உலக செய்திகள்

ஒற்றுமையுடன் பலம் பெறுவோம்!

பெய்ஜிங், பிப்.3- சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் குறித்து அமெரிக்க மேயர்கள் அனுப்பிய கடிதத்திற்கு சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் பதில் எழுதியுள்ளார். அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள டகோமா மற்றும் ஸ்டெய்லாகூம் நகரங்களின் மேயர்கள் ஜி ஜின்பிங்கிற்கு கடிதம் எழுதியிருந்தனர். டகோமா மேயர் விக்டோரியா உட்வேர்ட்ஸ் மற்றும் ஸ்டெய்லாகூம் மேயர் டிக் முரி ஆகிய இருவரும் தனித்தனி யாக இந்தக் கடிதங்களை அவருக்கு அனுப்பியிருந்தனர். அமெரிக் கா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் பற்றி எதிர்மறையான கருத்துக்களைக் கூறிக் கொண்டிருக் கையில் இந்த இரு மேயர்களின் கடிதங்கள் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்கள் எழுதியிருந்த கடிதத்தில் சீன ஜனாதிபதிக்கும், சீன மக்க ளுக்கும் வசந்தகாலத் திருவிழா வாழ்த்துக்களைத் தெரிவித்த அவர்கள், பெய்ஜிங்கில் நடைபெறவிருக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் வெற்றி பெற வேண்டும் என்றும் வாழ்த்துக்களைத் தெரி வித்தனர்.

ஸ்டெய்லாகூம் மேயர் முரி எழுதியிருந்த கடிதத்தில், “பெய்ஜிங் கில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக்ஸ் பற்றி எங்கள் நகர மக்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். சிறப்பான மற்றும் வெற்றிகரமான முறையில் இந்தப் போட்டிகளை நடத்துவார்கள் என்று எங்கள் மக்கள் நம்புகிறார்கள்” என்று குறிப்பிட்டிருந்தார். தனது கடிதத்தில், “கொரோனா பெருந்தொற்று கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஒலிம்பிக்கை நடத்துவதற்கு இந்த உலகில் ஒரு பொறுப்பான நாடு இருப்பது நமக்கு எவ்வளவு அதிர்ஷ்ட வசமான விஷயமாக உள்ளது. இவ்வளவு பெரிய பொறுப்பை செய்து முடிக்கும் அளவுக்கு தன்னை சீனா தகவமைத்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையிலும் ஒரு பாதுகாப்பான, ஆரோக்கியமான மற்றும் வெற்றி கரமான குளிர்கால ஒலிம்பிக்சை சீனாவால் நடத்த முடிகிறது”என்று உட்வேர்ட்ஸ் பாராட்டியிருந்தார். இந்த இருவருக்கும் தனித்தனி யாகப் பதில் கடிதம் எழுதியுள்ள ஜி ஜின்பிங், “சீன மக்கள் மற்றும் சர்வதேச அளவிலான ஆதரவுடன் எளிமையான, பாதுகாப்பான மற்றும்அபார மான குளிர்கால ஒலிம்பிக்சை சீனா நடத்தும். “ஒற்றுமையுடன் வேகமெடுப் போம்; உயரமடைவோம்; பலம் பெறுவோம்” என்பதுதான் இந்த ஒலிம்பிக் சின் குறிக்கோளாகவும் வைத்திருக்கிறோம். உங்கள் நகர மக்களுக்கு எங்கள் வாழ்த்துக்களைச் சொல்லுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button