கட்டுரைகள்

இயக்கம் வளர்த்த தலைவன் பி.சி.ஜோசி

ஆர்.பாலச்சந்திரன்

இயக்கம் வளர்த்த தலைவன் பி.சி.ஜோசி
பி.சி.ஜோசி என்று அன்புடன் அழைக்கப்படும் தோழர் பூரணச்சந்திர ஜோஷி அவர்கள் உத்திரப் பிரதேசத்தில் அல்மோரா என்னுமிடத்தில் 1907ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ம் நாள் பிறந்தார். பல்கலைக் கழகத்தில் வழக்கறிஞர் கல்விக்கான எல்.எல்.பி வகுப்பில் சேர்ந்து பயின்றார். பின்னர் பொதுவுடமை இயக்கத் தொடர்பு காரணமாகக் கைது செய்யப்பட்டார். சிறையிலிருந்தே தேர்வு எழுதி வெற்றிபெற்றார்.
ருஷ்யப் புரட்சியின் தாக்கம் பி.சி.ஜோஷியையும் ஆட்கொண்டது..மார்க்ஸீயம் மற்றும் கம்யூனிஸக் கொள்கைகள் மேல் ஆர்வம் கொண்டார். கம்யூனிஸ்ட் ஊழியராக மலர்ந்தார். கம்யூனிஸ இயக்கம் வேகமாக வளர்வதைக் கண்ட ஆங்கிலேய அரசு அதை முலையிலேயே கிள்ளிஎறிய முற்பட்டது. முஸாபர் அஹமது, எஸ்.ஏ. டாங்கே, எஸ்.வி.காட்டே, எஸ்.எஸ்.மிராஜ்கர், பி.சி.ஜோஷி ஆகியோர் உள்ளிட்ட 31 கம்யூனிஸ்ட்களைக் கைது செய்து ஒரு சதி வழக்கு தொடங்கியது.. இந்த சதிவழக்கின் பெயரே மீரட் சதி வழக்கு ஆகும்.
மீரட் சிறைச்சாலையில் இருந்தபோது மார்க்ஸீய நூல்கள் அனைத்தையும் படிக்கும் வாய்ப்பு ஜோஷிக்குக் கிடைத்தது. 1934ஆம் ஆண்டு கட்சி சட்டவிரோதமாக்கப்பட்டது. 1935ஆம் ஆண்டு ஜோஷி விடுதலை செய்யப்பட்டு பணிகளைத்தொடர்ந்தார். தலைமறைவாக இருந்த கம்யூனிஸ்ட்கட்சி 1936ஆம் ஆண்டு பி.சி ஜோஷியை பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுத்தது. அப்போது அவருக்கு வயது 28. பி.சி.ஜோஷி கட்சியைக் கட்டுவதில் தனது அனைத்து ஆற்றல்களையும் பயன்படுத்தினார்.
1937ஆம் ஆண்டுமுதல்1939 வரைப்பட்ட குறுகிய மூன்றாண்டு காலத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாபெரும் சக்தியாகத் தோன்றியது.
1943ஆம் ஆண்டு.பம்பாயில் நடைபெற்ற மகா நாட்டில் ஜோஷி மீண்டும் பொதுச் செயலா ளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பம்பாய் மகாநாட்டின் சமயம் அவரது திருமணம் நடந்தது. சிட்டகாங் வீராங்கனை தோழியர் ‘கல்பனாதத்’தை திருமணம் செய்து கொண் டார்.
1943ஆம் ஆண்டு வங்காளத்தில் வரலாறு காணாத பஞ்சம் ஏற்பட்டு லட்சக்கணக்கானோர் அனா தைகளாக மடிந்தனர். இச்செய்தி அறிந்ததும் ஜோஷி அங்கேசென்று நிவாரணப் பணிகள் மேற்கொண்டார்.
1946இல் நடைபெற்ற கடற்படை எழுச்சிக்கு ஆதரவாக மக்களைத்திரட்டிப் போராடியது கம்யூனிஸ்ட் கட்சி. பம்பாயில் கடற்படை வீரர்களுடன் பல் லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் சேர்ந்து அணிவகுப்பு நடத்தினர். பிரிட்டீஷார் கடும் அடக்கு முறையை ஏவினர். சுமார் 600பேர் கொல்லப்பட்டனர்.

