தமிழகம்

துப்பாக்கி சூட்டில் தமிழக மீனவர் பலி: கர்நாடக வனத்துறைக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்தி அறிக்கை பின்வருமாறு:

பாலாறும், காவிரியும் கலக்கும் இடத்தில் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். வழக்கம் போல மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில் கோவிந்தப்பாடியை சேர்ந்த மீனவர் ராஜா கொல்லப்பட்டிருக்கிறார். துப்பாக்கி சூட்டில் மரணமடைந்த ராஜாவின் சடலம் பாலாறு பகுதியில் மீட்கப்பட்டுள்ளது.

கர்நாடக வனத்துறை தமிழ்நாட்டில் இருந்து வேலைக்கு செல்லும் கூலித் தொழிலாளர்கள் மீது இரக்கமற்று, தொடர்ந்து துப்பாக்கி சூடு நடத்தி வருகிறது. கர்நாடக வனத்துறையின் செயலை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

மரணமடைந்த மீனவர் ராஜா குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக தக்க விசாரணை மேற்கொள்ளவும், மீனவர் ராஜா குடும்பத்தின் மறுவாழ்வுக்கு இழப்பீடு வழங்கவும் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button