தமிழகம்

கோவை சம்பவம் மத்திய உளவுத்துறை செயலிழந்து விட்டது என்பதை காட்டுகிறது -கே.சுப்பராயன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில கட்டுப்பாட்டு குழு தலைவரும் திருப்பூர் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான கே சுப்பராயன் என்று ஒரு வழக்கிற்காக கோவை வந்திருந்தார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார். செய்தியாளர்கள் சந்திப்பில் கோவை சம்பவம் மத்திய உளவுத்துறை செயல் இழந்து விட்டது என்பதை காட்டுகிறது. என்றும், இந்த நிமிடம் வரை அமைதியாக செயல்பட்டுக் கொண்டிருக்க கூடிய கோவையில் கலவர சூழ்நிலையை ஏற்படுத்த இந்தித்துவ அமைப்புகள் முயற்சிக்கின்றன என்றும் குற்றம் சாட்டினார்.

கோவை குடிநீர் விநியோகத்தை சூயஸ் பன்னாட்டு நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டம், அதற்காக அரசியல் பலி வாங்கும் நோக்கத்திற்காக போடப்பட்ட வழக்கு அந்வழக்கிற்காக இன்று கோவை வந்துள்ளேன்.

இந்த வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று மாநில முதல்வருக்கு மனு கொடுக்கப்பட்டதன் அடிப்படையில் இந்த வழக்கு ரத்து செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கின்றோம்.

கோவையை பொறுத்தவரையில் மிகவும் துரதிஷ்டவசமான ஒரு சம்பவம் கடந்த 23 ம் தேதி நடைபெற்றுள்ளது. காரில் இருந்த சிலிண்டர் வெடிக்கப்பட்ட நிலையில் விபத்து நடைபெற்றது. அதை ஒட்டி தமிழ்நாடு காவல்துறை தீவிரமாக நடவடிக்கை எடுத்து வந்தது, அது சம்பந்தமாக சந்தேகத்தின் அடிப்படையில் சிலர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

முழுமையான விசாரணை நடைபெற வேண்டும், குற்றவாளிகள் தப்பித்தித்துவிடாமல் தண்டிக்கப்பட வேண்டும். எக்காரணத்தை கொண்டும் நிரபராதிகள் இந்த வழக்கில் இணைக்கப்பட்டு விடக்கூடாது என்றும், யார் குற்றம் புரிந்தார்களோ? யார் குற்றம் புரிய துணையாக இருந்தார்களோ அவர்களை விருப்பு வெறுப்பு இல்லாமல் கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே எங்களது நிலை.

ஒருவருக்கு இஸ்லாமிய பெயர் வைத்து இருப்பதாலேயே அவர்கள் குற்றவாளிகளாக பார்க்கின்ற பார்வை தவறானது, அப்படிப்பட்ட கருத்தோட்டத்தை பிஜேபி சங்பரிவார் அமைப்புகள் திட்டமிட்டு இட்டுக்கட்டி புனைந்து வருகிறது.

அத்தகைய சதி வலைகளில் காவல்துறை விழுந்து விடக்கூடாது என்றும், எச்சரிக்கையோடு இந்த வழக்கு அணுக வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

இதே போல மல்லேகானிலும் ஒரு சம்பவம் நடைபெற்றது, ஆங்கே இந்துத்துவ தீவிரவாதி ஈடுபட்டார் என்பது கண்டறியப்பட்டது. அதில் ஒருவர் பாராளுமன்றத்தில் உறுப்பினராக இருக்கிறார். அவர்கள் எந்த அளவிற்கு தண்டிக்கப்பட்டார்கள் என்பதை நாடறியும், அது போலவே ஆக்ராவும் உள்ளது.

எனவே, குற்றம் புரிகிற குற்றவாளிகள் எல்லா சமூகத்திலும் சாதிகளிலும் இருக்கிறார்கள். ஆனால், குற்றவாளிகள் கண்டறியப்படும் போது அந்த சமூகத்தை குற்றம் கண்ணோட்டத்தோடு அணுகும் அணுகுமுறை தவறானது, ஆபத்தானது.

