கட்டுரைகள்

காலந்தோறும் கம்யூனிஸ்ட்டுகள் – நூல் ஒரு பார்வை (பகுதி -2)

க.திருநாவுக்கரசு, திராவிட இயக்க ஆய்வாளர்

இரண்­டாம் பாகம் தொடக்­கமே சின்­னி­யம் பா­ளை­யம் தியா­கி­க­ளின் வர­லாற்­றுக் குறிப்­பு­க­ளோடு தொடங்­கு­கி­றது. குறிப்­பு­கள் மூன்­ற­ரைப் பக்­கங்­கள்­தான் இருக்­கின்­றன. அதைப் படிக்­கி­ற­போது ‘தூக்­கு­மேடைக் குறிப்­பு­கள்’ ‘தூக்­கு­மர நிழ­லில்’ என்­கிற தலைப்­பு­கள் நினை­வ­லை­க­ளாக எழும்பி விழு­கின்­றன. களப்­பால் குப்­பு­வைப் பற்றி படிக்­கி­ற­போது நில பிர­புத்­து­வம் எப்­ப­டி­யெல்­லாம் கொடு­மை­களை இழைத்து இருக்­கி­றது என்­பதை ஜீவ­பா­ரதி பதிவு செய்து இருக்­கி­றார். அக்­கொ­டு­மை­கள் நினை­வு­க­ளாக மனத்­தி­டையே மீண்­டும் விரி­கி­ற­போது கோபம் வரு­கி­றது. இரத்­தம் சுடே­று­கி­றது. களத்­தில் நின்று போராட்­டத்தை எதிர் கொண்ட தோழர்­கள் அவர்­க­ளின் தலை பூமி­யைப் பார்க்­கா­மல் எதி­ரி­யைக் கண்­க­ளால் பொசுக்­கி­யதை நாம் எழுத்­து­க­ளில் காண முடி­கி­றது. அவ்­வீரத்­திற்கு இணை­யா­னது வேறு எது?– என்று வினா தொடுக்­கச் செய்­கி­றது.

சேலம் சிறை­யில் 22 கம்­யூ­னிஸ்­டு­கள் சுட்­டுக் கொல்­லப்­பட்ட சம்­ப­வத்­தைச் ‘சேலம் சிறை­யில் சிந்­திய இரத்­தம்’ என்று தலைப்­பிட்டு ஜீவ­பா­ரதி எழுதி இருக்­கி­றார். இது 1950 ஆம் ஆண்டு நடை­பெற்ற நிகழ்ச்சி. அப்­போது பனம்­பள்ளி கோவிந்­த­மே­னன் போலீஸ் மந்­தி­ரி­யாக இருந்­தார். கேர­ளப் பகு­தி­கள் சில சென்னை மாகா­ணத்­தோடு இணைந்­தி­ருந்­தன. கம்­யூ­னிஸ்­டு­கள் 22 பேர் சுட்­டுக் கொல்­லப்­பட்ட நிகழ்ச்சி ஒரு மாபெ­ரும் அதிர்வை இந்­தி­யா­வில் ஏற்­ப­டுத்­தி­யது. அந்த 22 பேர் யார், யார் எனப் பெயர் விவ­ரங்­களை இரண்­டாம் பாகத்­தில் அறிந்து கொள்­கி­றோம்.

‘தூக்கு மர நிழ­லில்’ எழு­திய சி.ஏ.பாலன் பற்­றிய குறிப்­பைப் படிக்­கி­ற­போது தமி­ழில் குமு­தத்­தில் அது தொட­ராக வெளி­வந்­தது நினை­வுக்கு வரு­கி­றது, இவ­ரது குறிப்பை முடிக்­கி­ற­போது ஜீவ­பா­ரதி, ‘வாழ்­வின் பெரும் பகு­தி­யைச் சிறை­யில் கழித்­த­வர்’ என்று குறிப்­பிட்டு இருக்­கி­றார். ‘துன்­பம் உற­வ­ரி­னும்’ என வள்­ளு­வர் கூறு­வாரே அவ்­வ­டி­கள்­தான் நமக்கு நினை­வுக்கு வரு­கி­றது.

