குறைந்தபட்ச ஊதியமாக ரூ.42 ஆயிரம் நிர்ணயிக்க வேண்டும்
கட்டடத் தொழிலாளர் சங்கத்தின் 9வது மாநில மாநாடு தீர்மானம்

தமிழ்நாடு ஏ.ஐ.டி.யூ.சி. கட்டடத் தொழிலாளர் சங்கத்தின் 9 வது மாநில மாநாடு அக்டோபர் 4. 5 தேதிகளில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்றது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
♦ ஒன்றிய பாஜக அரசின் கைப்பாவையாக செயல்படும் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை உடனடியாக பதவியிலிருந்து நீக்க வேண்டும்.
♦ ஒன்றிய அரசின், தொழிலாளர் விரோத நான்கு தொகுப்பு சட்டங்களை ரத்து செய்ய வேண்டும்
♦ தமிழ்நாடு அரசு, கேரள மாநிலத்தில் அறிவிக்கப்பட்டதைப் போல, ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத நான்கு தொகுப்பு சட்டங்களை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்த மாட்டோம் என அறிவிக்க வேண்டும்
♦ கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தின் நோக்கங்களை முழுமையாக அமலாக்க வேண்டும். குறிப்பாக பிஎஃப், ஈஎஸ்ஐ திட்டங்களை செயல்படுத்த வேண்டும். வேலையில்லா காலங்களில் நிவாரணம் வழங்க வேண்டும்.
♦ தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தை தன்னாட்சி அதிகாரம் கொண்ட முத்தரப்பு அமைப்பாக மாற்றியமைக்க வேண்டும்.
♦ கட்டட, கட்டுமானங்களின் மதிப்பீட்டில் 1% என வசூலிக்கப்படும் நலவரியை 5% ஆக உயர்த்தி வசூலிக்க வேண்டும்
♦ கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் வழங்கப்படும் நலத் திட்ட உதவிகளை பின்வருமாறு உயர்த்தி வழங்க வேண்டும்
♦ பணியிட விபத்து மரண இழப்பீட்டை ரூ.20 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும்
♦ விபத்து மரண இழப்பீட்டை ரூ 10 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும்
♦ இயற்கை மரண உதவித் தொகையை ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும்
♦ ஈமச் சடங்கு உதவித் தொகையை ரூ.25 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்
♦ திருமண உதவித் தொகையை ரூ.1,00,000/- ஆக உயர்த்தி வழங்க வேண்டும்
♦ மகப்பேறு உதவித் தொகையை ரு.1,50,000/- ஆக உயர்த்தி வழங்க வேண்டும்
♦ ஓய்வூதியத்தை மாதம் ரூ.6000/- ஆக உயர்த்தி வழங்க வேண்டும்
♦ சொந்த வீடில்லாத கட்டட, கட்டுமானத் தொழிலாளர்களுக்கு சொந்த இடத்தில் வீடு கட்ட/அரசு திட்டத்தில் வீடு வாங்க வழங்கப்படும் உதவித் தொகையை ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும்
♦ கட்டுமானத் தொழிலாளர் களின் குழந்தைகளுக்கு 5 முதல் 9 வகுப்பு வரை படிக்க வழங்கப்படும் கல்வி உதவித் தொகையை ரூ.5,000/- ஆக உயர்த்தி வழங்க வேண்டும்
♦ 10, 11, 12 ஆம் வகுப்பு படிக்க, தேர்ச்சி பெற்றால் ஆண், பெண் குழந்தைகள் என பாகுபாடின்றி ரூ.10,000/- வீதம் கல்வி உதவித் தொகை வழங்க வேண்டும்
♦ இளங்கலை, முதுகலை, தொழில் கல்வி போன்ற உயர் கல்வி பயில கல்விச் செலவு முழுவதையும் வழங்க வேண்டும்
♦ விபத்து சிகிச்சையும், சிகிச்சை கால நிவாரணமும் வழங்க வேண்டும்
♦ அனைத்து கட்டட, கட்டுமானத் தொழிலாளர்களுக்கும் மாதம் ரூ.42,000/- க்கு குறையாமல், குறைந்தபட்ச ஊதியமாக நிர்ணயம் செய்து அமலாக்க வேண்டும்.
♦ புதுச்சேரி மாநிலத்தில் வழங்கப்படுவதைப் போல, தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரிய உறுப்பினர்கள் அனைவருக்கும் தீபாவளி பண்டிகை கொண்டாட, ரூ.5000/- போனஸாக வழங்க வேண்டும்.
♦ கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும்
♦ தமிழ்நாட்டிலுள்ள மாவட்ட நலவாரிய அலுவலகங்களில் பணியாற்றிவரும் தினக்கூலி பணியாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்
என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.