இந்தியா

இந்தியா ராஜ்ஜியமும் இல்லை; மோடி ராஜாவும் இல்லை!

நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி விளாசல்

புதுதில்லி, பிப்.3- 2022-23 நிதியாண்டிற்கான பட் ஜெட் கூட்டத் தொடரையொட்டி, குடி யரசுத் தலைவர் ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மக்களவையில் உரையாற்றி யுள்ளார். அதில் பாஜக அரசின் பல் வேறு நிலைபாடுகளை கடுமையாக விமர்சித்துள்ளார். அந்த உரையில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது: “குடியரசுத் தலைவர் உரையில் பேசப்படாத 3 அடிப்படை விஷயங் கள் இருப்பதாக நான் நினைக்கி றேன். முதலாவதாக, நான் மிக முக்கி யமானதாகக் கருதுவது, ‘இரண்டு இந்தியா’ யோசனை. இங்கு இரண்டு இந்தியாக்கள் உள்ளன. அபரிமித மான செல்வம், அபரிமிதமான அதி காரத்தை வைத்துக்கொண்டு, வேலை தேவையில்லாத, தண்ணீர் இணைப்பு, மின்சாரம் போன்ற எது வும் தேவைப்படாமல் நாட்டின் ஆன் மாவை கட்டுப்படுத்தும் மிகப் பெரிய ‘பணக்காரர்களுக்கென ஓர் இந் தியா’ உள்ளது. மற்றொரு இந்தியா ஏழைகளுக்கானது. இந்த இரு இந்தி யாவிற்கும் இடையேயான இடை வெளி அதிகரித்து வருகிறது. நாட்டின் 40 சதவிகித செல்வம் அதானி போன்ற தேர்ந்தெடுக்கப் பட்ட சில பணக்காரர்களிடம் மட்டுமே குவிந்திருக்கிறது. 84 சதவிகித மக்க ளின் வருமானம் குறைந்து வறுமை யை நோக்கி தள்ளப்பட்டுள்ளனர். இந்தியாவின் டாப் 100 பணக்காரர் களின் சொத்து மதிப்பு, 55 கோடி மக் களை விட அதிகம் என்பதை ‘ஏழை இந்தியா’ வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறது. இந்நாட்டு மக் கள் எப்போதுமே அமைதியாக இருப் பார்கள் என்று நினைத்து விடா தீர்கள்.

‘மேக் இன் இந்தியா’ என கூறிக் கூறியே சிறுதொழில்களை அழித்து விட்டீர்கள். 5 கோடி மக்களை வறுமைக் கோட்டிற்கு கீழே தள்ளி விட்டீர்கள். ‘மேக் இன் இந்தியா’, ‘ஸ்டார்ட் அப் இந்தியா’, ‘டிஜிட்டல் இந்தியா’ என அரசு பல்வேறு திட்டங் களை கூறுகிறது. ஆனால், இந்த திட்டங்களில் எல்லாம் பயன் பெறு வது சில பணக்காரர்களும், அவர் களின் பெரு நிறுவனங்களும் மட் டுமே. சிறு, நடுத்தர நிறுவனங்க ளுக்கு எந்த ‘மேக் இன் இந்தியா’ திட்டமும் ஆதரவு தருவதில்லை. இந் தியாவின் துறைமுகங்கள், விமான நிலையங்கள், சுரங்கங்கள், எரிவாயு விநியோகம், எதுவாக இருந்தாலும் ஒரு சிலருக்கு தாரைவார்க்கப்பட் டுள்ளது. ஒருபக்கம் அதானி என்றால் மறுபக்கம் அம்பானி. தேர்ந்தெடுக் கப்பட்ட சிலருக்கே பணம் அனைத் தும் செல்கிறது. அமைப்புசாரா துறை முற்றிலும் அழிக்கப்பட்டு, அந்த இடத்திலும் பணக்காரர்கள் ஆக்கிர மிக்கின்றனர். மேக் இன் இந்தியா, ஸ்டார்ட்-அப் இந்தியா போன்றவற்றைப் பற்றி நீங்கள் பேசிக் கொண்டே இருக்கும் போது நாட்டில் வேலையின்மை அதிகரித்து வருகிறது. ஆனால், குடி யரசுத் தலைவர் உரையில் வேலை யில்லா திண்டாட்டம் பற்றி ஒரு வார்த்தை கூட இல்லை. இந்திய இளைஞர்கள் வேலை கேட்கிறார் கள். ஆனால் உங்கள் அரசால் வேலை கொடுக்க முடியவில்லை. 2021-இல் மட்டும் மூன்று கோடி இளைஞர்கள் வேலை இழந்துள்ள னர். 50 ஆண்டுகளில் இல்லாத அள வுக்கு வேலையின்மை அதிகரித்துள் ளது. பணமதிப்பு நீக்கம், தவறான ஜிஎஸ்டி கொள்கை, கொரோனா காலத்தில் எந்த உதவியும் செய்யப் படாதது போன்றவற்றால் இந்திய மக்கள் தொகையின் 84 சதவிகிதம் பேர்களின் வருமானம் குறைந்துள் ளது. 10 ஆண்டுகளில் காங்கிரஸ் அரசு 27 கோடி பேருக்கு வேலை வாய்ப்பை வழங்கியது. ஆனால், 23 கோடி பேரை மீண்டும் நீங்கள் வறுமைக்கு தள்ளிவிட்டீர்கள்.