ப.விருத்­த­கிரி பற்றி இரண்­டாம் பாகத்­தில் சொல்­லப்­பட்டு இருக்­கி­றது. தொழிற்­சங்­கங்­களை நடத்­து­வ­தற்கு இவ­ரு­டைய புத்­த­கங்­கள் வழி காட்­டின. நாமும் அத­னைப் பயன்­ப­டுத்தி இருக்­கி­றோம். அவர் எழு­திய புத்­த­கங்­க­ளின் பட்­டி­யல் இக் குறிப்­பில் இடம் பெற்று இருக்­கி­றது.

ஞானையா பற்றி சொல்ல வேண்­டு­மா­னால் உல­கம் சுற்­றி­ய­வர். தொழிற்­சங்­கத்தை கட்டி அமைப்­ப­தில் திறமை மிகுந்­த­வர். தபால் தந்தி துறை­யில் பணி­யாற்­றிய தி.மு.க.கார­ரான ஏ.எஸ்.ராஜனை கடு­மை­யாக விமர்­ச­னம் செய்­த­வர். ஜி.இலட்­சு­மணன் பற்றி மட்­டும் ஜீவ­பா­ரதி கூறி இருக்­கி­றார். ஓர் அமைப்­பைக் கட்­டும் போது அவர்­க­ளுக்கு ஏற்­ப­டு­கிற இடை­யூ­று­களை கடு­மை­யாக விமர்­சிக்­கவே செய்­வர். ஞானையா தனது இறுதி காலத்­தில் தமிழ்த் தேசிய பொது­வு­டை­மைக் கொள்­கை­யா­ள­ராக பிர­க­ட­னப்­ப­டுத்­திக் கொண்­டார். இந்­நூலில் இடம் பெற்­றுள்ள வி.கே. நர­சிம்­மன் கடை­சி­யாக சத்ய சாயி­பா­பா­வி­டம் இருந்­தார். இதனை நாம் அறிந்து இந்த புத்­த­கப் பார்­வை­யில் வெளிப்­ப­டுத்­தி­னோம். ஜீவ­பா­ரதி சிறி­வில்­லிப்­புத்­தூர் மகா­ரா­ஜ­பு­ரம் தோழர் சீனி­வா­சன் தன்னை பா.ஜ.க.வில் இணைத்­துக் கொண்­டார் என்று ஒரு தோழ­ரைப் பற்றி இந் நூலில் தெரி­வித்து இருக்­கி­றார். பின்­னால் சொல்­லப்­பட்ட இரண்டை விட ஞானை­யா­வின் கொள்­கைப் பார்வை ஒரு வகை­யில் வர­வேற்­கத்­தக்­கதே ஆகும்.

இரண்­டாம் பாகத்­தில் மலேயா கண­பதி வரு­கி­றார். மலேயா கண­பதி மலே­யா­வில் சென்று எப்­படி இயங்­கு­கி­றார். எப்­படி வாழ்க்­கை­யைத் தொடங்­கி­னார். தொழிற்­சங்­கங்­க­ளைக் கட்­டி­னார். அங்கே இருந்த இயக்­கங்­க­ளோடு தொடர்பு கொண்டு கண­பதி வளர்த்­தெ­டுத்­தார். அங்கே நேதா­ஜியை அவர் சந்­தித்­தது – தடை செய்­யப்­பட்ட மே தினத்­தைக் கொண்­டா­டி­யது போன்ற நிகழ்­வு­களை ஜீவ­பா­ரதி எழு­தி­யி­ருக்­கி­றார். இதன் மூலம் ஆளு­வோரை அவர் கதி கலங்­கச் செய்து இருக்­கி­றார். கண­ப­தி­யால் மலே­யாவே போராட்­டக்­க­ள­மா­கி­விட்­டது. பல அமைப்­பு­க­ளில் பொறுப்­பு­க­ளில் இருந்த கண­பதி மிகத் திற­மை­யா­கச் செயல்­பட்­டார். இவரை ஒழிக்க மலேயா அரசு முயற்சி எடுத்­தது. தலை­ம­றைவு ஆனார். இறு­தி­யில் போலீ­சி­டம் சிக்­கி­னார். இவ­ருக்கு மரண தண்­டனை வழங்­கப்­பட்­டது. இவ்விவரங்­களை எல்­லாம் ஜீவ­பா­ரதி சொல்­கி­றார்.

