இந்தியா

மோடி அரசு பின்வாங்கியது ஏன்?

அ.அன்வர் உசேன்

நவம்பர் 19ஆம் தேதி காலை 9 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்பொழுது மூன்று வேளாண் சட்டங்களையும் தனது அரசாங்கம் திரும்ப பெறுவதாகவும் அதற்கான நடைமுறைகள் எதிர் வருகின்ற குளிர்கால நாடாளுமன்ற தொடரில் செயலாக்கப்படும் எனவும் விவசாயிகள் தமது போராட்ட களத்திலிருந்து வீடு திரும்ப வேண்டும் எனவும் கூறினார். இந்த அறிவிப்பு ஆச்சர்யம்/அதிர்ச்சி/மகிழ்ச்சி என பல்வேறு எதிர்வினைகளை தோற்றுவித்தது எனில் மிகை அல்ல. ஒரு ஆண்டாக போராடும் விவ சாயிகளுக்கு இது ஆச்சர்யத்தையும் மகிழ்ச்சியை யும் தோற்றுவிக்கும் எனில் பல்வேறு சங் பரிவார அமைப்பினருக்கு இது நிச்சயம் அதிர்ச்சியை விளைவித்திருக்கும். இதுவரை விவசாயிகளை இழிவுபடுத்தி வந்த இவர்கள் இப்பொழுது எத்த கைய கருத்தை கட்டமைக்கின்றனர் என்பது பொறுத்தி ருந்து பார்க்க வேண்டிய ஒன்று!

இரு முக்கிய புறச்சூழல்கள்

இந்த அறிவிப்பின் இரு முக்கிய புறச்சூழல்களை எவரும் கவனிக்காமல் இருக்க முடியாது. ஒன்று இந்த அறிவிப்பை குருநானக் அவர்களின் பிறந்த நாளன்று மோடி வெளியிட்டுள்ளார். விவசாயிகள் போராட்டத்தில் சீக்கியர்களின் பங்கு மிக முக்கிய மானது என்பதையும் அவர்களிடையே தனது அரசியல் செல்வாக்கு அதல பாதாளத்தில் உள்ளது என்பதையும் மோடி உணர்ந்துள்ளார். எனவே குரு நானக் அவர்களின் பிறந்த நாளன்று வந்துள்ள இந்த அறிவிப்பு மிகவும் துல்லியமாக மதிப்பிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது என்பதை உணரலாம். இன்னொரு மிக முக்கிய புறச்சூழல் இன்னும் சில மாதங்களில் பஞ்சாப்/ உத்தரப்பிரதேசம்/ உத்தர்கண்ட்/இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற உள்ளன. இந்த தேர்தல்களில் விவசாயிகள் போராட்டமும் அவர்கள் எழுப்பிய பிரச்சனையும் மிக முக்கிய தாக்கத்தை உருவாக்கும்.

குறிப்பாக மேற்கு உத்தரப் பிரதேசத்தில் சுமார் 75 தொகுதிக ளில் விவசாயிகள் போராட்டம் மையமான பிரச்சனை யாக இருக்கும். இந்த போராட்டத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ராகேஷ் சிங் திகாயத் மேற்கு உ.பி.யை சேர்ந்தவர் என்பதும் ஜாட் இன மக்கள் இந்த போராட்டத்தின் முக்கிய பகுதியாக உள்ள னர் என்பதும் குறிப்பிடத்தக்கது. உ.பி. மற்றும் உத்தர்கண்ட் தேர்தல்களில் ஏற்படும் பின்னடைவு பின்னர் வரும் பல்வேறு சட்டமன்ற தேர்தல்களிலும் முக்கியமாக 2024 நாடாளுமன்ற தேர்தல்களிலும் அதிக தாக்கத்தை உருவாக்கும் என்பது மோடிக்கும் சங் பரிவாரத்துக்கும் தெரியாமல் இருக்காது. எனவே அந்த தேர்தல்களில் தமக்கு உருவாகியிருக்கும் எதிர்ப்பை சமாளிக்க வேண்டும் எனில் இப்பொழுது பதுங்குவது அரசியல் புத்திசாலித்தனம் என்பது அவர்கள் கணக்கு என பல ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். அது தவறாக இருக்க வாய்ப்பு இல்லை.

வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் மோடி யின் உரையில் சில முக்கிய அம்சங்களை கவ னிப்பது மிக அவசியம். இப்பொழுதும் இந்த சட்டங் கள் தவறானவை என்பதை மோடி ஏற்கவில்லை. இந்த சட்டங்கள் சிறந்தவை எனவும் விவசாயி களுக்கு மிகவும் நன்மை தரக்கூடியவை எனவும் மோடி கூறுகிறார். ஆனால் இந்த சட்டங்களின் நன்மைகளை விவசாயிகளுக்கு புரியவைக்க தனது அரசால் முடியவில்லை எனவும் அத னால்தான் திரும்ப பெறுவதாகவும் கூறியுள்ளார். ஆக, விவசாயிகளின் வீரம் செறிந்த போராட்டம் மோடியிடம் வேளாண் சட்டங்கள் குறித்து எவ்வித சிந்தனை மாற்றத்தையும் உருவாக்கவில்லை. மாறாக இந்த சிறந்த சட்டங்களை விவசாயிகள் புரிந்துகொள்ளும் அளவுக்கு அவர்களுக்கு அறிவு இல்லை; எனவே இந்த சட்டங்கள் திரும்ப பெறப்படுகின்றன!

