தமிழகம்

போர் ஓய்ந்தது…யுத்தம் ஓயவில்லை…

திருவாரூர், டிச.30- தில்லியில் ஓராண்டுகாலம் நடைபெற்ற விவசாயிகளின் போராட்டம் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் திருவாரூரில் புதனன்று (டிசம்பர் 29) 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயி கள் பங்கேற்ற பேரணியில் கலந்து கொண்டு பேசிய விவசாயிகள் சங்க அகில இந்திய தலைவர் அசோக் தாவ்லே மோடி அரசுக்கு எதிரான நமது போர் (battle) தற்காலிகமாக ஓய்ந்துள்ளது. ஆனால் யுத்தம் (war) ஓயவில்லை என்று முழங்கினார். ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் சார்பில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்று அவர் மேலும் பேசியதாவது: ஒன்றிய அரசு தேசத்தையே விற்க முனைகிறது. அனைத்து பொதுத் துறை களையும் தனியாருக்கு தாரைவார்க்கிறது. நமது முன்னோர்கள் சுதந்திரத்துக்காக போராடி னார்கள். நாம் கார்ப்பரேட் சூத்திரதாரிகளுக்கு எதிராக இன்னும் போராட வேண்டியிருக்கிறது. இந்தப் போர் ஓய்ந்துவிட்டது. ஆனாலும் யுத்தம் இன்னும் முடிந்தபாடில்லை. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் கூடி தொடர்ச்சியாக 380 நாட்கள் தில்லி எல்லை யில் நடத்திக் காட்டியுள்ள இந்த போராட்டம் கடந்த 75 ஆண்டுகால சுதந்திர வரலாற்றில் இந்தியா முன்னெப்போதும் கண்டிராத போராட்டமாக, இந்த உலகம் இதுவரை காணாத போராட்டமாக இருக்கிறது.

கடுமையான பனியையும் வாட்டுகிற வெயிலையும் மழையையும் துணிவோடு எதிர்கொண்ட போராட்டம் இது. 500க்கும் மேற்பட்ட அமைப்புகள் சம்யுக்தா கிசான் மோர்ச்சா என்ற பதாகையின் கீழ் ஒன்றிணைந்து நடத்திய போராட்டத்தால் நரேந்திர மோடி அரசை மண்டியிட வைத்திருக்கிறோம். இது இந்திய விவசாயிகளுடைய ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றியாகும்.

பாஜக-ஆர்எஸ்எஸ்

பாஜக-ஆர்எஸ்எஸ் பரிவாரங்களின் ஹரியானா, உத்தரப்பிரதேச அரசுகளின் கண்ணீர் புகை, தடுப்புகள், கைது, தடியடி என அனைத்துவிதமான கடுமையான அடக்குமுறைகளையும் எதிர்கொண்டுள்ளோம். ஒன்றிய உள்துறை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா போராடிய விவசாயிகள் மீது காரை ஏற்றியதில் நான்கு விவசாயிகளும் ஒரு பத்திரிகையாளரும் கொல்லப்பட்ட போதும் துணிவோடும் தைரியத்தோடும் விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுத்தனர். ஒன்றிய பாஜக அரசாங்கம் இப்போராட்ட த்தை சீர்குலைக்கும் பிரச்சாரத்தை கட்ட விழ்த்து விட்டது. போராடிய விவசாயிகளை காலிஸ்தானி, நக்ஸலைட், மாவோயிஸ்ட், தேசவிரோதி எனவும் பாகிஸ்தான் மற்றும் சீனாவின் கைக்கூலிகள் என்றும் விமர்சித்ததை விவசாயிகள் கேட்க நேர்ந்தது. கொரோனா தொற்றுக்கு நடுவே போராட விவசாயிகளுக்குத் துணிவிருக்காது என கருதி ஜனநாயகப் படு கொலையை அரங்கேற்றியது ஒன்றிய அரசு. ஆனாலும் இரண்டாவது அலை பரவிய போதும் போராடுவோம் வெற்றிபெறுவோம் என விவசாயிகள் எதிர்கொண்டதில் கொரோனா கூட விவசாயிகளை வீழ்த்த முடியாமல் போனது. அமைதியான வழியில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் நாடு முழுவதுமுள்ள மாநிலங் களிலிருந்தும் விவசாயிகள் வீதியில் இறங்கினர்.

