தமிழகம்

கிராம நிர்வாக அலுவலகங்களை முற்றுகையிட கட்டிடத் தொழிலாளர் சங்கம் முடிவு.

செய்திக்குறிப்பு: A. P. மணிபாரதி

கோவை: மார்ச் 8ம் தேதி உலக மகளிர் தினத்தன்று, கிராம நிர்வாக அலுவலகங்களை நோக்கி கட்டுமான தொழிலாளர்கள் ஊர்வலமாக சென்று, முதல்வருக்கு கோரிக்கை முறையீட்டு மனு கொடுப்பது என்று தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி. கட்டிட தொழிலாளர் சங்கத்தின் கோவை மாவட்ட பேரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி. கட்டிட தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட பேரவை கூட்டம் கோவை ஜீவா இல்லத்தில் 13.02.2023 காலை 11 மணிக்கு, சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் ஆர்.பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. அதில் பின்வரும் தீர்மானங்கள் ஏகமானதாக நிறைவேற்றப்பட்டன.

  1. கட்டிட தொழிலாளர் நல வாரியம் துவக்கப்பட்ட போது, நலவாரியம் துவக்குவதற்கான நோக்கங்களில் முதன்மையாக குறிப்பிடப்பட்டுள்ள இ.எஸ்.ஐ., பி.எஃப். திட்டங்களை உடனடியாக அமல்படுத்தி, கட்டுமான தொழிலாளர்களுக்கு மருத்துவ வசதி உள்ளிட்ட பாதுகாப்புகளை வழங்க வேண்டும்.
  2. பெண் தொழிலாளர்களின் ஓய்வூதிய வயதை 50 என்று குறைக்க வேண்டும்.
  3. கட்டுமான தொழிலில் பணியாற்றும் பதிவு பெற்ற கட்டுமான பெண் தொழிலாளர்களுக்கு மகப்பேறு கால பலன்கள் சட்டப்படி ஆறு மாத காலம் சம்பளத்துடன் பிரசவ உதவி விடுப்பு வழங்க வேண்டும்.
  4. மாதம் 6 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
  5. நலவாரியத்தின் நோக்கங்கள் சிதைக்கப்படும் வகையில் செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து, நலவாரியத்தை பாதுகாக்க வேண்டும்.

என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் உள்ளடங்கிய முறையீட்டு மனுவினை கிராம நிர்வாக அலுவலர் மூலமாக தமிழக முதல்வருக்கு அனுப்பி வைப்பது. என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இந்த பேரவை கூட்டத்தில் தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி. கட்டிட தொழிலாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் என்.செல்வராஜ், மாநில துணைப் பொதுச் செயலாளர் எம்.முனுசாமி, மாநில பொருளாளர் இரா. முருகன், மாநில செயலாளர் சி.நந்தினி, மாவட்ட பொதுச் செயலாளர் எல்.செல்வம், மாவட்ட துணை பொது செயலாளர் கோட்டை நாராயணன், பொருளாளர் சோமசுந்தரம், செயலாளர்கள் ஏ.டி.கே. தனபாண்டியன், பணப்பட்டி மருதாசலம், துணைத் தலைவர்கள் ஜே.கலா, ராணி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button