2017-ஆம் ஆண்டு இஸ்ரேல் சென்ற பிரதமர் மோடி, பெகாசஸ் உளவு மென்பொருளை வாங்கி வந்துள்ளார். இன்று நீதித்துறை, தேர்தல் ஆணையம், பெகாசஸ், இவை அனைத்தும் மாநிலங்களின் குரலை அழிக்கும் கருவிகளாகி விட் டன. பெகாசஸிற்கு அங்கீகாரம் அளிக்கும் பிரதமர், தமிழ்நாட்டு மக் களை தாக்குகிறார், அசாம் மக்களை தாக்குகிறார். இது மிகவும் ஆபத் தான ஒரு விளையாட்டாகும். இந்த நாட்டிற்காக நான் ரத்தம் சிந்தவில்லை என்றாலும், எனது குடும்பம் ரத்தம் சிந்தி இருக்கிறது. எனது கொள்ளுத் தாத்தா 15 ஆண்டு கள் சிறையில் இருந்தார். என் பாட்டி 32 முறை சுடப்பட்டார். என் தந்தை படுகொலை செய்யப்பட்டார். அத னால் நான் என்ன பேசுகிறேன் என்று எனக்குத் தெரியும். நீங்கள் மிகவும் ஆபத்தான ஒன்றைப் பற்றிக் கொண்டு விளையாடுகிறீர்கள். மதத்தால், இனத்தால் மக்களை பிரித்தாளுகிறீர்கள். நாட்டின் இணைப்புகளை, மொழிகளை, இளைஞர்களை பலவீனப்படுத்து கிறீர்கள். ஜம்மு – காஷ்மீர் மற்றும் வெளியுறவுக் கொள்கையில் மிகப் பெரிய சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தி தவறு செய்துள்ளீர்கள்.

நான் உங்களுக்கு அறிவுரை கூறுகிறேன். இதனை நீங்கள் நிறுத்துங்கள், நீங்கள் நிறுத்த வில்லை என்றால், நீங்கள் ஒரு சிக்கலை உருவாக்குவீர்கள், நீங்கள் ஏற்கனவே அந்த சிக்கலை உரு வாக்கத் தொடங்கி விட்டீர்கள். நம்மைச் சுற்றி இலங்கை, பாகிஸ் தான், சீனா, நேபாளம், ஆப்கானிஸ் தான் போன்ற அண்டை நாடுகள் இருந்தாலும் நாம் தனிமைப்படுத் தப்பட்டு உள்ளோம். நடந்து முடிந்த குடியரசு தின விழாவில் வெளிநாட்டு தலைவர்கள் ஒருவர் கூட பங்கேற்க வில்லை. ஏன்? இந்தியாவை எதிரணி யினர் நன்கு புரிந்து கொண்டுள்ள னர். சீனா தெளிவான பார்வை கொண்டுள்ளது. சீனாவையும், பாகிஸ்தானையும் இணையச் செய்து, நீங்கள் மிகப்பெரிய குற்றம் செய் துள்ளீர்கள். இது இந்தியாவிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்.

