கட்டுரைகள்

  • உக்ரைன் – ரஷ்ய போர் 15வது நாள்

    ரஷ்ய எரிசக்தி அமைச்சர் அலெக்சாண்டர் நோவக் இந்திய பெட்ரோலிய அமைச்சர் ஹர்சிங் தீப் பூரியுடன் பேசினார். இரு தேசங்களும் எரிசக்தி துறையில்…

    Read More »
  • மதநம்பிக்கை உள்ளவர்களை கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்க்கலாமா ? மாமேதை லெனின் கூறியது என்ன?

    மதம் எஸ்.தோதாத்ரி “மதம் மக்களுக்கு கொடுக்கப்பட்ட அபினி”, “அடக்கப்பட்ட மக்களின் பெருமூச்சு”, “யதார்த்தம் பற்றிய வினோதமான பிரதிபலிப்பு” – இவைதான் மதம் பற்றிய…

    Read More »
  • ரஷ்யா-உக்ரைன் மோதல்: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி ராஜாவின் பிரத்யேக கட்டுரை

    போரை நிறுத்திடுக! பேச்சுவார்த்தையைத் தொடங்கிடுக!டி. ராஜா உக்ரைனில் தற்போது நடைபெற்று வரும் இராணுவத் தாக்குதல் உலக அரங்கின் மையப் பகுதியை ஆக்கிரமித்துள்ளது.…

    Read More »
  • பாசிச பா.ஜ.க ஆட்சியில் பெருக்கெடுத்துப் பாயும் கார்ப்பரேட் முறைகேடுகள்

    த லெனின் வேலியே பயிரை மேய்ந்த கதையாக சமீபத்தில் வெளிவந்துள்ள தேசிய பங்குச் சந்தை ஊழலின் நவீன முகமாக மாறியுள்ள  மேனாள்…

    Read More »
  • ஏழைகளுக்கு எதிரான, கார்ப்பரேட் ஆதரவு பட்ஜெட் 2022 – 2023

     டி.ராஜா கார்ப்பரேட் மற்றும் பெருநிறுவனங்களிடம் பா.ஜ.க அரசாங்கம் கொண்டிருக்கும் விசுவாசத்தை மீண்டும் ஒருமுறை அழுத்தந் திருத்தமாகப் பதிவு செய்கிறது ஒன்றிய பா.ஜ.கஅரசாங்கத்தின் 2022 – 23 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை. அடுத்து வரும் 25 ஆண்டுகளுக்கு, புதிய தாராளமய கொள்கைகளே தேசத்தின் பொருளாதாரத்திற்கு அடித்தளமாக இருக்கும் என்றும், பா.ஜ.க அரசாங்கத்தின் பொருளியல் நிலைப்பாட்டையும், அதன் கொள்கை திசைவழியையும் இந்த நிதிநிலை அறிக்கை மீண்டும் நமக்குச் சுட்டிக் காட்டுகிறது. தனியார்துறை வளர்ச்சிக்கு அதிக உத்வேகம் வழங்கப்படுவதும், பொதுத்துறை மற்றும் சமூகநலன் சார்ந்த துறைகள் முற்றாகப் புறக்கணிக்கப்படுவதும் இந்த அரசாங்கம் ஸ்தாபிக்க விரும்பும் பொருளாதார மாதிரியின் சிறப்பு அம்சங்கள் ஆகும். இந்த அரசாங்கம் யாருக்கு சேவை புரிந்திட விழைகிறது என்பதையும், அதன் உள்நோக்கங்களைக் கருத்தில் கொண்டு அணுகும் போது, இந்த நிதிநிலை அறிக்கை முன்னிறுத்தும் அரசியலை நாம் அறிந்து கொள்ள வேண்டியது முக்கியத்துவம் பெறுகிறது. இந்திய வேலைவாய்ப்பு கட்டமைப்பு மிகப்பெரிய அளவிற்கு விவசாயம் மற்றும் அது சார்ந்த இதர தொழில் நடவடிக்கைகளைச் சார்ந்துள்ளது. ஆனால், தற்போது விவசாயத் துறையின் நிலை மோசமடைந்து வருகிறது. கடந்த 2020 -21 ஆம் ஆண்டில் 20.2 சதவிகிதமாக இருந்த விவசாயத் துறையின் மொத்த மதிப்பு சேர்ப்பு (Gross Value Added) 2021 – 22 ஆம் ஆண்டில் 18.8 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. ஊரகப் பொருளாதாரம் இடர்பாடுகளின்றி இயங்கிட, தேசத்தின் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்திட, விவசாயத் துறையில் அரசாங்கம் முதலீடு செய்ய வேண்டியது அவசியமாகிறது. ஆனால், இந்த அடிப்படைப் புரிதலுக்கு எதிரான நிலைப்பாட்டை பா.ஜ.க அரசாங்கம் கொண்டுள்ளது. விவசாயம் மற்றும் அது சார்ந்த நடவடிக்கைகளுக்கான நிதி ஒதுக்கீட்டை பெருமளவில் குறைத்துள்ளது. விவசாயத்துறை நெருக்கடியை எதிர்கொண்டு சமாளிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கடந்த 2021 – 22 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையின் திருத்திய மதிப்பீட்டின்படி 4,74,750.47 கோடி ரூபாயாக இருந்த நிதி ஒதுக்கீடு 3,70,303 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக, நிதி ஒதுக்கீடு சுமார் ஒரு லட்சம் கோடிக்கும் அதிகமாக குறைக்கப்பட்டுள்ளது.…