எனவே, சட்டத்தின் சாரம் குற்றவாளிகள் தப்பித்தாலும் நிரபராதிகள் தண்டிக்கப்பட்டு விடக்கூடாது என்பதாகும். அந்த அடிப்படையில் இந்த வழக்கை அணுக வேண்டும்.

இந்தியாவில் தீவிரவாத தன்மையை என்பது இந்துத்துவ தீவிரவாதிகளிடமும் இருக்கிறது. இஸ்லாமிய பகுதிகளில் இருந்தும் சில சம்பவங்கள் நடைபெறுகின்றன.

இதற்கான காரணிகள் என்ன என்பதை கண்டறிந்து அதற்கு விடை காண வேண்டும்.

கோயம்புத்தூர் ஒரு சென்சிட்டிவ் சென்டர் என்ற முறையில் கோவை மத்திய புலனாய்வுத் துறை கண்காணிப்பில் இருக்கிறது. ஆனாலும் கூட மத்திய புலனாய்வுத் துறை ஏன் இதை கண்டறியவில்லை. மதிய உளவுத்துறைகள் செயல் இழந்து விட்டன என்பதை தான் இந்த சம்பவம் காட்டுகிறது.

அண்ணாமலை ஒரு பொருட்டாக பதில் அளிக்கப்பட்ட அரசியல்வாதி அல்ல. முப்பத்தி ஒன்றாம் தேதி பிஜேபி கடை அடைப்பு நடத்த விடுத்துள்ள அழைப்பை நானும் பார்த்தேன்.

இந்த நிமிடம் வரை அமைதியாக நடந்து கொண்டிருக்கின்ற கோயம்புத்தூரில், ஒரு கலவர சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு தான், இந்துத்துவ அமைப்புகள் இந்த கடையடைப்புக்கு அழைப்பு விடுத்திருக்கின்றன என்று நான் கருதுகிறேன்.

கெஜ்ரிவால் கருத்து மிகவும் வருந்தத்தக்கது. வேதனை அளிக்கிறது. அவர் இந்துத்துவ என்ற கருத்தை முன்வைத்து பிஜேபி இந்துக்களை ஐக்கிய படுத்தி அதில் வெற்றியும் பெற்றிப்பதைப் போல அதே வழி முறையையும் பின்பற்றலாம் என்று நோக்கத்தோடு இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

ஒரு மதசார்பற்ற அரசியல் சட்டத்தை கொண்டு இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட மத கடவுளை ரூபாய் நோட்டில் போட வேண்டும் என்பது மடத்தனம்.

இது ஏற்கத்தக்கது அல்ல. அதேபோல காங்கிரசும் எல்லா மத வணக்கத்திற்கு உரியவர்களையும் போட வேண்டும் என்றும் சொல்வதும் ஏற்கத்தக்கதல்ல.

இந்தியா அடிப்படையில் மத சார்பற்ற நாடு, சாம்பாரில் உப்பு கரைந்து இருப்பதைப் போல இந்திய அரசியல் சாசனத்தின் ஒவ்வொரு வரியிலும் மதசார்பற்ற இந்தியா என்பது கரைந்து நிற்கிறது. எனவே, மத சார்பற்ற தன்மைக்கு எதிரான காங்கிரஸ் கெஜ்ரிவால் கருத்துக்களை நிராகரிக்கப்பட வேண்டும் என்றும் கே.சுப்பராயன் எம்.பி. கூறினார்.

பேட்டியின் போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சி. சிவசாமி, மாவட்ட துணை செயலாளர் எம். குணசேகர், முன்னாள் மாவட்ட செயலாளர் வி.எஸ். சுந்தரம், மு.வ. கல்யாணசுந்தரம் வி.ஆர். பாண்டியன், மேற்கு மண்டல செயலாளர் என். சந்திரன், மத்திய மண்டல செயலாளர் கே. ரவீந்திரன், ஏ.அஷ்ரப் அலி, மோகன், ராஜன், சி.ஏ. வேலுசாமி, ஜி. நாராயணசாமி சற்குணம் மற்றும் வழக்கறிஞர்கள் பி.தீபிகா, எம். பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button