1949 மே மாதம் 4 ஆம் தேதி கண­பதி தூக்­கி­லி­டப்­பட்­டார். சில மாதங்­க­ளுக்­குப் பிறகு சுமார் 48 பக்­கங்­க­ளில் ‘கயிற்­றில் தொங்­கிய கண­பதி’ எனும் தலைப்­பில் ஒரு சிறு பிர­சு­ரத்தை கலை­ஞர் எழுதி வெளி­யிட்­டார். இச்­சிறு வெளி­யீடு மாபெ­ரும் பர­ப­ரப்­பைத் தமிழ்­நாட்­டில் அச் சம­யத்­தில் உரு­வாக்­கிற்று. இதைப் பற்றி இந் நூல் ஒன்­றும் கூற­வில்லை.

நா.வான­மா­மலை ஓர் அறி­வொளி வட்­டத்தை ஏற்­ப­டுத்­தி­ய­வர். திரா­விட இயக்­கத்­தின் தமிழ் உரை நடையை ‘செயற்கை நடை’ என விமர்­ச­னம் செய்­த­வர். ஆனா­லும் இவ­ரது ஆய்­வு­க­ளை­யும் நூல்­க­ளை­ யும் கே.ஏ.மதி­ய­ழ­கன், இராம.அரங்­கண்­ணல், ப.புக­ழேந்தி போன்­றோர் படித்­ததை நாம­றி­வோம். நாமும் அவ­ரது ‘ஆராய்ச்­சி’­யைப் படித்து இருக்­கின்­றோம். நாட்­டுப் புற பாடல்­களை வாசித்து இருக்­கின்­றோம். இவ­ரும் இரண்­டாம் பாகத்­தில் இடம் பெற்­றி­ருக்­கி­றார்.

இரண்டு பாகங்­க­ளில் சொல்­லப்­பட்டு இருக்­கிற அனைத்­துத் தோழர்­க­ளைப் பற்­றி­யும் நினைவு கூர்ந்து சொல்ல வேண்­டும் என்ற ஆசை நமக்கு உண்டு. ஆனால் இது இய­லாத ஒன்று. இதி­லுள்ள பலர் பொது மக்­க­ளின் நினை­வு­க­ளி­லி­ருந்து மறைந்து போன­வர்­கள். ஒரு சிலர் புகழ் பெற்­ற­வர்­கள்–­நா­ட­றிந்­த­வர்­கள். தொழிற் சங்­கத்­தி­னர்–­பெ­ருந்­த­லை­வர்­கள் என்ற வரி­சை­யில் இருப்­ப­வர்­கள். அத­னால் அவர்­க­ளின் ஓவி­யத்­தைப் பார்ப்­ப­தோடு செய்­தி­க­ளை­யும் அறிந்து மன நிறைவு கொள்­வர். தாம் அறி­யா­த­வர்­கள் ஆனா­லும் அவர்­க­ளின் தியா­கங்­களை அவர்­க­ளின் சாக­சங்­களை அறிந்து மலைப்­பர், போற்­று­ப­வர். அப்­ப­டிப்­பட்ட இரு வகை­யி­ன­ரும் இந்த இரண்டு பாகங்­க­ளில் இடம் பெற்று இருக்­கின்­ற­னர்.

ஆகவே நூலில் இடம் பெற்­றுள்ள அனை­வ­ரை­யும் இந்­தப் ‘பார்­வை­யில்’ அறி­மு­கப்­ப­டுத்த முடி­யாது. எனி­னும் இன்­னும் மூன்று பேரைப் பற்றி நாம் சொல்ல விரும்­பு­கின்­றோம். தொழிற்­சங்­கத் தலை­வர் எஸ்.சி. கிருஷ்­ணன். இவர் மின்­சா­ரம் வழங்கு துறை­யில் தொழிற்­சங்­கங்­கள் தொடங்­கும் போது Madras Electricity System ஆக இருந்­தது. மின்­சா­ரம் கிரா­மங்­க­ளுக்கு எடுத்­துச் செல்ல ஆயி­ரம் கணக்­கான தொழி­லா­ளர்­கள் உழைக்க வேண்டி இருந்­தது. 1950 களில் – தினக்­கூ­லி­க­ளாக 1 1/4 ரூபாய் நாள் ஒன்­றுக்கு கூலி வழங்­கப்­பட்­டது. ஆயி­ரக்­க­ணக்­கான தொழி­லா­ளர்­கள் பணி­யாற்­றி­னர். இவர்­க­ளுக்­காக முதன் முத­லில் ஒரு சங்­கம் அமைத்து அவர்­களை ஒரு வகைப்­பாட்­டிற்­குள் கொண்டு வந்­த­வர் எஸ்.சி. கிருஷ்­ணன். இவ­ரைப்­பற்றி மின்­சார வாரி­யத்­தில் பணி­யாற்றி இன்­றைக்கு 80 வய­திற்கு மேல் இருப்­ப­வர்­க­ளுக்கு நன்­றா­கத் தெரி­யும்.