இந்தியாவுக்கு இரண்டு பார்வை கள் உள்ளன. முதலாவது மாநிலங்க ளின் ஒன்றியம். அதன் அர்த்தம், பரஸ்பர பேச்சுவார்த்தை. தமிழ் நாட்டு சகோதரரிடம் உங்களுக்கு என்ன வேண்டும் என நான் கேட் பேன். இதுதான் வேண்டும் என அவர் கேட்பார். பதிலுக்கு உங்களுக்கு என்ன வேண்டும் என அவர் என்னி டம் கேட்பார். இதுதான் வேண்டும் என நான் கூறுவேன். இதற்குப் பெயர் கூட்டாட்சி. மாநிலங்களைக் கலந்தாலோசிக்காமல், இந்தி யாவை ஓர் அரசு ஆட்சி செய்ய முடி யாது. இந்திய வரலாற்றில் எந்த வொரு பேரரசை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள். பேச்சு வார்த்தை மூலம் மட்டுமே மாநி லங்களை ஆள முடிந்துள்ளது. மொழிகள், கலாச்சாரங்கள் மற்றும் வரலாறுகளை ஒடுக்கிவிட லாம் என நீங்கள் நினைக்கிறீர்கள். 1947-இல் முடிவுக்கு கொண்டு வரப் பட்ட மன்னராட்சி எண்ணத்தை மீண்டும் கொண்டு வந்ததாக நீங்கள் நினைக்கிறீர்கள். மணிப்பூரில் இருந்து வந்த அரசியல் கட்சி தலை வர் ஒருவர் என்னிடம் பேசிக் கொண்டி ருந்தார். அவர் அமித் ஷாவை சந் திக்க அவரது வீட்டிற்கு சென்ற போது, காலணிகளை வெளியே கழற்றி வைக்க சொல்லி இருக்கிறார் கள். ஆனால், வீட்டினுள் அமித் ஷா காலணிகளுடன் இருந்திருக்கி றார். இந்திய மக்களை இப்படி நடத் தக்கூடாது. ஆனால், உங்களுக்கு வரலாறு குறித்த புரிதல் கிடை யாது. நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்ச னைகள் குறித்து உங்களுக்குப் புரி தல் கிடையாது. தமிழகம் ஒவ்வொரு முறையும் உங்களிடம் திரும்பத் திரும்ப வந்து ‘நீட்’ தேர்வு வேண்டாம் என்று கோரிக்கை வைக்கிறது. ஆனால் நீங்களும் முடியாது வெளியே போங்கள் என்று கூறுகிறீர்கள். உங்களுடைய கட்டமைப்பில் அவர் களின் குரலுக்கு மதிப்பு இல்லை. தமிழகத்தின் கோரிக்கைகள் உங் கள் காதுகளுக்கு எட்டவில்லை. மக்களின் கருத்தை அரசர் கேட்கா தது போல உங்கள் அரசு செயல்படு கிறது.

மகாராஷ்டிரா, ஜம்மு-காஷ்மீர், மணிப்பூர் சகோதரர்களைப் போலவே தமிழ்நாட்டைச் சேர்ந்த சகோதரர்களுக்கும் அனைத்து உரி மையும் உண்டு. தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களுக்கும் அதன் கண்ணியம் வரலாறு கலாச்சா ரம் உள்ளது. மாநிலங்களைக் கலந்தாலோசிக்காமல், இந்தியா வை ஓர் அரசு ஆட்சி செய்ய முடியாது. நீங்கள் அரசியலமைப்பைப் படித்திருந்தால், இந்தியாவை மாநிலங்களின் ஒன்றியம் என்று குறிப்பிட்டிருப்பதைக் காண முடி யும். தேசம் என்று நமது அரசியல் அமைப்புச் சட்டத்தில் எங்கு இல்லை. இந்தியா ஒரு ராஜ்ஜியம் கிடை யாது; நீங்கள் ராஜாவும் இல்லை. இதை மறந்துவிடாதீர்கள். இந்த விவகாரத்தில் மொத்த இந்தியாவும் தமிழகத்திடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டு மக்களுக்கு உள்ளுணர்வில் தமிழ்நாடு மற்றும் தமிழ் மொழி குறித்த புரிதல் உள்ளது. அதேசம யம் இந்தியா குறித்த புரிதலும் அவர்களிடம் உள்ளது. பாஜக தனது வாழ்நாளில் ஒரு போதும் தமிழ் நாட்டு மக்களை ஆள முடியாது. நீங்கள் என்ன கனவு கண்டாலும் சரி உங்களால் அதை சாதிக்கவே முடியாது. இவ்வாறு ராகுல் காந்தி பேசி யுள்ளார்.

உரையை முடித்து நாடாளுமன்ற வளாகத்தைவிட்டு வெளியேவரும் போது, தமிழ்நாட்டின் பெயரை அதிகமுறை உச்சரித்தது ஏன்? என செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு ‘நான் ஒரு தமிழன்’ என்றும் ராகுல் காந்தி அதிரடியாக பதில் அளித்துள்ளார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் டிரெண்ட் ஆகியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button