மதச்சார்பின்மை

பஞ்சாப் மண்ணின் வீரமிக்க சீக்கிய சகோதரர்களோடு எல்லா மதங்களைச் சேர்ந்த வர்களும் மதச்சார்பின்றி இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர். எல்லா மதத்தை சேர்ந்த வர்களும் எல்லா சாதியினரும் எல்லா மொழி பேசு கிறவர்களும் இணைந்து நடத்திய இப்போராட்ட த்தில் நாம் மோடி, அமித்ஷா, அம்பானி, அதானி என நான்கு முக்கிய எதிரிகளை வீழ்த்தி யுள்ளோம். இதன்மூலம் பாஜக, ஆர்எஸ்எஸ் மற்றும் உள்நாட்டு வெளிநாட்டு கார்ப்பரேட்டுகளையும் வெற்றி பெற்றுள்ளோம். உலகில் எங்கேயும் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட சட்டம் நாடாளுமன்றத்திலேயே திரும்பப் பெற்றதாக வரலாறில்லை. கின்னஸ் சாதனை படைத்திருக்கிற போராட்டம் இது. இந்தச் சட்டங்கள் அமலுக்கு வந்தால் குறைந்தபட்ச ஆதார விலை இல்லாமல் போயி ருக்கும். அரசு விவசாய உற்பத்திப் பொருட் களை கொள்முதல் செய்யாது. அரசின் உணவு சேமிப்பு கிடங்குகள் செயல்படாது. இதனால் பொது விநியோகத் திட்டம் முற்றிலும் பாதிக்கப்பட்டு நியாய விலைக் கடை களை நம்பியிருக்கும் 81 கோடி பயனாளிகள் பாதிக்கப்படுவார்கள். ஒட்டுமொத்த வேளாண் சந்தையும் உள்நாட்டு, வெளிநாட்டு முதலாளி களுக்கு தாரைவார்க்கப்பட்டிருக்கும்.

நோம் சாம்ஸ்கி

அமெரிக்காவைச் சேர்ந்த 92 வயதான இடதுசாரி அறிவுஜீவியான நோம் சாம்ஸ்கி இந்தப் போராட்டத்தினை ‘‘உலகத்துக்கே கலங்கரை வெளிச்சம் போன்றது. உத்வேகம் அளிக்கக் கூடியது’’ என கூறினார். 1991க்கும் பிறகு நமது நாட்டில் அமலான புதிய தாராளமய கொள்கைகளால் 4 லட்சத்து க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். லட்சக்கணக்கான விவசாயிகள் தங்கள் நிலங்களை விற்றுவிட்டு விவசாயக் கூலிகளாக மாறியிருக்கிறார்கள். தலித், பழங்குடியின மக்களிடையே ஊட்டச்சத்து பற்றாக்குறை நிலவுகிறது. இவற்றையெல்லாம் கணக்கிலெடுத்து 2006 ஆம் ஆண்டில் எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்து ரைத்த வேளாண் விளைபொருளுக்கு உற்பத்தி செலவில் ஒன்றரை மடங்கு விலை கொடுப்பது என்பதை இதுவரை வந்த எந்த அரசும் நிறை வேற்றவில்லை. நெல்லுக்கு ஆதார விலையாக குவிண்டா லுக்கு 1940 ரூபாய் ஒன்றிய அரசு நிர்ண யித்துள்ளது. தமிழக அரசு 2015 ரூபாய் கொடு க்கிறது. இந்தியாவிலேயே இடது ஜனநாயக முன்னணி ஆளும் கேரளாவில் தான் குவிண்டா லுக்கு 2850 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்தோடு 16 வகையான காய்கறிகளுக்கும் ஆதார விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடுமையான உரத்தட்டுப்பாடு நிலவுகிறது. கள்ளச்சந்தையில் விதை, உரம் விற்பனையாகும் நிலை இங்குள்ளது. டீசல், பெட்ரோல், சமையல் எண்ணெய் விலை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே இருப்ப தால் சரக்குக் கட்டணம் உயர்கிறது. கார்ப்ப ரேட்டின் கைகளில் விதை, உரம் சிக்கியுள்ளது. எனவே விவசாயத் தொழிலாளர்களுக்கு 200 நாள் வேலை, 600 ரூபாய் தினக்கூலி என்பது அவசியமாகிறது என்றார்.

அதுல்குமார் அஞ்சன்

பேரணியில் பங்கேற்று பேசிய அகில இந்திய விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் அதுல்குமார் அஞ்சன், நாம் இந்தப் போராட்டத்தின் மூலம் மோடி அரசை மன்னிப்புக் கோர வைத்துள்ளோம். இந்தப் போராட்டங்களின் மூலம் மோடி அரசின் வேளாண் விரோத கருப்புச் சட்டங்களை திரும்பப் பெற வைத்துள்ளோம். இதன் மூலம் நாக்பூர் ஆர்எஸ்எஸ் கும்பலுக்கு நாம் சொல்ல விரும்புவதெல்லாம் விவசாயி களை வஞ்சிக்க நினைத்தால் இந்திய விவசாயி கள் அதனை ஒற்றுமையோடு எதிர்கொள்வோம். நமது நாட்டில் ராபி, காரிஃப் பருவ சாகுபடி விகிதம் ஆண்டுக்கு 22 சதவீதம் அதிகரித்து வருகிறது.

