அறிக்கைகள்

நீதி, சமூக நீதி காக்கும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளுக்கு வரவேற்பு

இரா.முத்தரசன், மாநிலச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

குஜராத்தில் 2002ஆம் ஆண்டு நடந்த மதவெறி தாக்குதலில் பில்கிஸ் பானு, அவரது மூன்று வயது குழந்தை உட்பட 14 பேர் கொடூரப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மத்திய புலனாய்வுத் துறையின் மும்பை நீதிமன்றத்தால் 11 குற்றவாளிகளுக்கு  தண்டனை வழங்கியது.

ஆயுள் தண்டனை கைதி உட்பட  குற்றவாளிகள் அனைவரும் தண்டனை காலம் முடியும் முன்பு, குஜராத் மாநில பாஜக அரசால், 2023 ஆகஸ்ட் 15 அன்று விடுதலை செய்யப்பட்டனர். குஜராத் அரசின் விடுதலை உத்தரவை எதிர்த்து, பில்கிஸ் பானுவும் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் உட்பட மாதர் அமைப்புகளும் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தன.

இந்த முறையீடுகளை விசாரித்த உச்சநீதிமன்றம் இன்று (08.01.2024) குஜராத் மாநில பாஜக அரசின் உத்தரவை ரத்து செய்து, குற்றவாளிகள் சிறைக்கு செல்ல வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது.

இதேபோல் முன்னேறிய சாதியினரில் பின்தங்கிய பிரிவினருக்கு 10 சதவீதம் ஒதுக்கீடு வழங்குவது மாநில அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது என்று தீர்ப்பு வழங்கி, தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் முன்னேறி சமூகத்தின் பின்தங்கிய பிரிவினருக்கு 10 சதவீத ஒதுக்கீடு வழங்காது என்ற எடுத்த கொள்கை முடிவுகளுக்கு செயல் வடிவம் கொடுக்க உச்சநீதிமன்ற தீர்ப்பு வழிவகை செய்துள்ளது.

உச்சநீதிமன்றத்தின் நீதி, சமூக நீதி காக்கும் இரண்டு தீர்ப்புகளையும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது என்று கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button