தமிழகம்

முல்லைப்பெரியாறு அணை 141 அடி – சென்னை காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவண்ணாமலையில் 806 ஏரிகள் நிரம்பின

152 அடி கொண்ட முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டம் 141 அடியை எட்டி கடல்போல காட்சியளிக்கிறது.

முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை நீரைத் தேக்கிக்கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் அனுமதியளித்துள்ள நிலையில் அணையின் நீர் மட்டம் 141 அடியை எட்டியுள்ளது.

தமிழகத்தில் தொடர்ந்து பெய்துவரும் வடகிழக்கு பருவமழை காரணமாக அணைகள், ஏரிகள் நிரம்பி வருகின்றன. மேட்டூர் அணை நிரம்பி வழிகிறது. அணையில் இருந்து 30ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

அண்மையில் முல்லைப் பெரியாறு அணையில் 138 அடியிலேயே தண்ணீர் திறக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. இந்நிலையில், தற்போது தொடர் கனமழை காரணமாக முல்லைப் பெரியாறு அணை 141 அடியை எட்டியுள்ளது. அணை முழு கொள்ளளவை எட்டப்போகும் நிலையில் அணையில் இருந்து உபரிநீர் திறந்து விடப்படும் என்பதால் கரையோரங்களில் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தொடர்ந்து பெய்துவரும் வடகிழக்கு பருவமழை காரணமாக அணைகள், ஏரிகள் நிரம்பி வருகின்றன.

பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளின் நீர்மட்டம் நிலவரத்தை பார்த்தால், சென்னை மாவட்டத்தை பொறுத்தவரை மொத்த ஏரிகள் எண்ணிக்கை 16 ஏரிகளும் 100% முழு கொள்ளளவை எட்டியுள்ளன.

காஞ்சிபுரத்தில் உள்ள 267 ஏரிகளும், செங்கல்பட்டில் உள்ள 444 ஏரிகளும் திருவண்ணாமலை மாவட்டத்தில் 76 ஏரிகளும் சென்னையில் 16 ஏரிகளும் அதன் முழு கொள்ளவை எட்டி நிரம்பியுள்ளன.

காஞ்சிபுரம் மாவட்டம் மொத்த ஏரிகளின் எண்ணிக்கை 381. இந்த ஏரிகளில் 267 ஏரிகள் 100 சதவிகிதமும், 72 ஏரிகள் 75 சதவிகிதமும், 40 ஏரிகள் 50 சதவிகிதமும் நிரம்பியுள்ளன.

செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தமுள்ள 528 ஏரிகளில் 444 ஏரிகள் 100 சதவிகிதமும், 79 ஏரிகள் 75 சதவிகிதமும், 5 ஏரிகள் 50 சதவிகிதமும் நிரம்பியுள்ளன.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மொத்த ஏரிகளில் எண்ணிக்கை 93. இந்த ஏரிகளில்- 76 ஏரிகள் 100 சதவிகிதமும், 17 ஏரிகள் 75 சதவிகிதமும், நிரம்பியுள்ளன.

திருவண்ணாமலை செங்கல்பட்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் 806 ஏரிகள் என்று 100% தன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது 169 ஏரிகள் 75 சதவிகிதமும், 47 ஏரிகள் 50 சதவிகிதமும் நிரம்பியுள்ளன. இந்த மொத்த ஏரிகளின் எண்ணிக்கை 1022 ஆகும்.

வடகிழக்குப் பருவமழைக்காலம் அக்டோபர் முதல் டிசம்பர் வரை நீடிக்கும். ஆரம்பத்திலேயே அதிகமான அளவு மழை கொட்டித்தீர்த்துள்ளதால் அணைகள் , ஏரிகள், குளங்கள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button