உலக செய்திகள்

செயலற்ற முழக்கங்களால் பூமியை காக்க முடியாது

பெய்ஜிங், நவ.21- சூழல் பாதுகாப்பு குறித்த கிளாஸ்கோ மாநாடு முடிந்துள்ள நிலையில் செயலற்ற முழக்கங்கள் பூமியைக் காக்கமுடியாது என்று சீனா கூறி யுள்ளது. கரியின் பயன்பாடு குறித்த வரைவு அறிக்கையில் கடைசி நிமிட திருத்தம் மேற்கொள் ளப்பட்டது தொடர்பாக மேற்கித்திய நாடுகள் சீனா வைக் குற்றம் சுமத்துவதில் எந்த நியாயமும் இல்லை என்று சீனா கூறியுள்ளது. பணக்கார நாடுகளின் நிதியுதவி இல்லாமல் வளர்ந்துவரும் நாடுகள் எதையும் செய்ய முடியாது. சீனப் பிரதிநிதிகள் குழு மாநாட்டில் ஆக்கப் பூர்வமாக பங்கேற்றது. பேச்சுவார்த்தைகளில் செயல் வேகத்துடன் கலந்துகொண்டது என்று சி சி டி வி அலைவரிசை செய்தியறிக்கையில் கூறப் பட்டுள்ளது. கிளாஸ்கோவில் புவியைக் காக்க உத வும் சீனாவின் திறனையும், பிரச்சனைகளுக் கானத் தீர்வையும் குழுவினர் எடுத்துரைத்தனர். கரி பயன்பாடு தொடர்பாக சீனா எடுத்த நிலை பாட்டை கண்டித்து மேற்கத்திய ஊடகங்கள் தவ றாகப் பிரச்சாரம் செய்துவரும் நிலையில், மற்ற உலக நாடுகளை கேள்வி கேட்பதற்கு முன் வளர்ந்த நாடுகள் அவர்கள் எவ்வாறு கரியை எரித்து முன்னேறினர் என்பதை நினைத்துப் பார்க்கவேண்டும் என்று சீன வெளியுறவுத் துறை செய்தியாளர் ஜாவோ லிஜியன் (Zhao Lijian) கூறினார்.

திரும்பிப் பார்க்கவேண்டிய பணக்கார நாடுகள்

இத்தனை ஆண்டுகளாக கரியை எரித்து சூழலைப் பாழாக்கி மின்சார உற்பத்தி செய்து வளர்ந்த பணக்கார நாடுகள் இப்போது வளர்ந்து கொண்டிருக்கும் நாடுகளைப் பார்த்து கேள்வி கேட்பது எவ்வாறு என்ற வினா எழுந்துள்ளது. நிதியுதவி எதையும் செய்ய தயாராக இல்லாத போது ஏழை மற்றும் வளர்ந்துவரும் நாடுகள் எவ்வாறு ஏழ்மையை ஒழிக்க கரியைப் பயன் படுத்தாமல் இருக்கமுடியும்? சூழல் மாசினைக் குறைக்க உதவும் தொழில் நுட்ப வசதிகளையும் அவை வழங்கவில்லை. ஆற்றல் உற்பத்திக்கு வலுவான செயல்முறை கள் தேவை. மக்கள் நாளிதழ் (People’s Daily) செய்தித் தாளிற்கு வழங்கிய நேர்முகத்தில் ஜாவோ இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார். மாநாட்டில் வருத்தங்களும், பற்றாக்குறைகளும் இருந்தன. சூழல் பாதுகாப்பிற்குரிய உலகளாவிய பொறுப்பு இன்னமும் பல சவால்களை எதிர்கொள்கிறது. “நாங்கள் முன்னேறவேண்டும். ஏழ்மையை ஒழிக்கவேண்டும். சூழலைப் பாதுகாக்க வேண்டும். எங்களால் முடிந்ததையெல்லாம் நாங்கள் செய்திருக்கிறோம். அதுமட்டுமல்ல மேலை நாடுகள் செய்யாததையும் செய்தி ருக்கிறோம்” என்று சீனத்தலைவர் முன்பு ஒரு முறை குறிப்பிட்டது சீன மக்களால் இப்போதும் நினைவுகூரப்படுகிறது.

விழிப்புணர்வுடன் சீன மக்கள்

வைபோ ஊடகம் வழியாக ஏற்படுத்தப்பட்ட “slogams can not replace actions” என்ற ஹேஷ் டேக் 1.3 மில்லியன் தடவை சீன மக்களால் பார்க்கப்பட்டுள்ளது. கார்பன் டை ஆக்சைடு உமிழ்விற்கு முக்கியக்காரணம் எது என்பதை உணர்ந்து சீனா அதை சமாளிக்க நடவடிக்கை கள் எடுத்து வருகிறது என்று ஜின் ஹுவா செய்தி நிறுவனம் கூறியுள்ளது. காலநிலை மாற்றத்தின் தீவிரத்தை சீன மக்கள் நன்கு உணர்ந்திருப்பதாக சமீபத்தில் மேற்கொள்ளப் பட்ட ஆய்வுகள் கூறுகின்றன. சீன ஊடகங்களில் கிளாஸ்கோ மாநாடு நிகழ்ந்துகொண்டிருந்தபோது வெளியிடப்பட்ட “COP26” மற்றும் COP26 ongoing” என்ற ஹேஷ் டேக்குகள் 120 மில்லியன் சீன மக்களால் பார்வையிடப்பட்டுள்ளது. கார்பன் உமிழ்வைக் குறைக்க எடுக்கப்படும் எந்த நடவடிக்கையும் மக்களின் முழுமையான ஆதரவைப் பெற வேண்டும். இதற்கு சீன மக்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்கத் தயங்க மாட்டார்கள் என்று சீனாவின் பசுமை அமைதி (Green peace) இயக்கத்தின் பெய்ஜிங் ஆலோசகர் லிசௌ (Li Shuo) நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

  • சிதம்பரம் இரவிச்சந்திரன்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button