இந்தியா

வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த உ.பி. பாஜக அமைச்சரின் மகன்!

புலந்த்சாஹர், ஜன.27- உத்தரப் பிரதேச சட்டப்பேர வைக்கு பிப்ரவரி 10-இல் துவங்கி மார்ச் 7 வரை ஏழு கட்டங்களாக தேர்தல் அறி விக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன. கடந்தமுறை பெற்ற வெற்றி யை, இம்முறை பாஜக பெற முடியாது என்றும், சமாஜ்வாதி கூட்டணி கடும் போட்டியாக இருக்கும் என்றும் கணிப்புகள் வெளியானதால், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் எப்படி யாவது மீண்டும் வெற்றி பெற்று விட வேண்டும் என பகீரத பிர யத்தனம் செய்து வருகின்றனர். இந்நிலையில்தான், உ.பி. பாஜக அமைச்சரின் மகன் வாக் காளர்களுக்கு பணம் கொடுத்து கையும் களவுமாக சிக்கியுள் ளார். உத்தரப் பிரதேச மாநில வனம், சுற்றுச்சூழல், விலங்கி யல் பூங்கா அமைச்சராக இருப் பவர் அனில் சர்மா. இவர், புலந்ந்சாஹர் மாவட்டத்தி லுள்ள ஷிகர்பூர் சட்டப்பேரவை தொகுதியிலேயே மீண்டும் போட்டியிடுகிறார். இந்நிலை யில், அனில் சர்மாவுக்கு ஆதர வாக பிரச்சாரத்தில் ஈடுபட் டுள்ள அவரது மகன் குஷ் சர்மா, வாகனத்தில் சென்றபடியே வாக்காளர்களுக்கு தலா 100 ரூபாய் விகிதம் பணம் கொடுத் துள்ளார். இதுதொடர்பான வீடியோ ஆதாரம் வெளியான நிலை யில், அமைச்சர் அனில் ஷர்மா 24 மணி நேரத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என தேர் தல் அதிகாரி உத்தரவிட்டுள் ளார். ஆனால், “பணம் வாங்கிய வர்கள் வாக்காளர்கள் அல்ல; அவர்கள் அனைவரும் இசைக் கலைஞர்கள். தேர்தல் பிரச்சா ரத்திற்கு டிரம்ஸ் இசைப்பதற் காகவே அவர்களுக்கு பணம் வழங்கப்பட்டது” என்று பாஜக சமாளித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button