உலக செய்திகள்

கியூபா மீதான வெறுப்பைத் தூக்கி எறியுங்கள்

1974 ஆம் ஆண்டு முதல் வெர்மான்ட் மாகாணத்திலிருந்து செனட் அவைக்குத் தொடர்ந்து எட்டு முறை ஜனநாயகக் கட்சி சார்பில் தேர்வு செய்யப்பட்டவர் பேட்ரிக் லீஹி என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

வாஷிங்டன், டிச. 9- இதுவரையில் கியூபா மீது கடைப்பிடிக்கப்பட்ட வெறுப்பு உமிழும் கொள்கையைக் தூக்கி எறி யுங்கள் என்று அமெரிக்க நாடாளு மன்ற உறுப்பினர்களாக பேட்ரிக் லீஹி மற்றும் ரான் வைடன் ஆகிய இருவரும் வலியுறுத்தியுள்ளனர். கியூபப் புரட்சி நடைபெற்ற திலிருந்து அங்கு அமைக்கப் பட்டுள்ள சோசலிச அரசைக் கவிழ்க்க அமெரிக்க அரசு முயற்சி த்து வருகிறது. அதோடு, ஏராளமான தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. தடை யை மீறி கியூபாவுடன் உறவு வைத்துக் கொள்ள முயலும் நாடுகளையும் அமெரிக்க தண்டிக்கிறது. தடைக ளுக்கு எதிராகத் தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டும் தனது செயல் பாடுகளை அமெரிக்கா நிறுத்திக் கொள்ளவில்லை. அமெரிக்க மக்கள் மத்தியிலும் அரசின் கொள்கைகளுக்கு எதிரான கருத்து நிலவி வருகிறது.

இந்நிலை யில்தான் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஜனநாயகக் கட்சி யின் தலைவர்களுமான பேட்ரிக் லீஹி மற்றும் ரான் வைடன் ஆகிய இரு வரும் கியூப எதிர்ப்புக் கொள்கை க்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு கோரி யிருக்கிறார்கள். செய்தியாளர்க ளைச் சந்தித்து தங்கள் கருத்துக்க ளை வெளிப்படையாகவே முன் வைத்துள்ளனர். அப்போது பேசிய பேட்ரிக் லீஹி, “கடந்த 50 ஆண்டுகளாகவே அமெ ரிக்க-கியூப உறவைக் கவனித்து வருகிறேன். இரு நாடுகளுக்கும் இடையிலான நிலைமை குழப்பமா கவும், துயரம் நிறைந்ததாகவும், எரிச்ச லூட்டுவதாகவும் அமைந்திருக்கி றது. தொடர்ந்து விதிக்கப்படும் தடை ளும், மிரட்டல்களும் எதிர்பார்த்த முடிவுகளைத் தரவில்லை. இரு தரப்பு உறவுகள் நல்ல முறையில் இருப்பதையே மக்கள் விரும்புகி றார்கள்.

சிறுபான்மையினர்தான் பைடன் நிர்வாகம் திணித்துள்ள கொள்கையை ஆதரிக்கிறார்கள் “ என்றார். பயங்கரவாத ஆதரவு நாடுகள் பட்டியலில் கியூபாவை அமெரிக்கா வைத்திருக்கிறது. வாஷிங்டனின் இதுபோன்ற நடவடிக்கைகள் முரண்பாடாக இருக்கின்றன என்று சுட்டிக்காட்டும் பேட்ரிக் லீஹி, இத்த கைய அம்சங்கள் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். இது போன்ற தோற்றுப்போன உத்திக ளைக் கைவிட்டு விட்டு, சொந்த நாட்டின் நலன்கள் சார்ந்த பணிகளில் ஜோ பைடன் கவனம் செலுத்தலாம் என்று கூறியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button