெற்ற உரிமைகள் ஒவ்வொன்றாகப் பறிபோய்க் கொண்டிருக்கின்றன. அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளால் திணிக்கப்பட்ட போர் உலக மக்களின் வாழ்வாதாரத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறிக் கொண்டிருக்கிறது. இவற்றுக்கு எதிராகப் போராட உறுதியேற்கும் புரட்சிகர மே தினமாக, இந்த 140ஆம் ஆண்டு மே தின விழா கொண்டாடப்பட்டது.

ஏஐடியுசி – சிஐடியு கூட்டாக விடுத்திருந்த அழைப்பின் அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் பேரணி, பொதுக்கூட்டங்களுடன் மே தினம் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது.

வட சென்னை

ஏஐடியுசி – சிஐடியு வடசென்னை மாவட்டம் சார்பில் வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரியில் எழுச்சியுடன் தொடங்கிய பேரணி மகாகவி பாரதிநகரில் நிறைவுற்று, பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், சிஐடியு முன்னாள் அகில இந்தியத் தலைவர் ஏ.கே.பத்மநாபன் ஆகியோர் எழுச்சி உரையாற்றினர்.

மத்தியசென்னை

ஏஐடியுசி – சிஐடியு மத்திய சென்னை மாவட்டம் சார்பில் திருவல்லிக்கேணியில் பேரணி, பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், ஏஐடியுசி தேசியச் செயலாளர் டி.எம்.மூர்த்தி, மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.சச்சிதானந்தம் ஆகியோர் உரையாற்றினர்.

தென்சென்னை

ஏஐடியுசி – சிஐடியு தென்சென்னை மாவட்டம் சார்பில் தரமணியில் பேரணி, பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் உரையாற்றினர். எஸ்.ஏழுமலை தலைமை தாங்கினார்.

திருப்பூர்

திருப்பூரில், ஏஐடியுசி ஆர்.செந்தில்குமார் தலைமையில் மே தினப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. சிஐடியு பி.பாலன் வரவேற்புரை ஆற்றினார். இதில் ஏஐடியுசி அகில இந்திய துணைத் தலைவர் கே சுப்பராயன் எம்.பி. ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் அ.ராதிகா, ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலாளர் பி.ஆர். நடராஜன், சிஐடியு சி.மூர்த்தி, பிஎஸ்என்எல் எஸ்.சண்முகசுந்தரம், உள்ளிட்டோர் உரையாற்றினார்.

திருச்சி

ஏஐடியுசி-சிஐடியூ சார்பாக திருச்சியில் பேரணி, பொதுக்கூட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது. ஏஐடியுசி அகில இந்திய துணைத் தலைவர் சி.எச்.வெங்கடாச்சலம், சிஐடியூ மாநிலச் செயலாளர் எஸ்.கே.மகேந்திரன் சிறப்புரையாற்றினார். ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலாளர் க.சுரேஷ், சிஐடியூ மாவட்டச் செயலாளர் எஸ்.ரெங்கராஜன் தலைமை தாங்கினர். வங்கி ஊழியர் சங்க விநோதினி, ஏஐடியுசி மாவட்ட தலைவர் நடராஜா, சிஐடியூ மாநிலக்குழு உறுப்பினர் செல்வி உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

ராமநாதபுரம்

ஏஐடியுசி – சிஐடியு சார்பாக ராமநாதபுரத்தில் பேரணி, பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த எம்.சின்னதுரை எம்.எல்.ஏ, இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாநிலத் தலைவர் ஜி.மஞ்சுளா உள்ளிட்டோர் உரையாற்றினர்.

காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஏஐடியுசி சார்பில் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், சிஐடியு சார்பில் அ.சௌந்தரராஜன் ஆகியோர் உரையாற்றினர். ஏஐடியுசி டாஸ்மாக் சங்கத் தலைவர் இ.பிரகாசம், ஏஐடியுசி மாவட்டப் பொதுச் செயலாளர் ஏ.மூர்த்தி, சிபிஎம் மாவட்டச் செயலாளர் கே.நேரு, சிபிஐ மாவட்ட செயலாளர் பி,வி.னிவாசன், வி.விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டில் மே தின பேரணி பொதுக்கூட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது. ஏஐடியுசி மாவட்டத் தலைவர் எம்.சங்கையா தலைமையில், ஏஐடியுசி தேசியச் செயலாளர்  குமார், சிஐடியு மாநிலச் செயலாளர் கே.சி.கோபி குமார், ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் எம்.ஜஹாங்கீர், சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.பகத்சிங்தாஸ், பொருளாளர் எம்.கலைச் செல்வி ஆகியோர் உரையாற்றினர்.

தென்காசி

தென்காசியில் ஏஐடியுசி – சிஐடியு சார்பாக பேரணி – பொதுக்கூட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது. டிஒய்எப்ஐ மாநிலச் செயலாளர் எஸ்.கார்த்திக், சிபிஐ மாவட்டச் செயலாளர் டி.இசக்கித்துரை, சிபிஎம் மாவட்டச் செயலாளர் பி.உச்சி மாகாளி, ஏஐடியுசி மாவட்டப் பொதுச்செயலாளர் டி.சுப்பையா, சிஐடியு மாவட்ட செயலாளர் எம்.மணிகண்டன் ஆகியோர் உரையாற்றினர். ஏஐடியுசி மாவட்டத் தலைவர் சி.சுப்பிரமணியன், மாவட்டப் பொருளாளர் எல்.கிருஷ்ணசாமி, சிஐடியு மாவட்டத் தலைவர் டி.வன்னியபெருமாள், மாவட்டப் பொருளாளர் டி.அய்யப்பன், விதொச மாவட்டச் செயலாளர் எம்.எஸ்.கிட்டப்பா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல்லில் ஏஐடியுசி – சிஐடியு சார்பாக பேரணி, பொதுக்கூட்டம் நடைபெற்றது. சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.பி.ஜெயசீலன் தலைமை தாங்க, ஏஐடியூசி ஜி.பாலன், சிஐடியு ஜி.பாலச்சந்திர போஸ் முன்னிலை வகித்தனர். ஏஐடியுசி மாநிலத் தலைவர் காசி விசுவநாதன் சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் செண்பகம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். ஏஐடியுசி சார்பில் கௌரவத் தலைவர் துரை சந்திரமோகன், பி.கிருஷ்ணசாமி, பி.மணிகண்டன், கண்ணன், ஐயப்பன் ஆகியோரும் சிஐடியு சார்பில் தவக்குமார், வெங்கடுசாமி, பாண்டியன், பிச்சைமுத்து செல்வ தனபாக்கியமும் பங்கேற்றனர்.

தருமபுரி

தருமபுரியில் ஏஐடியுசி, சிஐடியு சார்பாக பேரணி, பொதுக்கூட்டம் நடைபெற்றது. சிஐடியு கலாவதி, ஏஐடியுசி பி.முருகன் தலைமை தாங்கினர். ஏஐடியுசி மாவட்ட செயலாளர் கே.மணி மாவட்டப் பொருளாளர் ஏ.முருகன் மற்றும் எம்.மாதேஸ்வரன், நடராஜன், இரவீந்திரபாரதி, நாகராஜ், மனோகரன், சிஐடியு மாநில துணைத்தலைவர் ஆர்.சிங்காரவேலு, மாவட்டச் செயலாளர் சி.நாகராசன், மாவட்ட பொருளாளர் எஸ். சண்முகம் மற்றும் ஏ.சேகர், சி.முரளி, பி.ஜீவா, சி.கவிதா ஆகியோரும் உரையாற்றினர்.

நாமக்கல்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் ஏஐடியூசி – சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் 140-வது மே தின பேரணி, பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. ஏஐடியூசி மாவட்ட துணை தலைவர் எஸ்.சின்னச்சாமி, சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.அசோகன் தலைமை தாங்கினர். ஏஐடியூசி தேசிய நிர்வாக குழு உறுப்பினர் இ.தினேஷ் பொன்னையா, சிஐடியு மாநிலத் தலைவர் சம்சீர் அகமது ஆகியோர் சிறப்புரையாற்றினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button