விவசாய கூட்டமைப்பின் நியாயமான எதிர்வினை

இந்த சூழலில் சுமார் 400 விவசாய அமைப்புக ளை உள்ளடக்கிய சம்யுக்தா கிசான் மோர்ச்சாவின் எதிர்வினை மிகவும் நியாயமான ஒன்று. இந்த அறி விப்பை வரவேற்றுள்ள மோர்ச்சா இது நாடாளு மன்றத்தில் செயலாக்கப்பட வேண்டும் எனவும் அவ்வாறு நடந்தால் இது ஒரு வரலாற்று வெற்றி எனவும் குறிப்பிட்டுள்ளது. மோடியின் வாக்குறுதி நாடாளுமன்றத்தில் நிறைவேறும் வரை தாங்கள் போராட்ட களத்திலிருந்து திரும்பப் போவது இல்லை எனவும் விவசாயிகள் அறிவித்துள்ளனர். பல பொய்களை வாய் கூசாமல் முன்வைக்கும் மோடி அரசாங்கம் தனது வாக்குறுதியை நிறைவேற்றும் வரை பொறுமை காப்பது அவசியம் என சம்யுக்தா மோர்ச்சா மதிப்பிடுவது மிகவும் சரியான ஒன்று.

அதே போல மோடி அரசின் வறட்டுபிடிவாதம் காரணமாக லக்கிம்பூர் மரணங்கள் உட்பட 700க்கும் அதிகமான விவசாயிகள் உயிரிழந்துள்ளனர் என்ப தையும் சம்யுக்தா கிசான் மோர்ச்சா பதிவு செய்துள்ளது. இந்த மரணங்களுக்கு யார் பொறுப்பு? மோடி அரசாங்கம்தான்! ஆனால் இந்த உயிரி ழப்புகள் குறித்து மோடி ஒரு வார்த்தை கூட கூற வில்லை. மோடியிடம் அதனை எதிர்பார்க்கவும் முடியாது.

மேலும் சில முக்கிய அம்சங்களை சம்யுக்தா மோர்ச்சா முன்வைத்துள்ளது. தமது போராட்டங்க ளின் கோரிக்கைகளில் கருப்பு வேளாண் சட்டங்கள் ஒரு பகுதிதான் எனவும் குறைந்தபட்ச ஆதார விலை சட்டப்பூர்வமாக்குவது என்பதும் மின்சார சட்டம் திருத்தம் திரும்ப பெறுவது என்பதும் முக்கிய கோரிக்கைகள் என பிரதமருக்கு மோர்ச்சா நினைவு படுத்தியுள்ளது.

அவதூறு பிரச்சாரத்தை முறியடித்து கிடைத்த வெற்றி

இந்த வெற்றி சாதாரணமாக வந்துவிட வில்லை. வேளாண் சட்டங்கள் குறித்து 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் அவசர சட்டங்கள் பிறப்பிக் கப்பட்டன. அப்பொழுதிலிருந்தே விவசாயிகளின் போராட்டங்கள் தொடங்கிவிட்டன. பஞ்சாபில் தொடங்கிய இந்த போராட்ட தீ ஹரியானா/ உத்தரப் பிரதேசம்/ ராஜஸ்தான் என பல இடங்களுக்கு வேகமாக பரவ தொடங்கியது. நாடாளுமன்ற மக்கள வையிலும் பின்னர் மாநிலங்களவையிலும் மோடி அரசாங்கம் மறுபரிசீலனை செய்யும் என எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் மோடி அரசாங்கம் தனது மிருக பலத்தை வைத்து விவாதங்கள் போதுமான அளவு இல்லாமலேயே மக்களவையில் சட்டங்களை நிறை வேற்றியது. மாநிலங்களவையில் மோடி அரசுக்கு பெரும்பான்மை இல்லை. எனவே தோல்வியை மறைக்க வரலாறு காணாத ஜனநாயக படுகொலை யில் ஈடுபட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தலைவர்கள் எலமறம் கரீம் உட்பட பல எதிர்க்கட்சி தலைவர்கள் வெளியேற்றப்பட்டு மோசடித்த னமாக சட்டங்கள் நிறைவேற்றப்பட்டதாக அறி விக்கப்பட்டன.

இந்த ஜனநாயக படுகொலைக்கு பின்னர் விவசாயிகள் மேலும் ஆவேசம் கொண்டு தில்லி எல்லைகளில் 4 இடங்களில் போராட்டத்தில் ஈடு பட்டனர். இந்த போராட்டத்தை சிறுமைப்படுத்தவும் இழிவுபடுத்தவும் தம்மிடம் உள்ள அனைத்து மோசடி சூழ்ச்சிகளையும் சங் பரிவாரத்தினர் பயன் படுத்தினர். எனினும் அத்தனை அவதூறுகளையும், அடக்குமுறைகளையும் தகர்த்து விவசாயிகள் போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. இது உலக போராட்ட வரலாற்றில் இடம் பெறத்தக்க ஒன்றாகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button