இந்தியா

முறைசாரா தொழிலாளர்களில் தலித் – பழங்குடி மக்களே அதிகம்!

புதுதில்லி, நவ. 19 – நாடு முழுவதுமுள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களுக்காக ஒன்றிய அரசால் ஆரம்பிக்கப்பட்ட தகவல் தளம்தான் ‘இ-ஷ்ரம்’ (E-Shram) ஆகும். அமைப்புசாரா தொழி லாளர்களை ஒரே குடையின்கீழ் கொண்டுவந்து, சமூக நலத்திட்ட உதவி களை அவர்களுக்கு நேரடியாகவே வழங்குகிறோம் என்ற பெயரில் இந்த தளம் துவங்கப்பட்டது. தொழிலாளர்களுக்கு வேலை தேடுவதற்கான தளமாகவும் ‘இ-ஷ்ரம்’ தளத்தை, தொழிலாளர் அமைச்சகம் முன்மொழிந்துள்ளது. இதன்படி ‘இ-ஷ்ரம்’ தளத்தில் 7.86 கோடிக்கும் அதிகமானோர் தங்களை ஆதார் அடையாளத்துடன் இணைத்துள்ள நிலையில், இவ்வாறு இணைத்துக் கொண்டவர்களில் 40.5 சதவிகிதம் பேர் இதர பிற்படுத்தப் பட்ட வகுப்பினராகவும் (ஓபிசி), 27.4 சதவிகிதம் பேர் பொதுப் பிரிவினராக வும், 23.7 சதவிகிதம் பேர் பட்டியல் வகுப்பினராகவும் (எஸ்சி), 8.3 சதவிகிதம் பேர் பழங்குடியினராகவும் இருப்பது தெரியவந்துள்ளது. 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நாட்டில் பட்டியல் வகுப்பினரின் மக்கள் தொகை 16.2 சதவிகிதமாகவும், பழங்குடியின ரின் மக்கள்தொகை 8.2 சதவிகித மாகவும் இருந்த நிலையில், ‘இ-ஷ்ரம்’ தளத்தில் பதிவு செய்த பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியினரின் எண்ணிக்கை, அவர்களின் மக்கள் தொகை விகிதத்தைக் காட்டிலும் அதிகமாக உள்ளது.

இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் மக்கள் தொகை கணக்கெடுப்பில் விவரிக்கப்படவில்லை என்றாலும், 2007-ஆம் ஆண்டு தேசிய மாதிரி ஆய்வு அமைப்பு (NSSO) நடத்திய கணக்கெடுப்பில் ஓபிசி பிரிவினரின் மக்கள்தொகைப் பங்கு 40.9 சத விகிதம் என்று கூறப்பட்டிருந்தது. பொதுப் பிரிவினர் சுமார் 34 சத விகிதமாக இருந்தனர். ஆனால், ‘இ-ஷ்ரம்’ தளத்தில் இதர பிற்படுத்தப்பட்ட தொழிலாளர்கள் 40.5 சதவிகிதம் என்ற அளவிலும், பொதுப்பிரிவினர் அவர்களின் மக்கள் தொகை விகிதத்தைக் காட்டிலும் குறை வாக 27.4 சதவிகிதம் என்ற அள விலும் தங்களைப் பதிவுசெய்து கொண்டுள்ளனர். தொழில் வாரியான தரவுகளைப் பொறுத்தவரை விவசாயத் துறை யில் அதிகபட்சமாக 53.6 சதவிகி தம் பேரும், அதைத் தொடர்ந்து, கட்டு மானப் பிரிவில் 12.2 சதவிகிதம் மற்றும் வீடு மற்றும் வீட்டுப் பணி யாளர்கள் பிரிவில் 8.71 சதவிகிதம் பேரும் தங்களை உட்படுத்திக் கொண்டுள்ளனர்.

விவசாயத்தைப் பொறுத்தரை, மேற்கு வங்கம் 13.38 சதவிகிதம் அல்லது 1.05 கோடி பதிவுகளுடன் முன்னணியில் உள்ளது. இதையடுத்து, ஒடிசா 82.6 லட்சம் (10.5 சதவிகிதம்) பதிவுகளுடனும், உத்தரப் பிரதேசம் 71.9 லட்சம் (9.15 சதவிகிதம்) பதிவுகளுடனும், பீகார் 44.9 லட்சம் (5.71 சதவிகிதம்) பதிவுகளுடனும், ஜார்க்கண்ட் 23.82 லட்சம் (3.03 சத விகிதம்) பதிவுகளுடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. கட்டுமானத் துறையிலும், மேற்கு வங்கம் 17.03 லட்சம் பதிவுகளு டன் முன்னணியில் உள்ளது. இதை யடுத்து, உத்தரப் பிரதேசம் (14.95 லட்சம்), பீகார் (13.13 லட்சம்) மற்றும் ஒடிசா (12.04 லட்சம்) மாநிலங்கள் உள்ளன.

‘வீடு மற்றும் வீட்டு வேலை யாட்கள்’ என்ற தொழில் பிரிவில் 68.47 இலட்சம் என்ற அளவில் மூன்றா வது மிக அதிகப் பதிவுகள் இடம்பெற்று ள்ளன. இதில் வீட்டு சமையல் வேலை செய்பவர்கள் (56.02 லட்சம்), துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் (12.45 லட்சம்) அதிக பங்கைக் கொண்டுள்ளனர். உத்தரப் பிரதேசத்தில் வீடு மற்றும் வீட்டுப் பணியாளர்களுக்கான பதிவுகளில் அதிகபட்சமாக 21.63 லட்சமும், மேற்கு வங்கத்தில் 14.29 லட்சமும், பீகாரில் 13 லட்சமும் பதிவாகியுள்ளன. இந்த மொத்த பதிவுகளில், பெண் தொழிலாளர்கள் 51.61 சதவிகிதமாக உள்ளனர். மொத்த பதிவுகளில் 61 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் 18 முதல் 40 வயதுக்கு உட்பட்ட தொழி லாளர்களால் பதிவு செய்யப்பட்டுள் ளது. மொத்த பதிவுகளில் 86.33 சத விகிதம் பேர் வங்கி கணக்குகளை இணைத்துள்ளனர்.

அதேபோல ‘இ-ஷ்ரம்’ தளத்தில் பதிவு செய்தவர்களில் 92 சதவிகிதம் பேர், தங்களின் மாத வருமானம் ரூ. 10 ஆயிரம் மற்றும் அதற்கும் குறைவு என்று தெரிவித்துள்ளனர். 6 சதவிகிதம் பேர் மட்டும் ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 15 ஆயிரத்திற்கு இடைப்பட்ட வருமானம் கொண்டவர்களாக கூறியுள்ளனர். 1 சதவிகிதத்தினர் ரூ. 15 ஆயிரம் முதல் 18 ஆயிரத்திற்கு இடைப்பட்ட வருமானமும், 0.5 சத விகிதத்தினர் ரூ. 18 ஆயிரம் முதல் ரூ. 21 ஆயிரத்திற்கு இடைப்பட்ட வரு மானம் உள்ளவர்கள் என்றும் குறிப் பிட்டுள்ளனர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button