கடற்படை வீரர்கள் தங்கள் கப்பல்களில் செங்கொடி மற்றும் காங்கிரஸ், முஸ்லீம் லீக் கொடிகளை ஏற்றிப் போராடியது ஆங் கிலேய ஆட்சியாளர்களுக்கு பெரும் திகிலை அளித்தது. இது இந்திய விடுதலையை விரைவுபடுத்தியது. 1945க்குப்பின் சுதந்திரம் அடைந்த காலம் வரை கட்சியின் செயல்பாடுகள் எழுச்சிமிக்கதாய் இருந்தது. தெபாகா விவசாயிகள் போராட்டம், புன்னப்புரா வயலாறு போராட்டம், கப்பற்படை எழுச்சி. தெலுங் கானாப் போராட்டம் ஆகியவை அனைத்தும் இக் காலகட்டத்தில் நிகழ்ந்தவை.
இந்தியா விடுதலை அடைந்தபின் 1948 மார்ச் மாதம் கல்கத்தாவில் கம்யுனிஸ்ட் கட்சியின் 2வது மகாநாடு நடை பெற்றது. அதில் பி.சி. ஜோஷி பொதுச்செயலாளர் பதவியிலிருந்து அகற்றப்பட்டார்.
பி.டி.ரணதிவே பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். கல்கத்தா கட்சிக் காங்கிரஸ் மக்கள் ஆயுதப் புரட்சிக்குத் தயாராகி விட்டனர் என்ற தவறான நிர்ணயிப்பை மேற்கொண்டது.
இதைக் காரணமாகக் கொண்டு அரசாங்கம் கம்யுனிஸ்ட் கட்சியையும் அதன் வெகு ஜன இயக்கங்களையும் தடை செய்தது. ஏராளமானோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கட்சியின் அதிதிவீரத் தலைமை. ஜோஷியை கட்சியைவிட்டு நீக்கியது.
ஜோஷி ஒரு கம்யுனிஸ்ட்டுக்கே உரிய கட்டுப்பாடுடன் பொறுமைகாத்தார். தலைமையின் அதிதிவீரப்போக்கு கட்சியை யும் அதன் வெகுஜன இயக்கங்களையும் வெகுவாகப் பாதித்தது. இரண்டாண்டுகளுக்குப் பின் பி.டி.ரணதிவே பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
1951ஆம் ஆண்டில் கல்கத்தாவில் நடைபெற்ற சிறப்பு மகாநாட்டில் தோழர் அஜாய் கோஷ் பொதுச்செயலாளர் ஆனார். ஜோஷி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ரத்து செய்யப்பட்டன.
1955 பாலக்காடு 4வது மகாநாட்டில் மீண்டும் மத்தியக் குழுவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மத்தியக் கட்சிப் பத்திரிக்கையின் ஆசிரியராகப் பணியாற் றினார். கம்யூனிஸ்ட் கட்சியில் பத்திரிக்கைத்துறையை உருவாக் கியவர் இவரே சிறந்த ஆய்வாளராக விளங்கினார்.
மிகச்சிறப்பான முறையில் இயக்கத்தைக் கட்டிக்காத்த மாபெ ரும் தோழர் பி.சி.ஜோஷி இதய நோயால் 1980ஆம் ஆண்டு நவம் பர் மாதம் 9ஆம் நாள் தனது 78ஆம் வயதில் இயற்கை எய்தினார்.
அவரது நினைவு நாளான நவ.9 அவரை நினைவு கூர்வோம்.

ஆர்.பாலச்சந்திரன்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button