இந்தியா

ஊரக வேலைத்திட்ட ஒதுக்கீடு 41% குறைப்பு கிராமப்புற ஏழைகளை புறந்தள்ளிய மோசடி பட்ஜெட்

புதுதில்லி, பிப்.2- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை வெட்டிச்சுருக்கியிருப்பதன் மூலம் கிராமப்புற ஏழைகளை ஏமாற்றிய பட்ஜெட்டாக இருக்கிறது என அகில இந்திய விவசாயத் தொழிலாளர் கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சங்கத்தின் அகில இந்தி யத்தலைவர் ஏ.விஜயராகவன், பொதுச்செய லாளர் பி.வெங்கட் வெளியிட்டுள்ள கூட்டறிக்கை வருமாறு: 2022 – 23 ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இதில் சமூகத்தின் ஏழ்மையான பிரிவினருக்கு அளித்துவந்த நிதி ஒதுக்கீட்டை 25.5 சதவீதம் குறைத்துள் ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத்திட்டத்திற்கு 73,000 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது 2020- 21ஆம் ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்ட 1 லட்சம் கோடி யிலிருந்து 41 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

கொரோனா முதல் அலை காலத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியிலும் ஊதியம் வழங்கிட 20 சதவீதம் பற்றாக்குறை ஏற்பட்டது. 2021- 22இல் இது 21,000 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள வேலை அட்டைதாரர்களுக்கு வேலை வழங்கிட குறைந்த பட்சம் ரூ.2.64 லட்சம் கோடி ஒதுக்கியிருக்க வேண்டிய சூழலில், ஏறக்குறைய 2 லட்சம் கோடிகள் குறைத்து பெரும் பற்றாக்குறையுடன் ஊரக வேலைத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. இது கிராமப்புற ஏழைகள் மீது பெரும் தாக்குதலை தொடுக்கும் நடவடிக்கை யாகும். கடந்த அக்டோபர் மாதத்தில் திட்டத்திற் கான நிதியின்மையை காரணம் காட்டி நாடு முழுவதும் பல மாநிலங்களில் வேலை நிறுத்தப் பட்டதையும் – ஊதியம் நிறுத்தப்பட்டதையும் நாடு கண்டது. இது கிராமப்புற வேலை யின்மையை மேலும் பன்மடங்கு உயர்த்தி விடும்.

பட்டினி விகிதம் இரட்டிப்பாகும்

உணவுக்கான மானியத்தை மேலும் 27 சதவீதம் குறைத்து தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால், பட்டினியால் மக்கள் பாதிக்கப்படுவது உறுதியாகியுள்ளது. பட்டினிக்குறியீட்டில் ஏற்கனவே 101வது இடத்தில் இந்தியா இருக்கும் போது, உணவு மானியத்திற்காக 2021- 22ஆம் ஆண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.2,86,269 கோடியி லிருந்து, நடப்பு பட்ஜெட்டில் ரூ.2,06,831 கோடி யாக குறைக்கப்பட்டுள்ளதன் மூலம் கிராமப்புற மக்களின் பட்டினி விகிதம் 2 மடங்காக அதிகரிக்கும் அபாயம் உள்ளது. எனவே உணவு மானிய ஒதுக்கீட்டை இரட்டிப்பாக்கிட வேண்டும். 20 சதவீதம் மக்களின் வருமானம் ஏற்கனவே 53 சதவீதம் குறைந்துள்ள நிலையில் வேலை யின்மையும் பட்டினியும் உற்பத்தியாளர்களை கடுமையாக பாதிக்கும். கிராமப்புற இந்தியாவில் நிலவும் வேலையின்மை மற்றும் வருமானமிழப்பை கண்டுகொள்ளாத நிலையை பட்ஜெட் உருவாக்கியுள்ளது. கல்வி , வேலைவாய்ப்பு, சுகாதாரம் மற்றும் சமூக நலத்திட்டங்களுக்கு ஒதுக்கீட்டை குறைத்து -கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சலுகை காட்டியுள்ளது. ஒன்றிய பாஜக அரசின் பட்ஜெட் ஏற்றத்தாழ்வுகள், வறுமை, வேலையின்மை மற்றும் பசியை அதிகப்படுத்தும் பட்ஜெட்டாக இருக்கிறது. கிராமப்புற மக்களின் துன்ப – துயரங்களை கண்டுகொள்ளாமல் கார்ப்பரேட் விசுவாசிகளுக்காக முன்மொழியப்பட்டுள்ள இந்த பட்ஜெட்டைக் கண்டித்து நாடு முழுவதும் கண்டன இயக்கங்களை நடத்துமாறு அஇவி தொசா-வின் அமைப்புகளை கேட்டுக்கொள் கிறோம் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button