விளையாட்டு

பாகிஸ்தான் சுற்றுப்பயணம் ஆஸி., கிரிக்கெட் வாரியம் அனுமதி

வரும் மார்ச் மாதம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, பாகிஸ்தான் மண்ணில் 3 டெஸ்ட், 3 ஒருநாள், 1 டி-20 என மூன்று விதமான போட்டிகளை கொண்ட தொடரில் பங்கேற்கும்படி சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) அட்டவணை வெளியிட்டிருந்தது. தீவிரவாத அச்சுறுத்தல், கொரோனா பரவலால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் பற்றி எந்த பேச்சும் இல்லாமல் அமைதியாக இருந்தது. இதனால் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை ஆஸ்தி ரேலிய அணி ரத்து செய்யும் என தகவல் வெளியாகியது. ஆனால் ஆஷஸ் சுற்றுப்பயணம் முடிந்த பின்புநல்ல தகவல் வரும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எதிர்பார்த்தது. எதிர்பார்த்தது போலவே ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தான் சுற்றுப்பய ணத்துக்கு அனுமதி வழங்கியுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தின் தொடக்க நிகழ்வான 3 டெஸ்ட் மார்ச் 4-ஆம் தேதி தொடங்குகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button