தொழிலாளி வர்க்கத்தின் போர்க்குணமிக்க தமிழ்நாடு ஏஐடியூசியின் 21வது மாநாடு
எழுச்சிமிகு பேரணி; உரிமைக் கருத்தரங்கம்

தொழிலாளர் வர்க்கத்தின் ஒற்றுமையையும் போர்க்குணமிக்க எழுச்சியையும் வெளிப்படுத்தும் வகையில், தமிழ்நாடு ஏஐடியூசியின் 21வது மாநில மாநாடு 2026 அக்டோபர் 9 முதல் 11 வரை கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில், பெங்களூரு புறவழிச்சாலையில் உள்ள தோழர் டி.சுந்தரராஜன் நினைவரங்கத்தில் (சிவரஞ்சனி ஹோட்டல்) நடைபெற்றது.
ஓசூர் நகரெங்கும் செங்கொடி பட்டொளி வீசி பறந்தது. திரும்பும் திசை எங்கும் கோரிக்கைகள், தியாகிகள் படங்களுடன் பதாகைகள் ஏஐடியுசியின் வரலாற்று சாதனையையும், முன்னேறும் வழியையும் பறைசாற்றின. வரவேற்பு குழு தோழர்கள் பம்பரமாய் சுழன்று உழைத்து நகரையே செம்மயமாக்கி இருந்தனர். மாநிலம் முழுவதிலுமிருந்து 300 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்றனர்.
தொடக்க நிகழ்ச்சியும் தியாகிகளுக்கு அஞ்சலியும்
அக்டோபர் 9ஆம் தேதி காலையில் தமிழ்நாடு ஏஐடியுசி தலைவர் எஸ்.காசிவிஸ்வநாதன் தலைமையில் மாநாடு தொடங்கியது. தமிழ்நாடு ஏஐடியுசி செயலாளர் கே.இரவி மாநாட்டுக் செங்கொடியை ஏற்றினார். இதனுடன், நா.பெரியசாமி Ex.MLA, என்.செல்வராஜ், ஏ.எஸ்.கண்ணன் Ex.MLA, சி.தங்கவேல், எஸ்.மூர்த்தி, ஆர்.சடையப்பன், கே.மணி, எம்.ஜகாங்கீர், எஸ்.மயில்வாகனன், கே.சேது, டி.சுப்பையா, வி.சித்தையன், என்.அருள்தாஸ், ஆர்.சாமிகண்ணு, ஆர்.பாலகிருஷ்ணன், கே.கலாராணி, கே.மாரிமுத்து MLA, ஏ.வளர்மதி, எஸ்.பி.ராதா, சி.நந்தினி ஆகிய தமிழ்நாடு ஏஐடியுசியின் முன்னணி தலைவர்களால் முந்தைய 20 மாநாடுகளை நினைவுகூர்ந்து 20 செங்கொடிகள் ஏற்றப்பட்டன.

முந்தைய மாநில மாநாடு நடைபெற்ற திருநெல்வேலியிலிருந்து கொண்டுவரப்பட்ட மாநாட்டுக் கொடியை, ஏஐடியூசியின் தேசியச் செயலாளர் டி.எம்.மூர்த்தி பெற்றுக்கொண்டார்.
சேலம் தியாகி ப.பரமசிவம், நாமக்கல் எம்.பி.மணிவேல், எம்.ஜெயராமன் ஆகியோர் நினைவாக கொண்டுவரப்பட்ட தியாகிகள் நினைவுச் சுடர்களை, மாநில துணைத்தலைவர்கள் மு.சங்கையா, மீனாள் சேதுராமன், தேசிய செயலாளர் வகிதா நிஜாம் ஆகியோரால் மரியாதையுடன் பெற்றுக்கொள்ளப்பட்டன. தியாகிகள் நினைவுச் சின்னத்தில் சிபிஐ மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் தலைமையில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