சென்னை, பிரிக்­கப்­ப­டாத செங்­கற்­பட்டு மாவட்­டங்­க­ளில் உள்ள MES தொழி­லா­ளர்­கள் எஸ்.சி. கிருஷ்­ணனை தங்­க­ளின் சிறந்த வழி­காட்­டி­யா­கக் கொண்­டார்­கள். இதை நாம் நேரி­டை­யாக அறி­வோம். அந்த எஸ்.சி. கிருஷ்­ண­னைப் பற்றி இந்­நூல் பதிவு செய்து இருக்­கி­றது. தொழிற் சங்­கம், அரசு மற்­றும் நிர்­வா­கங்­கள் எவ்­வா­றெல்­லாம் சட்ட நெறி­யைப் பின்­பற்­றச் செய்து இருக்­கி­றது. புதிய சட்­டங்­களை இயற்ற செய்து இருக்­கி­றது என்­பதே பெரி­ய­தொரு வர­லாறு. இதை­யா­ரும் இன்­றைய வரை விரி­வாக எழு­தி­ய­தில்லை.

அடுத்து ஜெய­காந்­தன். இவர் தனக்­குத் தானே ஆசி­ரி­ய­னாக இருந்து கற்­றுக் கொண்­ட­வர். உயர்­நி­லைப் பள்­ளிக் கல்­வி­யைக் கூட முழு­வ­து­மாக முடிக்­கா­த­வர். ஆனால் அவ­ரோடு உரை­யா­டி­னால் அவர் மேடைப் பேச்­சைக் கேட்­டால் அப்­ப­டி­யெல்­லாம் ஒன்­றும் தெரி­யாது. அவ­ரின் மேதமை மட்­டுமே புலப்­ப­டும். பாரதி கவி­தை­கள் அத்­த­னை­யும் அவ­ருக்கு மனப்­பாடம். பல ஏடு­க­ளில் ஆசி­ரி­ய­ராக இருந்­த­வர். ஒன்று பட்ட கம்­யூ­னிஸ்­டுக் கட்­சி­யில் பிரச்­சா­ரக் குழு உறுப்­பி­ன­ராக இருந்­த­வர். நேரில் சந்­தித்­துப் பேசி­னால் ஓர் அர­ச­ரைப் பேட்­டிக் காண்­ப­து­போல் இருக்­கும் ‘எல்லா மொழி­யும்’ பேசு­வார். இம­யம் அள­வுக்­குச் செருக்கு உள்­ள­வர். ஜீவாவை ஞான­சி­ரி­ய­னா­கக் கொண்­ட­வர். இவரை நமக்கு ஜீவ­பா­ரதி பதிவு செய்து அறி­மு­கப்­ப­டுத்தி இருக்­கி­றார்.

‘ஓர் இலக்­கி­ய­வா­தி­யின் அர­சி­யல் விமர்­சனங்­கள்’ என்­கிற புத்­த­கத்­தில் ‘தி.மு.க.வை ஒரு சமூக சீர­ழிவு இயக்­கம்’ என்று எழு­தி­யி­ருந்­தார் ஜெய­காந்­தன். அதை­யெல்­லாம் தி.மு.க. பெரி­து­ப­டுத்­த­வில்லை. ‘சரஸ்­வதி’ எனும் பத்­தி­ரி­கை­யில் ஆரம்ப காலத்­தில் கதை­கள் எழுதி வந்­தார். இப்­பத்­தி­ரி­கை­யின் ஆசி­ரி­யர் வ.விஜய பாஸ்­க­ரன் அவ­ரு­டைய அனு­ப­வங்­க­ளைத் தொகுத்து ‘திரும்­பிப் பார்க்­கி­றேன்’ எனும் தலைப்­பில் ஒரு நூலாக வெளி­யிட்­டார். அதன் வெளி­யீட்டு விழா நம் தலை­மை­யில் – சின்­ன­குத்­தூசி தங்­கி­ருந்த ‘லாட்­ஜின்’ பெரிய வளா­கத்­தில் நடை­பெற்­றது. ஆர்.நல்­ல­கண்ணு நூலை வெளி­யிட்­டார். முதல் பிர­தியை ஜெய­காந்­தன் பெற்­றுக் கொண்­டார். ஏ.ஆர். வேங்­க­டா­ச­ல­பதி சிறப்­பு­ரை­யாற்­றி­னார். அந்­தப் புத்­த­கத்­திற்கு நாம் மதிப்­புரை எழு­தி­யி­ருந்­தோம்.