    Read More »
  • ஈடு இணையில்லா ஒப்பற்ற நாடாளுமன்ற ஆளுமை பேராசிரியர் ஹிரேன் முகர்ஜி

    – அனில் ரஜீம்வாலே ஹிரேன் முகர்ஜி புரட்சிகர அறிவாற்றலின் ஒட்டுமொத்த உருவகம். அவர் மிகப் பெரும் சொற்பொழிவாளர், நாடாளுமன்றத்தில் அவருடைய பங்களிப்புகள்…

    Read More »
  • “கம்யூனிஸ்ட் என்பது என் அடையாளம்.” வீரவணக்கம் தோழர் எஸ். துரைராஜ்!

    சி.மகேந்திரன் மரணத்தை, இவ்வாறு எதிர்கொண்டவர்கள் ஒரு சிலரே!  தனது மரணம் எப்பொழுது நிகழப் போகிறது என்பதை மிக நன்றாகவே அவர் அறிந்திருந்தார்.…

    Read More »
  • இந்தியக் குடியரசின் அடித்தளங்கள் தகர்க்கப்படுகின்றன – கூட்டாட்சி முறையைப் பாதுகாப்போம்

    டி.ராஜா நமது இந்தியத் திருநாட்டை இறையாண்மைமிகு ஜனநாயக குடியரசாகப் பிரகடனப்படுத்தும் அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட 72 ஆம் ஆண்டில் நாம் அடியெடுத்து…

    Read More »
  • ஐ.ஏ.எஸ் பணிகளுக்கான புதிய விதிகள் திருத்தம் – இந்தியக் கூட்டாட்சி முறையைத் தகர்த்தெறியும்

    த.லெனின் சமீபத்தில் ஒன்றிய அரசு கொண்டுவர உள்ள அகில இந்திய பணிகளுக்கான விதிகள் திருத்தம் நமது நாட்டின் நிர்வாகத்துறையை நிர்மூலப்படுத்தும் அடிப்படைகளைக்…

    Read More »
  • மக்களுக்காக நின்று போராடுகிறது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி

    எஸ்.சுதாகர் ரெட்டி 1925 டிசம்பர் 26 கான்பூரில் கூடி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அமைத்தனர். கட்சி நிறுவப்பட்ட தொடக்க நாள் முதலாக…

    Read More »
Back to top button