மாநாட்டு வரவேற்பு செயலாளரும் கிருஷ்ணகிரி மாவட்ட ஏஐடியூசி பொதுச்செயலாளர் எம்.கே.மாதையன் வரவேற்புரையாற்றினார். பொது மாநாட்டைத் தொடங்கி வைத்து ஏஐடியூசி பொதுச்செயலாளர் அமர்ஜீத் கவுர் பேசினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் “வர்க்கப் போராட்டத்தைத் தீவிரப்படுத்துவோம்!” என்று பேசினார்.
தொமுச தலைவர் கி.நடராஜன், சிஐடியு மாநில பொதுச்செயலாளர் எஸ்.கண்ணன், எச்.எம்.எஸ். மாநிலத் தலைவர் மு.சுப்பிரமணியன், ஐஎன்டியுசி மூத்த மாநில துணைத்தலைவர் கே.ஏ.மனோகரன் எக்ஸ். எம்எல்ஏ,, ஏஐசிசி.டியு மாநில துணைத்தலைவர் பி.நடராஜன், ஏஐயுடியுசி மாநில தலைவர் ஏ.அனவரதன், யுடியுசி மாநில பொதுச்செயலாளர் அ.சேக்கிழார், எம்எல்எப். ராமச்சந்திரன் உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் தலைவர்கள் வாழ்த்துரை வழங்கினர். ஏஐபிஇஏ பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாசலம் மாநாட்டை வாழ்த்திப் பேசினார். மாநிலப் பொதுச்செயலாளர் ம.இராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.
பிரதிநிதிகள் மாநாடு
அக்டோபர் 9ஆம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு பிரதிநிதிகள் மாநாடு தொடங்கியது. தமிழ்நாடு ஏஐடியூசி பொதுச் செயலாளர் ம. இராதாகிருஷ்ணன் அறிக்கையை முன்வைத்தார். அக்டோபர் 9 மற்றும் 10 ஆகிய இரண்டு நாட்களிலும் பொதுச் செயலாளரின் அறிக்கை மீது 43 தோழர்கள் விவாதத்தில் பங்கேற்று ஆக்கப்பூர்வமான விவாதங்களை நடத்தினர்.
ஏஐடியூசி தேசியச் செயலாளர் ஆர்.பிரசாத் மற்றும் சகோதர சங்கங்களான தமிழ்நாடு வங்கி ஊழியர் சம்மேளனம்., தேசிய தொலைதொடர்பு சம்மேளனம் சார்பில் இ.அருணாசலம், டி.குழந்தைநாதன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

அக்டோபர் 10ஆம் தேதி மாலை, “தொழிலாளர் உரிமைகளைச் சீர்குலைக்கும் தொழிலாளர் சட்டத் தொகுப்புகள்” என்ற தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது. ஏஐடியூசியின் தேசியத் துணைத் தலைவர் கே.சுப்பராயன் எம்.பி. கருத்தரங்கிற்குத் தலைமை தாங்கினார். கர்நாடக மாநில ஏஐடியூசி தலைவர் தோழர் பாபு மேத்யூ சிறப்புரையாற்றினார்.

ஏஐடியுசியின் மூத்த முன்னோடிகள் கே.இரவி, மீனாள் சேதுராமன், எஸ்.பி.ராதா, எஸ்.குப்பன், வ.சித்தையன், டி.சுப்பையா, அ.சாமிக்கண்ணு, பி.அருணாசலம், பி.பரமராஜ் ஆகியோர் பிரதிநிதிகளின் உற்சாக மிகுந்த கரவொலிகளுக்கு இடையே கவுரவிக்கப்பட்டனர். பொதுச்செயலாளர் தோழர் அமர்ஜித் கவுர் அவர்கள் பயனாடை அணிவித்து, நினைவுப்பரிசு வழங்கி சிறப்பித்தார்.

WFTU துணைப் பொதுச்செயலாளர் சி.குமார் வாழ்த்தினார்.
ஏஐடியூசி பொதுச்செயலாளர் அமர்ஜித் கவுர் மாநாட்டு நிறைவுரையாற்றினார்.
வரவேற்புக் குழுவின் செயலாளர் எம்.கே.மாதையன் நன்றி கூறினார்.
மாநாட்டின் வெற்றிக்கு உழைத்த தோழர்கள், ஏஐடியூசி மாநில, மாவட்ட நிர்வாகிகள் கவுரவிக்கப்பட்டனர்.
மாநாட்டை மிகவும் சிறப்பாக நடத்தி தந்த கிருஷ்ணகிரி மாவட்டக் குழு தோழர்களுக்கும், வரவேற்புக் குழுத் தோழர்களுக்கும் மாநில மையம் சார்பில் எஸ்.காசிவிஸ்வநாதன் நன்றி கூறினார்.
தொழிலாளர் பேரணியும் பொதுக்கூட்டமும்
அக்டோபர் 11ஆம் தேதி மாலை, ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற பேரணி நடைபெற்றது. தளி சாலையில் மாநகராட்சிப் பூங்கா / வேளாங்கண்ணி பள்ளி அருகிலிருந்து புறப்பட்ட பேரணியை அமர்ஜித் கவுர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பொதுக்கூட்டம்
ஓசூர் ராம்நகர் பகுதியில் உள்ள தோழர் ஆர்.நல்லகண்ணு திடலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேரணி நிறைவடைந்தது. வரவேற்பு குழுவின் கவுரவத் தலைவர் எம்.இலகுமைய்யா பொதுக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். ஏஐடியூசி பொதுச்செயலாளர் அமர்ஜீத் கவுர், கே.சுப்பராயன் எம்.பி. சி. குமார் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.
எம்.கே.மாதையன் நன்றி கூறினார்.
கலைமாமணி சித்தன் தெ.ஜெயமூர்த்தி குழுவினரின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.