அதேநேரத்தில் உரம், விதை பூச்சிக் கொல்லி விலையும் உயருகிறது. ஆனால் குறைந்தபட்ச ஆதார விலை மட்டும் உயர்வதே இல்லை. நாம் வேளாண் விளைபொருளுக்கு ஆதாரவிலை யும், வேளாண் உற்பத்திப் பொருட்கள் அனைத்துக்கும் வரிவிலக்கு கேட்கிறோம். ஏனைய உற்பத்தி பொருட்களுக்கு உற்பத்தியாளர்களே விலை நிர்ணயிப்பது போல விவசாயிகளும் விலை தீர்மானிக்க முடிந்தால் நமது விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளமாட்டார்கள். விவசாயிகளை காப்பதன் மூலம் தான் சமூகத்தை பாதுகாக்க முடியும் அதற்காக நாம் தொடர்ந்து போராட வேண்டும் என்று உரையாற்றினார்.

பேரணி-பொதுக்கூட்டம்

சிபிஎம், சிபிஐ இடதுசாரி விவசாய இயக்கங்கள், விவசாயிகள் விடுதலை முன்னணி, விவசாயிகள் தொழிலாளர்கள் சங்கம், காவிரி டெல்டா பாசனதாரர் சங்கங்களின் கூட்டமைப்பு, தற்காப்பு விவசாயி களின் சங்கம், தமிழ்நாடு தென்னை விவசாயி கள் சங்கம், தாளாண்மை உழவர் இயக்கம், தென்னிந்திய கரும்பு விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட அமைப்புகளை உள்ளடக்கிய ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் சார்பில் நடைபெற்ற வெற்றி விழா பேரணி பொதுக்கூட்டத்திற்கு கி.வே.பொன்னையன் தலைமையேற்றார். வரவேற்புக்குழு செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி வரவேற்றுப் பேசினார். போராட்டக் களத்தில் பங்கேற்று சிறைசென்ற விவசாயி கள் சங்க மாவட்டத்தலைவர் எஸ்.தம்புசாமி காவல்துறை அடக்குமுறையை மீறி சேதுபாவா சத்திரத்தில் இருந்து தஞ்சாவூர் வரை பல கிலோ மீட்டர் வரை டிராக்டர் ஓட்டி வந்து போராட்டத்தில் பங்கேற்ற பெண் விவசாயி எஸ்தர்மேரி, ஆர். பாரதி, கே.கலைவேந்தன் அரிபிரசாத், டி.ஞான ராஜ், டி.துரைராஜ் ஆகியோருக்கும் அகில இந்திய தலைவர்கள் பாராட்டி சிறப்புச் செய்தனர்.

பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு விவசாய சங்க பொதுச் செயலாளர் பெ.சண்முகம், மாநில தலைவர் எஸ்.குணசேகரன், விவசாய தொழி லாளர் சங்க பொதுச்செயலாளர் வி.அமிர்த லிங்கம், பல்வேறு விவசாய சங்க தலை வர்கள் கே.வி.இளங்கீரன், ஏ.ரெங்கசாமி, சந்திர மோகன், பி.எஸ்.காளிராஜ், பொன்னுத்தாய், காளியப்பன், மேரிலில்லிபாய் உள்ளிட்டோர் உரையாற்றினர். வரவேற்புக்குழு பொருளாளர் எஸ்.தம்புசாமி நன்றி கூறினார். முன்னதாக திருவாரூர் புதிய ரயில் நிலையம் அருகில் இருந்து விவசாயிகளின் எழுச்சிமிகு பேரணி புறப்பட்டது. வரவேற்புக் குழு தலைவர் மு.சேரன் தியாகச் சுடரை பெற்றுக் கொண்டார். ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் சார்பில் வெற்றிவிழா பேரணி மற்றும் பொதுக் கூட்டத்திற்கு வரவேற்புக்குழு நிர்வாகிகள் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர். பேரணி காரணமாக காவல்துறையினரும் பாது காப்பு ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆண், பெண் விவசாயிகள் குடும்பம் குடும்ப மாக உணர்வுப்பூர்வமாக கலந்து கொண்டனர். கடும் பனிப்பொழிவையும் பொருட்படுத்தாமல் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மொழிபெயர்ப்பு, செய்தி மற்றும் படங்கள்:
எஸ்.நவமணி, வரத.வசந்தராஜன்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button