விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்து! ஒன்றிய – மாநில அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம்
முதலமைச்சர் விஜய் கூடுதல் கவனம் செலுத்த மு.வீரபாண்டியன் வலியுறுத்தல்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு விடுத்துள்ள அறைகூவலை ஏற்று, அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி, 03.11.2026 அன்று ஒன்றிய – மாநில அரசு அலுவலகங்கள் முன்பு தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் ஆ.சவுரிராஜன் தலைமை தாங்கினார். கண்டன உரையாற்றிய மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், “இதுவரை இல்லாத அளவுக்கு அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்திருக்கிறது. தொடர்ந்து அதிகரித்துக் கொண்டும் இருக்கிறது. எனவே ஒன்றிய – மாநில அரசுகள் போர்க்கால வேகத்தில் நடவடிக்கை எடுத்து விலை உயர்வைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்” என வலியுறுத்தினார். மேலும், “அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்துவதில் முதலமைச்சர் விஜய் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது” என்றும் அவர் கூறினார்.
“ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் அத்தியாவசியப் பொருட்கள், மருந்து, மாத்திரைகள் உள்ளிட்ட 100 பொருட்களின் விலை எந்தச் சூழலிலும் உயரக் கூடாது என்பதற்காக சட்டம் இயற்றுமாறு இடதுசாரிகள் வலியுறுத்தினோம். ஆனால் அன்றைக்கு பிரதமராக இருந்த மன்மோகன்சிங் அதனை நிறைவேற்றாமல் கடந்து சென்றுவிட்டார். இப்போது அதற்கான சட்டத்தை ஒன்றிய அரசு இயற்ற வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுக்குள் கொண்டுவர ஒன்றிய அரசும் மாநில அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவே ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம்” என்று மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் பேசினார்.
வடசென்னை: வடசென்னை மாவட்டம் தங்கசாலை மணிக்கூண்டு அருகில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் த.கு.வெங்கடேஷ் வேம்புலி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் மாநிலத் துணைச் செயலாளர் நா.பெரியசாமி முன்னாள் எம்.எல்.ஏ, முன்னாள் மாவட்டச் செயலாளர் எம்.எஸ்.மூர்த்தி ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.

மத்தியச் சென்னை: மத்தியச் சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாநிலத் துணைச் செயலாளர் எம்.ரவி, மாவட்டச் செயலாளர் மு.வரதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தென் சென்னை: தென் சென்னை மாவட்டம் மயிலாப்பூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தேசியக் குழு உறுப்பினர் வகிதா நிஜாம், மாவட்டச் செயலாளர் எஸ்.கே.சிவா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விருதுநகர்: பழைய பேருந்து நிலையம் அருகில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.செந்தில்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் டி.ராமசாமி, மாநில நிர்வாக குழு உறுப்பினர் பி.லிங்கம், மாநிலக் குழு உறுப்பினர் வி.பாலமுருகன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.

நாகை: கட்சியின் மாவட்டச் செயலாளர் சிவகுரு பாண்டியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாகை நாடாளுமன்ற உறுப்பினர் வை.செல்வராஜ் கண்டன உரை நிகழ்த்தினார்.

தஞ்சை: திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் க.மாரிமுத்து தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் கோ.சக்திவேல், மாவட்டத் துணைச் செயலாளர் ஆர்.ராமச்சந்திரன் மாவட்டப் பொருளாளர் பாஸ்கர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கோவை: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கட்சியின் மாநிலப் பொருளாளர் எம்.ஆறுமுகம் முன்னாள் எம்.எல்.ஏ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் மாவட்டச் செயலாளர் சி.சிவசாமி, மாவட்டத் துணைச் செயலாளர் சி.தங்கவேல் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

சேலம்: ஸ்டேட் வங்கி அருகில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் என்.கே.செல்வராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில நிர்வாகக் குழு உறுப்பினர்கள் அ.மோகன், க.பாரதி, மாவட்டத் துணைச் செயலாளர்கள் எம்.ராமன், பழ.ஜீவானந்தம் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

மதுரை மாநகர்: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகரச் செயலாளர் கே.கே.சாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட நிர்வாகிகள் வீரணசிங்கம், சி.தாமஸ், பாலமுருகன், பா.ராஜலெட்சுமி, எம்.எஸ்.முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.

நெல்லை: களக்காட்டில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் களக்காடு ஒன்றியச் செயலாளர் மு.லெனின் முருகானந்தம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நாங்குநேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.வி.கிருஷ்ணன், விவசாய சங்க முன்னாள் மாவட்டத் தலைவர் பி.பெரும்படையார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நாமக்கல்: பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.அன்புமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கரூர்: தலைமை தபால் நிலையம் முன்பு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கலாராணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை: தலைமை அஞ்சலகம் அருகில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் அ.சீனிவாசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி: அம்பேத்கர் சிலை அருகே, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ராமசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு கரும்பு உற்பத்தியாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.வி.சரவணன், கட்சியின் மாவட்டத் துணைச் செயலாளர் சுப்பிரமணியன் உள்ளிட்ட ஏராளாமானோர் பங்கேற்றனர்.

இராமநாதபுரம்: பரமக்குடியில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் என்.எஸ்.பெருமாள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. என்.கே.ராஜன், எஸ்.பி.ராதா, கே.ஜீவா, ஜெயசீலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திருச்சி புறநகர்: மணப்பாறை கோவில்பட்டி சாலை காமராஜ் சிலை அருகே, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் திருநாவுக்கரசு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் துணைச் செயலாளர் த.இந்திரஜித், மாவட்டத் துணைச் செயலாளர் பழனிச்சாமி ஆகியோர் கண்டன உரையாற்றினார்.

தேனி: ஆன்டிப்பட்டி இந்தியன் வங்கி முன்பு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் பா.பிச்சைமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் வே.பரமேஸ்வரன் கண்டன உரையாற்றினார்கள்.

அரியலூர்: அண்ணாசிலை அருகில், கட்சியின் அரியலூர் ஒன்றியச் செயலாளர் து.பாண்டியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் மாநில கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் டி. தண்டபாணி சிறப்புரையாற்றினார்.

திண்டுக்கல்: பேருந்து நிலையம் அருகில், கட்சியின் மாநகரச் செயலாளர் பி.கிருஷ்ணசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ஏ.பி.மணிகண்டன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் பி.வெள்ளைச்சாமி, எம்.கணேசன், எம்.சந்திரசேகரன், ஏ.கௌசல்யா, எஸ்.ராஜாமணி, ஏ.எம்.மணி ஆகியோர் கண்டன உரை ஆற்றினார்கள்.

குமரி: ஆரல்வாய்மொழியில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் தா.சுபாஷ் சந்திர போஸ் தலைமையில், பறை முழக்கத்துடன், காய்கறி மற்றும் அரிசிக்கு மாலை அணிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் மாவட்டத் துணைச் செயலாளர் எஸ்.அனில்குமார் மற்றும் கே.செல்வராணி, ஆரல் பகவதி, வி.அருள்குமார் ஆகியோர் கண்டன உரை ஆற்றினார்.
