இந்தியா

ஹிந்து தேசியவாதத்தால் மனித உரிமைக்கு ஆபத்து!

புதுதில்லி, ஜன. 28 – இந்தியாவில் அதிகரித்து வரும் ஹிந்து தேசிய வாத போக்குகளால், பாகுபாடு மற்றும் வன்முறைக் கலாச்சாரம் வேரூன்றும் சூழல் ஏற்பட்டிருப்பதாக அமெரிக்க நாடாளுமன்ற செனட் உறுப்பினர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்திய – அமெரிக்க முஸ்லிம் கவுன்சில் சார்பில் புதன்கிழமையன்று காணொலி வாயிலாக கருத்தரங்கம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்திய குடியரசு முன்னாள் துணைத்தலைவர் டாக்டர் ஹமீது அன்சாரி உள்ளிட்டோர் கலந்துகொண்ட இந்தக் கருத்தரங்கில், மதச் சுதந்திரம், பன்முகத் தன்மை பாரம்பரியத்தை இந்தியா உறுதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. குடியரசு முன்னாள் தலைவர் டாக்டர் ஹமீது அன்சாரி பேசுகையில், நாட்டில் அதிகரித்து வரும் ‘ஹிந்து தேசியவாதம்’ என்ற போக்கு குறித்து கவலை தெரிவித்துள்ளார்.

‘குடிமக்களை அவா்களின் அடிப்படை நம்பிக்கை யின் அடிப்படையில் வேறுபடுத்தியும், சகிப்புத் தன்மையின்மை மற்றும் பாதுகாப்பில்லாத நிலையை ஏற்படுத்தியும் நடைபெறும் சம்பவங்கள் நாட்டில் அண்மைக்காலமாக அதிகரித்து வரு கின்றன. குறிப்பாக, பல ஆண்டுகளாக கடைப் பிடிக்கப்பட்டு வரும் பொது தேசியவாத தத்து வத்தை சீா்குலைக்கும் வகையில், புதிய கற்பனை யான கலாச்சார தேசியவாத நடைமுறைகள் நாட்டில் அதிகரித்து வருகின்றன’ என்று அவர் குறிப் பிட்டுள்ளார். அமெரிக்க நாடாளுமன்றசெனட் உறுப்பினரும் ஜனநாயக கட்சியைச்சோ்ந்தவரு மான எட் மார்க்கி பேசுகையில், “சிறுபான்மை யினரின் நம்பிக்கை அடிப்படையிலான நடை முறைகளை இந்திய அரசு தொடா்ந்து தாக்கி வருவது,

பாகுபாடு மற்றும் வன்முறை கலாச்சாரம் வேரூன்றும் சூழலை உருவாக்கி விடும்” என்று கவலை தெரி வித்துள்ளார். “கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் இணையவழி வெறுப்புப் பேச்சுக்கள் மற்றும் நட வடிக்கைகள் அதிகரித்து வருவதோடு, வகுப்புவாத வன்முறை, மசூதிகள் சூறையாடப்படுதல், கிறிஸ்தவ தேவாலயங்கள் தீவைத்து எரித்தல் போன்ற அசம்பாவிதங்கள் அதிகரித்து வருவதைக் காண முடிகிறது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். “இந்தியாவில் மதச் சுதந்திர விவகாரத்தில் ஏராள மான பிரச்சனைகள் உள்ளன. பாகுபாடு காட்டப்படு கிறது. எனவே, மதச் சுதந்திரம், பன்முகத் தன்மை, சகிப்புத் தன்மை பாதையில் இந்தியா செல்வதை உறுதிப்படுத்த வேண்டும் என்பதே நமது விருப்பம்” என்று அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ரஸ்கின் கூறியுள்ளார்.

மற்றொரு உறுப்பினரான ஆண்டி லெவின் பேசும்போது, “உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு, வருந்தத்தக்க வகையில், இன்றைக்கு மனித உரிமை கள் மீதான தாக்குதல், மத தேசியவாதம் போன்ற நடவடிக்கைகளால் பின்னோக்கி சரிந்து வருகிறது. உலக ஜனநாயக குறியீட்டில் கடந்த 2014-ஆம் ஆண்டிலிருந்து இந்தியா 27-ஆவது தரவரிசை யிலிருந்து 53-ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள் ளது. அதுபோல ‘பிரீடம் ஹவுஸ்’ அமைப்பு இந்தியா வை சுதந்திரமான நாடு என்ற நிலையிலிருந்து ‘பகுதி சுதந்திரம்’ நிலைக்கு தர நிலையை குறைத்துள் ளது” என்பதை சுட்டிக் காட்டி பேசியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button