அந்த மதிப்­பு­ரை­யில் இறு­தி­யாக நாம்,ஒரு கம்­யூ­னிஸ்டு எல்­லாம் தெரிந்­த­வ­னாக இருக்க வேண்­டும். அவ­னுக்கு எதை­யும் எதிர்­கொள்­கிற துணிச்­ச­லும் இருக்­க­வேண்­டும். அவன் மக்­க­ளோடு மக்­க­ளுக்­காக இயங்க வேண்­டும். ‘நமக்­காக இருப்­ப­வன் இவன்’ என ஏது­மி­லி­கள் இவனை அடை­யா­ளம் கண்டு கொள்ள வேண்­டும். இதற்­கும் மேலாக அவன் எல்­லாம் கற்­றும், பெற்­றும் ஏது­மில்­லாதவனா­க­வும் இருக்க வேண்­டும். இது­தான் இந்­தத் ‘துறவு மார்க்­கத்­தின் இச்சை!’ இவ்­வ­ளவு கடி­னங்­க­ளை­யும் ஏற்­ப­வ­னும் தாங்­கு­ப­வ­னுமே ஒரு கம்­யூ­னிஸ்டு!’என்று எழு­தி­யி­ருந்­தோம்.

இந்நூலில் தொகுக்­கப் பெற்று வரலாற்றுக் குறிப்­பு­கள் வரை­யப்­பட்டு இருப்பவர்­கள் நாம் மதிப்­பு­ரை­யில் குறிப்­பிட்டு இருக்­கிற வரை­ய­றைக்கு உட்­பட்­ட­வர்­கள் ஆவர். ஒட்­டு­மொத்­த­மாக சமு­தா­யத்தை மாற்றி அமைக்­கிற போராட்­டத்­தில் அவர்­க­ளின் புரட்­சி­க­ர­மான பங்­க­ளிப்பை எவர்­தான் மறு­த­லிக்க முடி­யும்?

தோழர் பெ.சீனி­வா­சன் பற்றி இந்­நூ­லில் செய்­தி­கள் சொல்­லப்­பட்­டுள்­ளன. அவர் ‘தமி­ழ­கக் கம்­யூ­னிஸ்டு வீரர்­கள்’ எனும் நூலை எழு­தி­யி­ருக்­கி­றார். இந் நூலும் இரண்டு பாகங்­க­ளைக் கொண்­டது. இதில் நானூறுதியா­கி­கள் இடம் பெற்று இருக்­கி­றார்­கள். இந் நூலில் அவ­ரைப் பற்றி எது­வும் அவர் சொல்­ல­வில்லை. இந்த விவ­ரங்­களை ஜீவ­பா­ரதி எழு­தி­யி­ருக்­கி­றார்.

‘தன்னை மறந்து இன்­ப­முற வெண்­ணி­லாவே

ஒரு தந்­தி­ர­மொன்று சொல்­லி­டு­வாய் வெண்­ணி­லாவே’

என்று கேட்­டார் வள்­ள­லார். இதோ சீனி­வா­சன் ‘தன்னை மறந்து’ மற்­ற­வர்­க­ளைப் பதிவு செய்து இருக்­கிற கள­வீ­ர­ரா­கத் திகழ்­வதை பார்க்­கின்­றோம். நாம் இன்­னும் சீனி­வா­ச­னின் நூலைப் படிக்­க­வில்லை. இப்­படி ஒரு நூல் வந்­தி­ருப்­பதை இந் நூலின் மூலம்­தான் அறிந்­தோம்.

