தமிழகம்

ரஷ்ய – உக்ரைன் பிரச்சனைகளுக்கு அரசியல் ரீதியான பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காணப்பட வேண்டும் – AIPSO அகில இந்திய மாநாட்டில் தீர்மானம்.

அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டுக் கழகத்தின் அகில இந்திய மாநாடு பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் மார்ச் 4 மற்றும் 5 தேதிகளில் நடைபெற்றது.

“அரசியல் சட்டத்தின் மாண்புகளை காத்தல், உலக சமாதானத்தை பாதுகாத்தல், ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒருமைப்பாட்டை வலுப்படுத்துதல்” என்ற முழக்கங்களோடு இம்மாநாடு நடைபெற்றது.

மாநாட்டிற்கு யாதவ ரெட்டி, சுனிதா சதுர்வேதி, சி.பி.நாராயணா, டாக்டர் சுதாகர் தலைமைக் குழுவாக இருந்து செயல்பட்டனர் .

ஹர்சந்த் சிங் வரவேற்புரையாற்றினார்.

மாநாட்டை ஆர்.எஸ்.சீமா துவக்கி வைத்து உரையாற்றினார்.

உலக சமாதான கவுன்சிலின் தலைவர் பல்லப்சென் குப்தா மாநாட்டின் துவக்க நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றினார்.

உலக சமாதான கவுன்சிலின் நிர்வாகச் செயலாளர் இராக்கிலிஸ் சவ்தரிதிஸ், கியூபா பிரதிநிதி விக்டர், வியட்நாமைச் சேர்ந்த லாயிட், இலங்கையைச் சேர்ந்த புத்திகா, நேபாளத்தைச் சேர்ந்த ரவீந்திர அதிகாரி, வங்கதேசத்தைச் சேர்ந்த முஜிபூர் ஹுசைன் பல்து, ஆஸ்திரேலியாவைச் சேர்த்த ஹத்தேஷ் கல்பேஷ் , அமெரிக்காவைச் சேர்ந்த டாக்டர் ஹாவெந்தர் காங் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

பாலஸ்தீன பிரதிநிதி அக்கியுயல் காணொளி வாயிலாக வாழ்த்துரை வழங்கினார்.

ஐப்சோவின் பொதுச் செயலாளர் பல்லப்சென் குப்தா முன்வைத்த வேலை அறிக்கை, பொதுச் செயலாளர் அருண்குமார் முன்வைத்த அரசியல் அறிக்கையின் மீதான விவாதத்தில், 21 மாநிலங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

தமிழ்நாட்டிலிருத்து மாநில துணைத் தலைவர் டாக்டர் ஏ.ஆர்.சாந்தி , மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.மிருதுளா ஆகியோர் விவாதத்தில் பங்கேற்றுப் பேசினர்.

விவாதங்களுக்குப் பிறகு அறிக்கை ஏகமனதாக ஏற்கப்பட்டது.

“பஞ்சாப்: நேற்று – இன்று – நாளை” என்ற தலைப்பில் 4.03.2023 அன்று மாலை கருத்தரங்கம் நடைபெற்றது.

கருத்தரங்கில் பஞ்சாப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் டாக்டர் அரவிந்த், குருநானக் பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற பேராசிரியர் ஜக்ரூப் சிங் ஷெக்கான், பட்டியாலா வேளாண்மை பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் அமர்ஜித் சிங் சித்து, பேராசிரியர் சீமா ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

ஐப்சோவின் கடமைகள் மற்றும் நோக்கங்கள் குறித்த சண்டிகர் பிரகடனம் ஏகமனதாக ஏற்கப்பட்டது.

இம்மாநாட்டில் 250 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர். தமிழ்நாட்டிலிருந்து 24 பிரதிநிதிகளும், 3 பார்வையாளர்களும் கலந்து கொண்டனர்.

4 மற்றும் 5 ஆம் தேதி மாலை கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

மாநாட்டில் 133 பேர் கொண்ட தேசிய பொதுக் குழுவும் 51 பேர் கொண்ட நிர்வாகக் குழுவும் 21 புதிய நிர்வாகிகளும், 10 பேர் கொண்ட ஆலோசனைக் குழுவும் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டன. இந்த எண்ணிக்கை தேவைக்கு ஏற்ப அதிகரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

பல்லப் சென்குப்தா, நிலோபர் பாசு, யாதவ் ரெட்டி ஆகியோர் அடங்கிய தலைமைக் குழுவும், ஹர்சந் சிங் மற்றும் அருண்குமார் அடங்கிய மூன்று பொதுச் செயலாளர்களும் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டனர்.

தமிழ்நாட்டிலிருந்து, டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத், பி.செந்தில்குமார், டாக்டர் ஏ.ஆர்.சாந்தி, சி.பாலச்சந்திரன், ஆர்.மணிமோகன், ஏ. ஆறுமுகநயினார், கே.சி.கோபிக்குமார், டி.செந்தில் குமார், ஆர். ராஜேந்திரன், எஸ்.மிருதுளா ஆகிய 10 பேர் பொதுக்குழுவுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத், ஏ. ஆறுமுகநயினார், டாக்டர் பி. செந்தில்குமார், டாக்டர் ஏ.ஆர்.சாந்தி, சி.பாலச்சந்திரன், கே.சி.கோபிக் குமார், டி.செந்தில் குமார் ஆகிய 7 பேர் நிர்வாகக் குழு உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டனர்.

அகில இந்திய துணைத்தலைவராக டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்,
இணைச் செயலாளராக ஏ. ஆறுமுகநயினார் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கியூபா ஆதரவு ஒருமைப்பாட்டை வலுப்படுத்துவது, பாலஸ்தீன மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கான ஆதரவு இயக்கங்களை அதிகப்படுத்துவது, ரஷ்ய-உக்ரைன் போரை உடனடியாக முடிவுக்கு கொண்டு வருவது, ரஷ்ய உக்ரைன் பிரச்சனைகளுக்கு பேச்சுவார்த்தைகள் மூலம் அரசியல் தீர்வு காண்பது, நேட்டோ உள்ளிட்ட அனைத்து ராணுவக் கூட்டணிகளும் கலைக்கப்பட வேண்டும், இந்திய அரசியல் சட்டத்தின் மாண்புகள் காக்கப்பட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button