தமிழகம்

வெள்ள பாதிப்புகளை மத்தியக் குழு இன்று முதல் பார்வையிடுகிறது

சென்னை, நவ. 21 சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை பார்வையிட மத்திய குழு ஞாயி றன்று தமிழகம் வந்தது. இந்த குழு, முதல மைச்சர் மு.க.ஸ்டாலினுடன் வருகிற 24ந்தேதி ஆலோசனை நடத்துகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாளில் இருந்து தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தை ஒட்டியுள்ள வங்க கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு அருகே கரையை கடந்தது. இதனால் சென்னை நகர், புறநகர் பகுதிகள், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இதேபோல கன்னியாகுமரி, நெல்லை, விழுப்புரம் உள்பட பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்தது. டெல்டா மாவட்டங்களில் பெய்த கனமழையால் பல ஆயிரம் ஏக்கர் பயிர்கள் மூழ்கின. இந்த நிலையில் டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பயிர் சேதங்களை ஆய்வு செய்ய அமைச்சர்கள் குழுவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைத்தார். இந்த நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து சேத விவரங்களை தி.மு.க. எம்.பி. டி. ஆர். பாலு அளித்தார். மேலும் வெள்ள நிவாரண நிதியாக தமிழ்நாட்டுக்கு 2,629 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தார். அப்போது தமிழகத்தில்வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய குழுவை அனுப்பி வைப்பதாகவும், அந்த குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில்பேரிடர்நிதி ஒதுக்கப்படும் என்றும் ஒன்றிய அரசு கூறியி ருந்தது.

இதனையடுத்து உள்துறை இணைச்செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவில், ஒன்றிய அரசின் நிதித்துறை செலவின பிரிவு ஆலோசகர் ஆர்.பி.கவுல், ஒன்றிய வேளாண்மைத்துறை பிரிவு இயக்குனர் விஜய் ராஜ்மோகன், சென்னையில் உள்ள ஒன்றிய நீர்வள அமைச்சகத்தின் நீர் ஆணையத்தின் இயக்குனர் ஆர்.தங்கமணி, டெல்லியில் உள்ள ஒன்றிய எரிசக்தித்துறை உதவி இயக்குனர் பாவ்யா பாண்டே, சென்னை யில் உள்ள ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மண்டல அதிகாரி ரணஞ்செய் சிங், ஒன்றிய ஊரக வளர்ச்சித்துறை சார்பு செயலர் எம்.வி.என்.வரப்பிரசாத் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த நிலையில் இந்த குழுவினர் ஞாயிறன்று சென்னை வந்தனர். இக்குழுவினர் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சென்று பார்வையிட உள்ளது. இக்குழுவினர் இரண்டாக பிரிந்து 22-ந்தேதி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு ஒரு குழுவினரும், கன்னியாகுமரிக்கு ஒரு குழுவினரும் செல்கிறார்கள். 23-ந்தேதி ஒரு குழு கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சைக்கும் மற்றொரு குழு வேலூர், ராணிப்பேட்டைக்கும் செல்கிறது. ஒரு குழுவை வருவாய் நிர்வாக ஆணையர் க.பணீந்திர ரெட்டியும், மற்றொரு குழுவை வருவாய் துறை செயலர் குமார் ஜெயந்த்தும் வழி நடத்துவார்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button