இப்­படி இந்த இரண்டு பாகங்­க­ளி­லும் இடம் பெற்று இருக்­கிற வீராங்­க­னை­கள் வீரர்­கள் பயன்­ப­டுத்­தப்­பட்ட போர்க்­க­ரு­வி­க­ளாக படிப்­போர்க்கு தெரி­வார்­கள். ஆக்­க­மளிக்க உத­வு­வார்­கள். நூலி­னுள்ளே குறை­க­ளை­விட நிறை­களே மிக அதி­க­மா­கத் தெரி­கின்­றன. இதை எழு­தித் தொகுத்த ஜீவ­பா­ரதி இரண்டு ஆண்­டு­க­ளுக்­குள் இந்­தப் பணியை முடித்து இருக்­கி­றார் என்­றால் அவ­ரைப் பாராட்­டு­கின்­றோம். போற்­று­கின்­றோம்.

நூல் வெளி­யீட்டு விழா­வில் முதல்­வர் மு.க.ஸ்டாலின் உரை வீச்­சில் நன்­றா­கப் பாகுப்­ப­டுத்தி கூறி இருந்­தார்­கள். சமூக விடு­தலை திரா­விட இயக்­கத்­திற்­கா­னது; வர்க்க விடு­தலை பொது­வு­டைமை இயக்­கத்­திற்­கானது என்­றா­லும் இவ்­வி­ரண்டு இயக்­கங்­க­ளும் இவ்­வி­டு­த­லை­களை இணைந்து பணி­யாற்­றிப் பெற வாய்ப்­புள்­ளவை என்­பதை அவ்­வுரை வீச்சு வெளி­ப­டுத்த முனை­கி­றது என்று நாம் கரு­து­கின்­றோம். அதற்­கான சந்­தர்ப்­பங்­களை ஏற்­ப­டுத்­திக் கொள்ள வேண்­டும். அப்­போ­து­தான் வல­து­சா­ரி­க­ளின் கூச்­சல் ஓயும்; ஒழி­யும்.

இந்­நூல் வெளி­யீட்டு விழா­வில் கலந்து கொண்டு உரை­யாற்­றிய வைர­முத்து நமக்­குக் கிடைத்த கபி­லர். அவர் உரை­யில் பட்டுத் தெறித்த கருத்தை ஏடு­க­ளி­லி­ருந்து வெட்டி எடுத்து வைத்­தி­ருக்­கி­றோம். காலம் தோறும் கம்­யூ­னிஸ்­டு­கள் நூலைப் பற்றி அவர், ஆட்­கள் மீது வாள் வீச­லாம், ஆனால் சூரிய ஒளி மீது எப்­படி வாள் வீசு­வீர்­கள்? கம்­யூ­னிச் சித்­தாந்­தம் காற்­றைப் போன்­றது. சூரிய வெளிச்­சத்­தைப் போன்­றது. தியா­கம் இல்­லாத கட்சி வாழ்­வ­தில்லை. முகம் தெரி­யாத தியா­கி­ க­ளின் கதையை கண்­ணுக்­குத் தெரி­யாத வேர்­க­ளின் கதையை இந் நூல் பதிவு செய்­துள்­ளது. கம்­யூ­னிஸ்­டு­கள் மட்­டு­மல்ல தமி­ழர்­கள் அனை­வ­ரும் இந் நூலைப் படிக்க வேண்­டும்”– என்று கவிப்­பே­ர­ரசு பரிந்­துரை செய்­கின்­றார். நாமும் அதனை வழி­மொ­ழி­கின்­றோம்.

ஜீவ­பா­ர­தி­யின் நூல் வர­வேற்­கத் தகுந்த ஒரு சிறந்த ஆவ­ணம். எந்த இயக்­கத்­துக்­கா­ரர்­க­ளும் முன்­னணி வீரர்­க­ளும் படித்­துப் பயன் பெற­லாம். நூலின் முன்னே கட்­டி­யங் கூறும் முத்­த­ர­ச­னின் அணிந்­து­ரை ­யை­யும் அர­சி­யல்­வா­ணர்­கள் படித்­துப் பார்த்­தால் நெஞ்­சில் நிறு­த்­து­வர். முழு மெய்ப்­பொ­ருளை அறிய முயல்­வர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button