இந்தியா

பாஜக ஊழல்வாதிகளை அம்பலப்படுத்துவேன்!

திரிபுரா முன்னாள் ஆளுநர் ததகதா ராய் கொதிப்பு

புதுதில்லி, நவ. 19 – 2002-2006 வரை மேற்கு வங்க பாஜக தலைவராகவும், 2002 முதல் 2015 வரை பாஜக தேசிய செயற்குழு உறுப்பினராகவும் இருந்தவர் ததகதா ராய். 2014-இல் மத்தியில் பாஜக ஆட்சி க்கு வந்தபோது, 2015-18 வரை திரிபுரா வுக்கும், 2018 முதல் 2020 வரை மேகா லயாவுக்கும் ஆளுநராக நியமிக்கப் பட்டார். இதன் காரணமாக, ததகதா ராய் தனது கட்சி உறுப்பினர் பதவியை ராஜி னாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால், 2020-இல் ஆளுநர் பதவிக் காலம் முடிந்த பிறகு, மீண்டும் பாஜக -வில் சேர முயன்றபோது, பாஜக அவ ரைச் சேர்த்துக் கொள்ளவில்லை. இந்நிலையில், ததகதா ராய் அண்மையில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “என்னுடைய ஆளுநர் பதவி முடிந்தவுடன் கட்சியில் சேர்ந்து தொண்டாற்றுகிறேன் என்று கூறி னேன். ஆனால் நான் பதவியோ, டிக்கெட்டோ கேட்கவில்லை.

நான் விஜய் வர்க்கியா, திலிப் கோஷ் ஆகி யோரை சந்தித்தேன். என்னை கட்சியில் சேர்க்குமாறு கூறினேன். கோஷ் தலைமையில் பணியாற்றத் தயார் என்றேன். ஆனால் அவர்கள் என்னைப் புறக்கணித்தனர். நான் கட்சி க்காக 40 ஆண்டுகாலம் உழைத்துள் ளேன். ஆனாலும், என்னை இழிவு படுத்தி வருகின்றனர். ஒரு விசுவாசி யாக ‘மிஸ்டு கால்’ கொடுத்து பாஜக-வில் சாதாரண உறுப்பினராக இருக்கிறேன். செயல் உறுப்பினராக சேர்த்துக் கொள்ள மறுக்கின்றனர். அழகான பெண்கள், நட்சத்திரங் கள், கட்சிக்கு சம்பந்தமில்லாதவர் களுக்கு உடனடியாக பாஜக-வில் உறுப்பினர் பதவி, தேர்தல் சீட் கிடைக்கும். ஆனால், பாஜக தலை வர்கள், திரிணாமுல் குண்டர்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தைக் கூட என் போன்ற வீரர்களுக்கு கொடுப்ப தில்லை. பாஜக-வில் ஏகப்பட்ட தவறுகள் நடக்கின்றன. அதன்காரணமாகவே என்னை செயல் உறுப்பினராக சேர்த்துக் கொள்ள மறுக்கின்றனர். இதுதொடர்பாக நட்டாவிடம் 10 பக்க அறிக்கையை ஏற்கெனவே அளித்து ள்ளேன். என்னிடம் ரகசியங்கள் ஏராள மாக உள்ளன. பாஜகவில் உள்ள ஊழல்களை அம்பலப்படுத்துவேன்.இவ்வாறு ததகதா ராய் கூறியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button