• விலைவாசி உயர்வை கட்டுபடுத்த வலியுறுத்தி.. • குழந்தைகள் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரி..
மாதர் சம்மேளனம் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்

தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் விலைவாசி உயர்வை கண்டித்தும், தமிழ்நாட்டின் குழந்தைகளின் நலன் மற்றும் பாதுகாப்பை வலியுறுத்தி, இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் சார்பில், மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பத்தூர்: திருப்பத்தூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநிலச் செயலாளர் மு.கண்ணகி, மாநிலத் துணைச் செயலாளர் டி.பி.லலிதா, மாவட்டத் தலைவர் டி.ஜெயலட்சுமி, மாவட்டச் செயலாளர் தீபா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வடசென்னை: தங்கசாலை மணிக்கூண்டு அருகில். மாவட்டச் செயலாளர் த.செண்பகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் ஜி.மஞ்சுளா, மாவட்டத் தலைவர் மோ.ரேணுகா எம்.சி, மாவட்டப் பொருளாளர் த.டானியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மத்தியசென்னை: அம்பத்தூரில் மாவட்டத் தலைவர் மாணிக்கவள்ளி நாச்சியப்பன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலச் செயலாளர் மு.கண்ணகி, தேசிய செயலாளர் டாக்டர் சாந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கொட்டும் மழையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி: கோவில்பட்டி இனாம்மணியாச்சி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, கோவில்பட்டி நகரச் செயலாளர் விஜயலட்சுமி, நகரத் தலைவர் கோமதி ஆகியோர் தலைமை தாங்கினர். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டத் துணைச் செயலாளர் பாபு, நகரச் செயலாளர் செந்தில் ஆறுமுகம், மாவட்டக் குழு உறுப்பினர்கள் ரஞ்சிதம், பொன்மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் மாவட்ட பொறுப்பு செயலாளர் கே.கோமதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ஆர்.தனலட்சுமி, மாவட்டத் துணைச் செயலாளர் ஜெயா டீச்சர், மாவட்ட குழு உறுப்பினர் ஹேமலதா, சிபிஐ புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் செங்கோட்டையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திருவாரூர்: திருவாரூர் ரயில் நிலையம் முன்பு, தலைவர் ஆர் சுலோச்சனா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் கே.சுஜாதா, மாவட்டப் பொருளாளர் ஆர்.உஷா, துணைச் செயலாளர் தமிழ் செல்விராஜா, துணைத் தலைவர் ரிஸ்வானா பர்வீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திருப்பூர் புறநகர்: திருப்பூர் ஒன்றியம் முதலிபாளையம் கிளைச் செயலாளர் கே.சுதா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புறநகர் மாவட்டச் செயலாளர் பி.நதியா, மாவட்டப் பொருளாளர் பி.எஸ்.செல்வி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
மதுரை புறநகர்: திருமங்கலம் தாலுகா கப்பலூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.