தமிழகம்

மீனா சுவாமிநாதன் மறைவு – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்

வேளாண் விஞ்ஞானி முனைவர் எம்.எஸ்.சுவாமிநாதனின் வாழ்விணையர் திருமதி.மீனா சுவாமிநாதன் (88) நேற்று (14.03.2022) சென்னையில் காலமானார் என்பதை அறிந்து வேதனையுற்றோம்.

திருமதி மீனா சுவாமிநாதன் சமூக செயல்பாட்டாளர். குறிப்பாக, குழந்தைகளின் கல்வி மேம்பாட்டில் அக்கறை காட்டி முனைப்பாக செயலாற்றியவர். கல்வி தொடர்பாக ஒன்றிய அரசின் பல்வேறு வாரியங்களில் உறுப்பினராகவும், சில அமைப்புகளின் தலைவராகவும் பணியாற்றி சிறப்பான பங்களிப்பு செலுத்தியவர். பாலின சமத்துவம் தொடர்பான ஆய்வுகளையும், நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வந்த அறிவார்ந்த தாயை இழந்து விட்டோம்.

அன்னாரின் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. அவரைப் பிரிந்து வாடும் அவரது கணவர் முனைவர் எம்.எஸ்.சுவாமிநாதன் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறது

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button